Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் டாப் 10 சுத்தமான நகரங்கள்ல நம்ம திருச்சியும் இருக்கு! எத்தனாவது இடம் தெரியுமா?

இந்தியாவின் டாப் 10 சுத்தமான நகரங்கள்ல நம்ம திருச்சியும் இருக்கு! எத்தனாவது இடம் தெரியுமா?

இந்தியாவின் டாப் 10 சுத்தமான நகரங்கள்ல நம்ம திருச்சியும் இருக்கு! எத்தனாவது இடம் தெரியுமா?

இந்தியாவின் தூய்மையான நகங்கள் பட்டியல்ல இந்த வருசம் டாப் 10 இடங்கள புடிச்சிருக்குறந நகரங்கள பத்திதான் இந்த பதிவுல பாக்கப்போறோம். அதுலயும் நம்ம திருச்சி நகரம் இந்த பட்டியல்ல இடம் புடிச்சிருக்குறது திருச்சி வாசிங்க மட்டும் இல்லாம தமிழகத்துல இருந்து திருச்சி சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் மகிழ்ச்சியானதாக இருக்கும்னு நம்புறோம்.

Cover PC: IM3847

அதே நேரம் நம்ம ஊர்கள்லாம் எத்தனையாவது இடத்துல இருக்கு. அப்படிங்குறதையும் தெரிஞ்சிக்கவேண்டாமா? சரி வாங்க எவையெல்லாம் இந்த பட்டியல்ல இருக்குனு பாக்கலாம்.

1 இந்தூர்

பட்டியல்ல முதல் இடத்த புடிச்சிருக்குறது மத்தியபிரதேச மாநிலத்தின் இதயமான இந்தூர் நகரம்.

இந்த வருசத்தோட சிறந்த தூய்மையான நகரங்கள் வரிசையல முதல் இடம் இந்தூருக்குதான்.

மத்தியப் பிரதேசத்தின் மாளவ பீடபூமியில் உள்ள இந்தூர் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அமைவிடம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பார்வையிடங்கள் என்ற அனைத்து சிறப்புகளும் நிறைந்த இந்தூர், மத்தியப் பிரதேசத்தின் இதயம் என்று மிகவும் பொருத்தமான பெயரைப் பெற்றுள்ள இடமாகும். இந்தூருக்கு சுற்றுலா வருபவர்கள் சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும் நதிகள், அமைதியான ஏரிகள் மற்றும் உயர்ந்து கிடக்கும் பீடபூமிகள் ஆகியவற்றின் திணறடிக்கும் காட்சிகளை காண முடியும்.

இந்தூரைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு :

2 போபால்

பட்டியல்ல இரண்டாவது இடம் பிடிச்சிருக்குறது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலை நகரான போபால்தான். மத்திய பிரதேச அரச எடுத்துக்கிட்ட சீரிய முயற்சி காரணமா இந்த மாநிலத்துல இரண்டாவது நகரமா தூய்மை நகரான போபால் இடம் பெற்றிருக்கு.

இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்கும் போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. முந்தைய போபால் மாநிலத்தின் தலைநகரமாக இருந்த இன்றைய போபால், ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சுத்தமான மற்றும் செம்மையான நகரம் இந்தியாவிலேயே மிகவும் பசுமையான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

மேலும் தகவல்களுக்கு :

3 சண்டிகர்

பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகராக இருக்கும் சண்டிகர் தான் இந்த பட்டியல்ல மூனாவது இடத்த பெற்றிருக்கு.

வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான அடையாளத்தை கொண்டுள்ளது. சண்டி எனும் ஹிந்து கடவுள் வீற்றிருக்கும் ஸ்தலம் என்பதால் இதற்கு ‘சண்டிகர்' எனும் பெயர் வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட பெருநகரம் எனும் பெருமையும் இதற்குண்டு.

மேலும் தகவல்களுக்கு:

4 விசாகப்பட்டினம்

இந்த பட்டியல்ல நான்காவது இடத்தை பெற்றிருக்கு விசாகப்பட்டினம். ஆந்திர மாநிலத்தின் கடலோர நகரமான இது 2019ம் வருடத்துக்கான தூய்மையான நகரங்கள்ல ஒன்னா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு.

வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டணம் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். அடிப்படையில் ஒரு தொழில் நகரமான இந்த விசாகப்பட்டணம் தனது ரம்மியமான கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைகள், பசுமையான இயற்கைக்காட்சிகள் போன்றவற்றின் மூலம் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாகவும் மாறியிருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு:

5 சூரத்

இந்தியாவின் வைர நகரமான சூரத் தூய்மையான நகரங்கள் பட்டியல்லயும் இடம் பெற்றிருக்கு. இந்த பட்டியல்ல 5 வது இடத்தை பெற்றிருக்கும் சூரத் நகரம் பல சுற்றுலா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் தென்-மேற்குப் பகுதியில் உள்ள சூரத் அதன் ஜவுளிகள் மற்றும் வைரங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இவை மட்டுமல்லாமல், இந்நகரம் அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பெருமைகளுக்காக மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

மேலும் தகவல்களுக்கு:

6 மைசூர்

இந்த பட்டியலில் மைசூர் 6 வது இடத்தைப் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கும் தோட்டங்களும் தொன்மை வாய்ந்த மாளிகைகளும், குளுமையான நிழற் சாலைகளும் இங்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.

மேலும் தகவல்களுக்கு:

7 திருச்சி


தூய்மையான இந்திய நகரங்கள் பட்டியல்ல நம்ம திருச்சி 7 வது இடத்துல இருக்கு. தமிழகத்துல முதல் பத்து இடங்கள்ல இருக்குற ஒரே இடம் இதுதான். அதே நேரத்துல பொள்ளாச்சி, நாகர்கோவில் போன்ற இடங்களும் முன்னாடி இருந்ததுக்கு நல்ல தூய்மையான நிலையை அடைஞ்சிருக்குறதா சொல்றாங்க.


திருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி தெற்கு இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாகவும் நகர்புற குழுமமாகவும் இருக்கிறது. இடத்தின் பெயர் தோற்றம் பற்றி பல்வேறு சிந்தனைகள் உலா வருகின்றன. திருச்சிராப்பள்ளி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான ‘த்ரிஷிராபுரம்' என்ற சொல்லில் இருந்து வருகிறது.

மேலும் தகவல்களுக்கு:

8 வதோதரா

வதோதரா நகரம்தான் தூய்மை இந்தியா நகரங்கள் பட்டியல்ல எட்டாவது இடத்த பெற்றிருக்கு. இங்க பல அழகிய சுற்றுலாத் தளங்களும் இருக்கு

முந்தைய கெய்க்வாட் மாநிலத்தின் தலைநகரமான பரோடா அல்லது வதோதரா, விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந்துள்ளது. விஸ்வாமித்ரி நதிக்கரையைச் சுற்றிலும் கிடைத்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான தொல்பொருள் சான்றுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களால், அகோலா மரங்கள் வளரும் இந்த அங்கோட்டா என்ற சிறு குடியேற்ற பகுதி இன்று அகோடா என்று அழைக்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு:

9 திருப்பதி


உலகிலேயே பணக்கார சாமினு நம்பப்படுற ஏழுமலையான் குடியிருக்குற திருப்பதிதான் 9 வது இடத்துல இருக்குற தூய்மையான நகரம்.

சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் இந்த திருப்பதி நகரம் ஒரு அதிமுக்கியமான, ஆன்மீக பாரம்பரிய நகரமாக இந்தியாவில் புகழ் பெற்று விளங்குகிறது. உலகப்பிரசித்தி பெற்றுள்ள வெங்கடாசலபதி கோயில் இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருமலை எனப்படும் மலையுச்சியில் அமைந்துள்ளது. வேறெங்கும் காண முடியாத வகையில் ஏராளமான பக்தர்களும் பயணிகளும் விஜயம் செய்யும் பரபரப்பான கோயிலாக இது சர்வதேச அளவில் அறியப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு:

10 மங்களூர்


கர்நாடக மாநிலம் மங்களூர் இந்த பட்டியல்ல 10 இடத்த பெற்று இந்தியாவின் தூய்மையான நகரங்கள்ல ஒன்னா இருக்கு.

கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது. மங்களாதேவி தெய்வத்தின் பெயரில் அமைந்திருக்கும் இந்த மங்களூர் நகரம் பல காலமாக ஓய்வில்லாத ஒரு துறைமுக நகரமாகவே விளங்கி வந்திருக்கிறது.

மேலும் தகவல்களுக்கு:

Read more about: tamil nadu tamil nadu tourism
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X