Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் அபாகயரமான ஐந்து ரயில் பாலங்கள்!

இந்தியாவின் அபாகயரமான ஐந்து ரயில் பாலங்கள்!

ரயில் பயணங்கள் என்றாலே மறக்க முடியாத அனுபவங்களை பதித்து விடும். அதிலும், ஆபத்து நிறைந்த சில வழித்தடங்கள் புதுவித அனுபவத்தையும், நீங்காத பயத்தையும் நம் மனதில் இடம்பெறச் செய்துவிடும்.

விரைவான போக்குவரத்திற்கு பாலங்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இருப்பினும், பாலங்கள் அமைக்கப்படும் விதம், சூழல் போன்றவை சில சமயங்களில் அபாயகரமானதாக மாற்றிவிடுகின்றன. அந்த விதத்தில், மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய ரயில் பயணங்களை அபாயகரமானதாக பார்க்கச் செய்யும் நம் நாட்டில் உள்ள ஐந்து ரயில் தடங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

ராயகடா- கோரபுட்

ராயகடா- கோரபுட்


ஒடிஷா மாநிலம், ராயகடா- கோராபுட் இடையிலான ரயில் வழித்தடம் இயற்கை எழில் கொஞ்சும் வழித்தடமாக குறிப்பிடப்பட்டாலும், இதிலுள்ள பாலங்கள் மிகவும் அபாயகரமானதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த வழித்தடத்தில் நிலச்சரிவு ஆபத்தும் அதிகம் என்பதே இதற்கு காரணம். இந்த வழித்தடத்தில் உள்ள ஒரு அபாயகரமான பாலத்தை படத்தில் காணலாம்.

கங்கரா வாலி

கங்கரா வாலி


பஞ்சாப் மாநிலம், பதான்கோட் நகரையும், இமாச்சலப்பிரதேச மாநிலம், ஜோகிந்தர் நகரையும் இணைக்கும் இந்த ரயில் வழித்தடத்தில் பல அபாயகரமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல பாலங்களில் தடுப்பு இல்லாமல் வளைந்து நெளிந்து செல்லும் ரயில் பயணம் அச்சமூட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

லும்திங் பதர்பூர்

லும்திங் பதர்பூர்

அசாம் மாநிலத்திலுள்ள லும்திங் பதர்பூர் மலைப்பகுதி ரயில் வழித்தடம் மிகுந்த ஆபத்துக்களை கடந்தே பயணிக்கிறது. இந்த வழித்தடமும் இந்தியாவின் மிகவும் ஆபத்தான ரயில் வழித்தடமாகவும், இதிலுள்ள பாலங்கள் மிகவும் அபாயகரமானதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சக்லேஷ்பூர்- சுப்ரமண்யா காட்

சக்லேஷ்பூர்- சுப்ரமண்யா காட்


கர்நாடக மாநிலம், மங்களூர்- ஹாசன் இடையிலான ரயில் வழித்தடத்தில் சக்லேஷ்பூர்-சுப்ரமண்யா மலைப்பகுதியிலுள்ள ரயில் பாலமும் மிகவும் அபாயகரமானதாகவே குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த ரயில் வழித்தடமும் நிலச்சரிவு ஆபத்தில் அடிக்கடி சிக்குண்டு விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Shameersh

பான்வெல்

பான்வெல்


மஹாராஷ்டிர மாநிலம், பான்வெல் ரயில் பாலமும் மிகவும் அபாயகரமானதாகவே குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான இதற்கு 1995ல் சிறந்த கான்கிரீட் கட்டுமானம் கொண்ட வடிவமைப்பாக சிறப்பிக்கப்பட்டது. இந்த பாலத்தில் செல்லும்போது, ரயில் பயணிகள் அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வை பெறுவர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X