Search
  • Follow NativePlanet
Share
» »தில் இருக்குறவங்க மட்டும் இந்த சாலைகள டிரை பண்ணுங்க..!

தில் இருக்குறவங்க மட்டும் இந்த சாலைகள டிரை பண்ணுங்க..!

கொலை செய்யப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் பேயாக, ஆவியாக உலா வரும் அமானுஷ்யம் நிறைந்த சாலைகளில் பயணிச்சு பாருங்க ?

இன்றைய வளர்ச்சியடைந்த நாகரீகக் காலத்தில் கூட நம்முடனேயே சக ஒருவராக இருக்கும் சிலருக்கு பேய் பிடிப்பதாக கூறுவதுண்டு. இன்னும் சிலர் ஆவியுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். இன்றும் பில்லி, சூனியம், செய்வினை ஆகியவற்றிற்கு உள்ளாகி மந்திரவாதிகளை அழைத்து பூஜைகள் செய்யப்படுவதை நாம் அறிவோம். பொதுவெளியில் பேயும் இல்லை, பிசாசும் இல்லைன்னு கெத்தாக பேசினாலும் தனக்கென வரும்போது மட்டும் ஜாதகம், ஜோதிடம் உள்ளிட்ட பல கணிப்புகளைத் தேடித்தானே செல்கிறார்கள். பேய், பிசாசு, ஆவிகளை அச்சத்தால் மக்கள் நம்புகிறார்கள். பூசாரிகளைக் கொண்டு அவற்றைவிரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே பேயாக, ஆவியாக உலவுவதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. அப்படி, அன்றாடம் சாலையில் உலா வரும் அமானுஷ்யம் மக்களை அச்சுருத்தும் சம்பவம் குறித்து உங்களுக்குத் தெரியுமா ?. பேய் இருப்பதாக நம்பப்படும் நம் நாட்டில் உள்ள சில சாலைகளில் பயணிப்போம்.

காசாரா காட்

காசாரா காட்


மும்பையில் இருந்து நாசிக் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதிதான் இந்த காசாரா காட். சாலையின் இருபுறமும் வனப்பகுதியாக இக்காட்டில் தான் இரவு நேரங்களில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் இரவு நேரங்களில் தலையின்று ஒரு உருவம் அவ்வப்போது வாகனத்தின் முன் வந்து தோன்றுவதாகவும், சில வருடங்களுக்கு முன் இப்பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்மணியே ஆவியாக சுற்றிவருவதாகவும் நம்பப்படுகிறது.

826 PARANORMAL

தேசிய நெடுஞ்சாலை 209

தேசிய நெடுஞ்சாலை 209


தமிழகத்தில் சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட வசப்பகுதியின் ஊடாக செல்லும் சாலையே இந்த தேசிய நெடுஞ்சாலை 209. NH 209 என்றாலே சுற்றுவட்டாரத்தினர் கொலைநடங்கும் அளவிற்கு இப்பகுதியில் மாலை நேரத்திற்குமேல் பல அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்வதாகவும், உள்ளூர் மக்கள் சூரியன் மறைந்த பின்பு இச்சாலை வழியே செல்வதை புறக்கணிக்கின்றனர்.

Liftarn

மாத் தீவுச் சாலை

மாத் தீவுச் சாலை


மும்பையில் அமைந்துள்ள மார்வ் அண்டு மாத் தீவுச் சாலை பெரும்பாலும் பகல் நேரங்களில் வாகனப் போக்குவரத்து நிறைந்து இருந்தாலும், இரவு நேரங்களில் அச்சாலையை கடக்கவே பலரும் பயந்து நடுங்குகின்றனர். ஒருமுறை இப்பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணே பேயாக வந்து பயணிகளை பயமுருத்துவதாக அதனை உணர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

Mike

டெல்லி கண்டோன்மென்ட் சாலை

டெல்லி கண்டோன்மென்ட் சாலை


டெல்லி கண்டோன்மென்ட் சாலையில் இரவு நேரங்களில் பயணிக்கும் போது எந்தக் காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்தக்கூடாதாம். பெண் போன்ற ஓர் அமானுஷ்ய உருவம் திடீரென தோன்றி அச்சுருத்தும் என்பதால் மனதை திடமாக வைத்துக் கொண்டே இச்சாலையில் பயணிக்க அறிவுருத்தப்படுகிறது. அவ்வளவு பயத்த வச்சுட்டு எதுக்கு இந்த சாலையில போகனும்.

Anubrata29

இகோர்சம் சாலை

இகோர்சம் சாலை


இளைஞர்களின் கனவு மாநிலமாக கோவால தாங்க இந்த இகோர்சம் இருக்கு. நாட்டிலேயே மர்மங்கள் நிறைந்த சாலையில் இந்த சாலை முக்கிய பங்கு வகிக்குதுன்னா பாருங்களேன். ஆனா இது மத்த பேய்ங்க மாதிரியெல்லாம் இல்லை. மதியம் 2 முதல் 3 வரை தனது ஆட்டத்தைக் காட்டுமாம். அதாவது, இந்த நேரத்தில் இகோர்சம் சாலையைக் கடந்தால் அம்புட்டுதான்.

Ken Lund

தேசிய நெடுஞ்சாலை 33

தேசிய நெடுஞ்சாலை 33


ஜாம்ஜெட்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 33 போக்குவரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும், விபத்திலும் தனக்கென தனி இடத்தையே பிடித்துள்ளது. அட ஆமாங்க, இச்சாலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் விபத்துக்கள் நடந்து பலர் உயிரிழக்கிறார்கள். ஒரு முறை அந்த சாலையில நடந்து போன ஒருவரே திடீருன்னு போய் சேந்துட்டாருன்னா பாருங்க. ஊருக்கு இல்லைங்க, ஊர விட்டே.!

Shahbaz26

ப்ளு கிராஸ் ரோடு

ப்ளு கிராஸ் ரோடு


ஊருல ஒரு இடம் விடாம சுத்துர ஆட்டோக் காரங்களே பேரக் கேட்டா நடங்க வைக்கக் கூடிய இடந்தாங்க சென்னை ப்ளு கிராஸ் ரோடு. பகல்ல என்னதான் பிசியான ஏரியாவாக இருந்தாலும், இரவு நேரத்துல கொஞ்சம் திகிலாத்தான் இருக்கும். நெடுக உள்ள சாலையும், தென்னைக் கீற்றின் உரசல் காற்றும் நம்ம டவுசர நனைய வச்சுடும். நம்பாட்டி இன்னைக்கு ராத்திரியே இந்த ரோட்டுல தனியா ஒரு ரைடு போய் பாருங்க.

Simply CVR

முலுண்டு ஜேஜே சாலை

முலுண்டு ஜேஜே சாலை


மகாராஷ்டிராவில் உள்ள ஜான்சன் அன் ஜான்சன் சாலையே அப்பகுதியினரால் ஜேஜே சாலை அல்லது கோஸ்ட் ரோடு என செல்லமாக அழைக்கப்படுகிறது. காரணம், அங்கு மர்மமான முறையில் உலா வரும் பேயே. அதிலும் குறிப்பா, கறிசோடு கொண்டு போற பயணிகள் ரத்தம் கக்கத்தான் காரில் இருந்தே இறங்குராங்களாமா. ஏன்ன பேய் அவர்களைத் தாக்கி விடுவதாக நம்பப்படுகிறது. நான்-வெஜ் பேயா இருக்கும் போல...

Ken Lund

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X