Search
  • Follow NativePlanet
Share
» »2013-ல் அதிகமாக சுற்றிப்பார்க்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்!

2013-ல் அதிகமாக சுற்றிப்பார்க்கப்பட்ட சுற்றுலாத் தலங்கள்!

By

இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 5 மில்லியனுக்கும் மேலான வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளின் வந்து செல்கின்றனர்.

இதுபோக 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தியாவின் பல்வேறு சுற்றுலாப் பகுதிகளை சுற்றிப்பார்த்து வருகின்றனர்.

அதோடு சுற்றுலாத்துறை, இந்தியாவின் பெரிய சேவைத் துறையாகவும், நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதமும் பங்களிக்கிறது.

ஆசியாவில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை ஈர்க்கும் நாடுகளில் இந்தியா 9-வது இடத்திலும், உலகின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளை கொண்டுள்ள நாடுகளாகவும் இந்திய திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் சென்ற ஆண்டான 2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகமாக பார்க்கப்பட்ட முதல் 10 இடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆக்ரா

ஆக்ரா

உலக சுற்றுலாப்பயணிகளை மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 2013-ல் அதிக மக்களால் சுற்றிப் பார்க்கப்பட்ட சுற்றுலாத் தலமாக ஆக்ரா திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான காதல் சின்னம் தாஜ் மஹால் ஆக்ராவில் இருப்பதுதான்.

ஆக்ராவின் சுற்றுலாப் பகுதிகள்

காஷ்மீர்

காஷ்மீர்

பூமியின் சுவர்க்கம் என்று புகழோடு அறியப்படும் காஷ்மீர் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்த்தால் நிரம்பி வழிகிறது. இதன் முக்கிய சுற்றுலாப்பகுதிகளாக தால் ஏரி, குல்மார்க் உள்ளிட்ட இடங்கள் அறியப்படுகின்றன.

காஷ்மீரின் சுற்றுலாப் பகுதிகள்

கோவா

கோவா

இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட கோவாவில் எப்போது பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் மொய்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

கோவாவின் சுற்றுலாப் பகுதிகள்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளில் முக்கால்வாசி பேர் சூரிய உதயத்தை பார்க்க வரும் கூட்டம்தான். இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என 3 சமுத்திரங்கள் சங்கமமாகும் இடத்தில் நின்று சூர்ய அஸ்த்தமனத்தையும், சூர்யோதத்தையும் கண்டு ரசிக்கும் அனுபவத்தை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்?!

கன்னியாகுமரியின் சுற்றுலாப் பகுதிகள்

ஜெய்ப்பூர் மற்றும் உதைபூர்

ஜெய்ப்பூர் மற்றும் உதைபூர்

பாலைவன பிரதேசமான ராஜஸ்தானின் சொலைவன பிரதேசங்களாக ஜெய்ப்பூர் மற்றும் உதைபூர் நகரங்கள் திகழ்கின்றன. அதாவது உலகம் முழுவதுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இந்த பாலைவன பிரதேசங்களையும் சோலைவனங்களாக மாற்றிவிடுகின்றனர்.

ராஜஸ்தானின் சுற்றுலாப் பகுதிகள்

கேரளா

கேரளா

கேரளாவின் படகு இல்லங்கள், மலைப்பிரதேசங்கள், கவின் கொஞ்சும் அருவிகள் எல்லாம் கேரளாவை எப்போதும் பரபரப்பான சுற்றுலாப் பகுதியாகவே திகழச் செய்துகொண்டிருக்கின்றன.

கேரளாவின் சுற்றுலாப் பகுதிகள்

டெல்லி

டெல்லி

இந்தியத் தலைநகர் டெல்லி சுற்றலாப் பயணிகளின் கூடாரமாகவே திகழ்ந்து வருகிறது. இங்குள்ள குதுப் மினார், தாமரைக் கோயில் போன்றவை உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன.

டெல்லியின் சுற்றுலாப் பகுதிகள்

டார்ஜீலிங்

டார்ஜீலிங்

ஹாலிவுட் மற்றும் திரைப்படங்களில் அதிகமாக இடம் பெற்றுள்ள இந்திய மலைநகரம் டார்ஜீலிங்தான். அதோடு இங்கு இயற்கை அழகை பார்த்து ரசிக்க வசதியாக இயக்கப்படும் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே உலகப்பிரசித்திபெற்றது.

டார்ஜீலிங்கின் சுற்றுலாப் பகுதிகள்

மைசூர்

மைசூர்

கர்நாடகாவின் கலாச்சார தலைநகராக அறியப்படும் மைசூர் நகரம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இதன் பிராதன சுற்றுலாத் தலமான மைசூர் அரண்மனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் அதிகமாக சுற்றிப்பார்க்கும் இடங்களில் ஒன்று.

மைசூரின் சுற்றுலாப் பகுதிகள்

அஜந்தா

அஜந்தா

அஜந்தா ஸ்தலத்தில் ஏறக்குறைய 30 குடைவறைக்கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் பௌத்தம், ஹிந்து, ஜைனம் ஆகிய மூன்று முக்கிய மரபுகள் குறித்த இயற்கை வண்ண ஓவியங்கள், சிற்பங்கள், கூரைப்பூச்சு ஓவியங்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X