Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் அபூர்வமான பாலைவனச் சோலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

இந்தியாவில் இருக்கும் அபூர்வமான பாலைவனச் சோலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மிக அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் செல்லும் இடமாக இருப்பது ராஜஸ்தான் மாநிலம் தான். இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்ற சிறப்புடைய இம்மாநிலத்தின் பெரும்பகுதி கடுமையான வெப்பம் தகிக்கும் பாலைவனமாக இருப்பது மிகப்பெரிய முரண். அப்படியிருந்தும் ராஜஸ்தானுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வரக்காரணம் இங்கே எங்கு காணினும் நிறைந்திருக்கும் கலாச்சார செழுமை தான்.

ராஜஸ்தான் முழுக்கவும் அக்காலத்தில் கற்பனைக்கும் அப்பாற்ப்பட்ட செல்வச்செழிப்புடன் வாழ்த்த அரசர்களின் மாட மாளிகைகள், அரண்மனைகள் போன்றவை இன்றும் அதன் போலிவு குன்றாமல் பாதுக்காக்கப்படுகின்றன. இவற்றை சென்று சுற்றிப்பார்ப்பதோடு மட்டுமில்லாமல் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டிருக்கும் சில அரண்மனைகளில் தங்கவும் செய்யலாம்.

மேலும் இங்குள்ள வறண்ட வனப்பகுதிகளில் 'சபாரி' பயணம் மேற்கொள்ளலாம், ராஜ உணவுகளை சுவைத்து மகிழலாம், பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் சந்தை திருவிழாக்களில் கலந்து கொண்டு விளையாடி மகிழலாம். எப்படி ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்திருக்கும் ராஜஸ்தானில் ஒரு மலை வாசஸ்தலமும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?. வாருங்கள் இந்தியாவின் ஒரே பாலைவனச்சோலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம்.

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷிரோஹி மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது 'மவுன்ட் அபு' எனப்படும் இந்த அபு பர்வத மலை.

கடல்மட்டத்தில் இருந்து 4,000 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலையின் மேல் ஏராளமான குளங்கள், அருவிகள் மற்றும் பசுமை காடுகள் போன்றவை நிறைந்திருக்கின்றன.

sluj78

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

இந்த அபு பர்வத மலையானது பழங்காலத்தில் அர்புடான்ச்சல் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த அர்புடான்ச்சல் என்பதுதான் காலப்போக்கில் 'அபு' என்று திரிந்திருக்கிறது.

புராணங்களில் இந்த மலையை பற்றிய ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.

Selmer van Alten

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

'அர்புடா' என்ற பாம்பு சிவ பெருமானின் வாகனமான நந்தியை ஒரு பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றியதாகவும் அந்த நிகழ்வு இந்த மலையில் நடந்ததால் நந்தியை காப்பாற்றிய பாம்பின் பெயரே இந்த மலைக்கு சூட்டப்பட்டதாகவும், அந்த 'அர்புடா' என்ற பெயரே அபு என திரிந்திதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

Andrea Kirkby

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

வெப்பம் மிகுந்த பாலைவனத்தை ஒட்டி அமைந்திருக்கும் இந்த மவுன்ட் அபு இந்தியாவில் இருக்கும் ஒரே பாலைவனச்சோலை என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கோடை காலத்தில் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிக்க அண்டை மாநிலமான குஜராத்தில் இருந்தும் ராஜஸ்தானுக்கு வருகை தரும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளும் இந்த மலைக்கு வருகின்றனர்.

Selmer van Alten

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

மவுன்ட் அபுவின் முக்கியமான சுற்றுலா அம்சமாக இருப்பது மவுன்ட் அபு வனவிலங்கு சரணாலயம் தான். 289 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பூங்காவினுள் பலவகையான அரிய வனவிலங்குகள் வசிக்கின்றன.

ஒரு காலத்தில் இந்த சரணாலயத்தினுள் சிங்கம், புலி போன்ற விலங்குகள் இருந்திருக்கின்றன. ஆனால் கட்டுப்பாடு இல்லாத வேட்டையாடுதலின் விளைவாக அவை முற்றிலும் அழிந்து போயிருக்கின்றன. தற்போது இந்த பூங்காவினுள் சாம்பார் மான்கள், புள்ளி மான்கள், காட்டுப்பூனைகள், கரடிகள், நரிகள், 250க்கும் மேற்ப்பட்ட பறவையினங்கள் போன்றவை வசித்து வருகின்றன.

Koshy Koshy

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

வனவிலங்கு சரணாலயத்தை தாண்டி இங்கிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலமாக திகழ்வது தில்வாரா ஜெயின் கோயில் ஆகும்.மவுண்ட் அபுவில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த தில்வாரா கோயில் கி.பி 11 - 13 ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக்குள் கட்டப்பட்டிருக்கிறது.

ஐந்து கோயில்களை உள்ளடக்கிய வளாகமான இந்த தில்வாரா கோயில் ஜைனர்களின் புனித ஸ்தலமாகவும் இருக்கிறது.

Rakhee

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

இந்தியாவில் மற்ற இடங்களில் இதுபோன்ற ஜெயின் கோயில்கள் நிறைய இருந்தாலும் அவையெல்லாம் இந்த கோயில்களில் இருக்கும் தூண்கள், மாடங்கள், கதவுகள் போன்றவற்றில் இருக்கும் அழகுக்கு எவ்வகையிலும் நிகராக முடியாது என சொல்லப்படுகிறது.

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

இந்த கோயிலில் இருக்கும் மத்திய மண்டபத்தின் மேற்கூரையில் பளிங்கு கற்களில் குடையப்பட்ட கல் ஆபரணங்கள் நம்மை நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும். மேலும் இந்த கோயிலில் பளிங்கு கல்லினால் குடையப்பட்ட 72 ஜைன மத தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் மற்றும் ஹச்திசாலா என்ற மண்டபத்தில் அவ்வளவு உயிர்ப்புடன் வடிக்கப்பட்ட 12 யானைகளின் சிற்பங்கள் போன்றவை உள்ளன.

உலகிலேயே மிக அழகான மற்றும் நுணுக்கமான பளிங்கு சிற்பங்கள் உள்ள கோயிலாக இது சொல்லப்படுகிறது.

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

இந்த தில்வாரா ஜெயின் கோயிலின் மூலவராக திகழும் ஜைன மதத்தை தோற்றுவித்தவராக நம்பப்படும்ஆதி நாதர் என்ற ரிஷப தேவ முனிவரின் சிலை.

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஜெயின் கோயிலுக்கு அடுத்தபடியாக பிரபலமான சுற்றுலா அம்சமாக இருப்பது இங்குள்ள நக்கி ஏரியில் நடக்கும் படகு சவாரி தான். மாலை நேரத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நக்கி ஏரியில் படகு சவாரி செய்வது ஏகாந்தமான அனுபவமாக இருக்கும்.

Koshy Koshy

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

இந்த நக்கி ஏரியை ஒட்டியே ஒரு விசித்திரமான வடிவில் பாறை ஒன்று இருக்கிறது. ஒரு தவளை தாவி குதிக்கவிருப்பதை போன்ற வடிவிலான இந்த பாறையை காணவும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

David Hamill

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

சன்செட் பாயிண்ட், டோட் ராக், சிட்டி ஆஃப் அபு ரோட், குரு ஷிகார் பீக்,ஆதார்தேவி கோயில், தூத் பாவ்ரி, ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில் மற்றும் ஆச்சால்கர் கோட்டை போன்ற இடங்களையும் மவுன்ட் அபுவில் நாம் நிச்சயம் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும்.

அடுத்த முறை ராஜஸ்தானுக்கு சுற்றுலா செல்கிறவர்கள் நிச்சயம் இந்த மவுன்ட் அபுவுக்கும் சென்றுவாருங்கள்.

Frank

மவுன்ட் அபு :

மவுன்ட் அபு :

அற்புதமான இந்த சுற்றுலாத்தலத்தை பற்றிய மேலும் பல பயனுள்ள தகவல்களையும், மவுன்ட் அபுவை எப்படி சென்றடைவது என்ற விவரத்தையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

-Reji

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X