Search
  • Follow NativePlanet
Share
» »வானமே எல்லை: மும்பை - லோனாவ்லா - புனே

வானமே எல்லை: மும்பை - லோனாவ்லா - புனே

சாலைப்பயணங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் மும்பை டு புனே பயணத்தை நிச்சயம் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அற்புதமான இயற்கை காட்சிகளை வழி நெடுகிலும் கண்டு ரசித்தபடியே எப்போதும் மெல்லிதாய் தூறும் சிறு சாரலின் ஊடாக பயணிப்பது அத்தனை குதுகலமாக இருக்கும்.

இந்தியாவின் சிறந்த சாலைப்பயணம் என்று சொல்லப்படும் லடாக் - லெஹ் சாலை பயணத்துக்கு இணையாக இந்த மும்பை புனே விரைவுப்பாதை பயணம் பயணப்பிரியர்களால் விரும்பப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குளுமையான மலைவாசதலங்களில் ஒன்றான லோனாவ்ளா இந்த பாதையில் அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும். வாருங்கள், கனவு உலகத்திற்கு அருகில் அழைத்துச்செல்லும் இந்த மும்பை - புனே பயணத்தை துவங்குவோம். கனவுகளுக்கு வானமே எல்லை.

யஷ்வந்த்ராவ் சவான் மும்பை புனே விரைவு பாதை:

யஷ்வந்த்ராவ் சவான் மும்பை புனே விரைவு பாதை:

இந்தியாவின் முதல் 6 வழிச் சாலையான இந்த மும்பை - புனே விரைவு பாதை 93 கி.மீ நீளமுடையது. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையையும், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் புனே நகரையும் இந்த சாலை இணைக்கிறது. 2002ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த சாலையினால் இரண்டு நகரங்களுக்கும் இடையிலான பயணத்தில் 2 மணிநேர நேர விரையம் தவிர்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.

Photo: Nagesh Kamath

யஷ்வந்த்ராவ் சவான் மும்பை புனே விரைவு பாதை:

யஷ்வந்த்ராவ் சவான் மும்பை புனே விரைவு பாதை:

இந்த சாலையின் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் இது மகாராஷ்டிராவில் இயற்கை அழகு பொதிந்த சில ஊர்களின் வழியாக செல்கிறது. கண்டாலா, லோனாவ்லா மற்றும் காம்ஷேத் போன்ற நிச்சயம் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள் இந்த சாலை வழியில் அமைந்திருக்கிறது.

Photo: Viraj Paripatyadar

 மும்பை டு லோனாவ்லா:

மும்பை டு லோனாவ்லா:

நமது பயணத்தின் முதல் கட்டமாக மும்பையில் இருந்து 140 கி.மீ தூரத்தில் இருக்கும் லோனாவ்லா என்னும் அழகிய மலைபிரதேசத்தை நோக்கி செல்லப்போகிறோம். இரண்டரை மணி நேரத்தில் நாம் மும்பையில் இருந்து லோனவ்லாவை அடையலாம்.

மும்பையில் இருந்து சியன் - பன்வேல் விரைவுப்பாதை வழியாக பயணத்தை துவங்கி பின் மும்பை புனே விரைவுப்பாதை வழியாக கண்டாலா கிராமத்தை அடைந்து பின் தேசிய நெடுஞ்சாலை 4 இன் வழியில் இருக்கும் லோனவ்லாவை அடையலாம்.

Photo: MohitSingh

லோனாவ்ளா செல்லும் வழி:

லோனாவ்ளா செல்லும் வழி:

முன்பு சொன்னது போல லோனாவ்ளா செல்லும் வழியே இவ்வளவு அழகாக இருந்தால் லோனாவ்ளா எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

Photo: GeniusDevil

லோனாவ்லா - அழகென்றால் இதுதான்:

லோனாவ்லா - அழகென்றால் இதுதான்:

லோனவ்லாவில் அழகிய அருவிகள், புஷி அணை, லோஹகட் கோட்டை, ராஜ்மச்சி வனவிலங்கு சரணாலயம், பைரவநாத் கோயில் போன்ற இடங்கள் முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆகும். புகழ் பெற்ற மழைகால சுற்றுலாதலமான இந்த லோனவ்லாவில் இருக்கும் இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Photo: ptwo

ராஜ்மச்சி பாயிண்ட் :

ராஜ்மச்சி பாயிண்ட் :

உங்களுக்கு டிரெக்கிங் மிகவும் பிடிக்கும் எனில் நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் ராஜ்மச்சி. இது மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மலையேற்றத்துக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும். இதன் காரணமாகவே சுற்றுலாப்பயணிகள் வார இறுதியில் இங்கே வருகின்றனர்.

இவைத் தவிர ராஜ்மச்சியிலிருந்து கொண்டனா குகைகளுக்கு செல்லும் பாதை அல்லது உல்லாஸ் ஆற்றுக்கரைப் பாதை போன்றவற்றையும் பயணிகள் மலையேற்றத்துக்கு தேர்ந்தெடுக்கலாம்.

Photo: Ravinder Singh Gill

மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வழி:

மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வழி:

ராஜ்மச்சி முனையிலிருந்து மும்பை-புனே விரைவு சாலை மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அழகிய தோற்றம்.

Photo: Nagesh Kamath

கர்லா குகை:

கர்லா குகை:

லோனவ்லாவுக்கு அருகில் அமைந்திருக்கும் கர்லா குகை மிகத்தொன்மையான வரலாறு உடையதாகும். கி.மூ 2ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையதாக சொல்லப்படும் இந்த குகைகளில் புத்த மதத்துறவிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைகின்றன.

Photo: Sowpar

கர்லா குகை:

கர்லா குகை:

மேலும் இதனுள் மிகபெரிய கற் தூண்களும், மிக நுட்பமாக குடையப்பட்ட சுவர்சிற்பங்களும் இருக்கின்றன. லோனவ்லாவில் இருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த குகைகள் இருக்கின்றன. வரலாற்று விசயங்களின் மேல் ஆர்வமுடையவர்கள் இங்கே நிச்சயம் சென்று வர வேண்டும்.

Photo: Amitmahadik100

மெழுகு சிலை அருங்காட்சியகம்:

மெழுகு சிலை அருங்காட்சியகம்:

லண்டனில் உள்ள புகழ்பெற்ற டுசாண்ட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தை போன்றே லோனாவ்லா ரயில் நிலையத்திற்கு அருகில் புகழ் பெற்றவர்களின் சிலைகள் மெழுகில் தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளன.

Photo: ddasedEn

மெழுகு சிலை அருங்காட்சியகம்:

மெழுகு சிலை அருங்காட்சியகம்:

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், ஷிர்டி சாய்பாபா, அண்ணா ஹசாரே, சதாம் ஹுசைன் போன்றவர்களின் மெழுகு வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Photo: ddasedEn

புஷி அணை:

புஷி அணை:

லோனவ்லாவின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியில் அமைந்திருக்கிறது பசுமை பொங்கும் புஷி அணை. வார இறுதியில் உங்கள் அன்பான மனைவியுடனோ, காதலியுடனோ இங்கு வந்து புல்வெளிகளில் நடந்தபடி மனம் விட்டு பேச அற்புதமான இடம் இது.

Photo: Sobarwiki

'சிக்கி':

'சிக்கி':

லோனவ்லாவில் தயாரிக்கப்படும் 'சிக்கி' எனப்படும் கடலை மிட்டாய்கள் உலகப்பிரபலம். இங்கு விளையும் பிரத்யேகமான கடலையில் சிக்கிகள் தயாரிக்கப்படுவதால் அவை தனித்துவமான சுவை உடையவை. அவை தயாரிக்கப்படும் இடங்களில் இருந்தே வாங்கி சுவைத்து மகிழ தவறி விடாதீர்கள்.

Photo: MalayalaM

லோனாவ்லா:

லோனாவ்லா:

இவை தவிர டைகர் பாய்ன்ட், லோஹகத் கோட்டை, டியுக்ஸ் மூக்கு முனை போன்ற இடங்களும் லோனவ்ளாவில் உண்டு. மும்பை - புனே பயணத்தின் போது கண்டிப்பாக குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ இங்கு வந்து முடிந்த அளவு அதிகநேரத்தை செலவிடுங்கள்.

Photo: Arjun Singh Kulkarni

லோனாவ்லா டு புனே:

லோனாவ்லா டு புனே:

பயணத்தின் இறுதி கட்டமாக நாம் லோனவ்லாவில் இருந்து புனே வை நோக்கி பயணப்படப் போகிறோம். லோனவ்லாவில் இருந்து திரும்பவும் மும்பை புனே விரைவுப்பாதையை அடைந்து அங்கிருந்து 66கி.மீ தொலைவில் உள்ள புனே நகரத்தை ஒன்றே கால் மணிநேரத்தில் அடையலாம்.

வார இறுதிகளில் நண்பர்களுடன் காரில் சென்றபடி அற்புதமான இயற்கை அழகை இந்த பயணத்தில் நாம் ரசிக்கலாம். இந்தியாவில் நிச்சயம் செல்லவேண்டிய சாலைகளில் ஒன்றான இதில் உங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் பயணம் செய்து பாருங்கள். உன்னதமான அனுபவத்தை ஆனந்தமாக அனுபவிக்கலாம்.

Photo: Ford Asia Pacific

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more