Search
  • Follow NativePlanet
Share
» »முருதேஸ்வர் - சிவபெருமானின் பிரம்மாண்ட தோற்றம்!!!

முருதேஸ்வர் - சிவபெருமானின் பிரம்மாண்ட தோற்றம்!!!

By Staff

உலகத்திலேயே 2-வது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது.

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா?ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா?

அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.

'தல' ரசிகர்களே! அவரைப் பற்றிய இந்த விசயம் தெரியுமா?'தல' ரசிகர்களே! அவரைப் பற்றிய இந்த விசயம் தெரியுமா?

முருதேஸ்வர் ஆலயம்

முருதேஸ்வர் ஆலயம்

சிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய தீபகற்பமாய் திகழ்கிறது முருதேஸ்வர் ஆலயம்.

படம் : Lucky vivs

ராஜகோபுரம்

ராஜகோபுரம்

முருதேஸ்வர் ஆலயத்தின் ராஜகோபுரம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக கருதப்படுகிறது. அதோடு உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாகவும் முருதேஸ்வர் ஆலயத்தின் ராஜகோபுரம் அறியப்படுகிறது.

படம் : Prashant Sahu

முருதேஸ்வர் சிலை

முருதேஸ்வர் சிலை

123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

படம் : Vamshireddy

முருதேஸ்வர் கடற்கரை

முருதேஸ்வர் கடற்கரை

அரபிக்கடல் அமைதியாகவும், அழகாகவும், காணப்படுவதால் நீங்கள் கடலில் நீந்துவது, படகு சவாரி செய்வது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். கோயிலை சுற்றி உள்ள இடங்களில் மக்கள் சிறு உலா போகலாம், அதோடு அரபிக் கடலில் ஆதவன் மறைந்துபோகும் கண்கொள்ளா காட்சியை பார்த்து மகிழலாம்.

படம் : Sankara Subramanian

காற்று அடித்துச்சென்ற 4-வது கை!!!

காற்று அடித்துச்சென்ற 4-வது கை!!!

முருதேஸ்வர் சிலை ஆரம்பத்தில் நான்கு கைகளுடன், தங்க முலாம் பூசப்பட்டு காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்பு அப்பகுதியில் வீசிய பலத்த கடல் காற்று காரணமாக உடுக்கை பிடித்திருந்த கை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதேபோல் கடுமையான மழையால் தங்க முலாமும் அழிந்து போயிற்று.

படம் : Thejas Panarkandy

ஆத்ம லிங்கம்

ஆத்ம லிங்கம்

விநாயகரிடம் ஆத்ம லிங்கத்தை கொடுக்கும் ராவணன்.

படம் : ramesh Iyanswamy

சூரியத் தேர்

சூரியத் தேர்

முருதேஸ்வர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சூரியனின் தேர்.

படம் : Yogesa

நந்தி

நந்தி

சிவன் சிலைக்கு முன்பு அமைந்துள்ள பிரம்மாண்ட நந்தி.

படம் : Rojypala

படகுகள்

படகுகள்

முருதேஸ்வர் கடற்கரையில் பயணிகளை அழைத்துச் செல்ல காத்திருக்கும் படகுகள்.

படம் : Yogesa

அருகாமை சுற்றுலாத் தலங்கள்

அருகாமை சுற்றுலாத் தலங்கள்

முருதேஸ்வருக்கு அருகில் எண்ணற்ற அழகிய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

மரவந்தே - 48 கி.மீ
கோகர்ணா - 77 கி.மீ
ஜோக் அருவி - 87 கி.மீ
மால்பே - 105 கி.மீ

படம் : varun suresh
https://www.flickr.com/photos/varun/4140945974

மால்பே கடற்கரை, மால்பே

மால்பே கடற்கரை, மால்பே

உடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. எனவே இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால் மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது. இந்த கடற்கரைப் பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, போன்ற பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

மால்பே ஹோட்டல் டீல்கள்

படம் : Neinsun

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கிறார்கள். ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது. இந்த அருவி கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 401 கி.மீ தொலைவில் உள்ளது.

ஜோக் நீர்வீழ்ச்சி ஹோட்டல் டீல்கள்

படம் : Sarvagnya

செயிண்ட் மேரி தீவு

செயிண்ட் மேரி தீவு

கர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவு, தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். எனவே ஒரு புதுமையான கடற்கரையை கண்டு ரசிக்கும் ஆர்வமுள்ள பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு தாராளமாக வரலாம்.

படம் : Man On Mission

மரவந்தே கடற்கரை

மரவந்தே கடற்கரை

கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. இது தவிர மரவந்தேவின் அமைதியான, ஆபத்தில்லாத கடலில் நீங்கள் நீந்தவும் செய்யலாம். அதோடு இங்கு வரும் பயணிகள் மரவந்தேவுக்கு அருகில் உள்ள சௌபர்ணிகா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று கடவுளை தரிசிக்கலாம்.

மரவந்தே ஹோட்டல் டீல்கள்

படம் : Riju K

கோகர்ணா

கோகர்ணா

கோகர்ணா நகரம் இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

கோகர்ணா ஹோட்டல் டீல்கள்

படம் : Rrevanuri

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

முருதேஸ்வர் ஹோட்டல் டீல்கள்

படம் : Thejas Panarkandy

முருதேஸ்வரை எப்போது மற்றும் எப்படி அடைவது?

முருதேஸ்வரை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Abhiramk.pnr

Read more about: ஆன்மிகம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X