Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவில் நாம் நிச்சயம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்

கோவாவில் நாம் நிச்சயம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்

ஜாலியாக நண்பர்களுடன் குடித்து கும்மாளம் அடிக்க இந்தியாவில் இருக்கும் சிறப்பான இடமென்றால் அது கோவா தான். அழகிய கடற்கரைகள், விடிய விடிய நடக்கும் பார்டிகள், சுதந்திரமான கலாச்சாரம் என விடுமுறைகளை கொண்டாட இந்தியாவில் கோவாவை விட நல்ல இடம் இல்லையென்றே சொல்லலாம். நண்பர்களுடன் கோவா சென்றுவிட்டு வெறுமனே கடற்கரையிலோ, ஹோட்டலிலோ கம்மி விலையில் கிடைக்கிறது என்ற காரணத்திற்க்காக மூக்குமுட்ட குடித்துவிட்டு விழுந்து கிடப்பதை விட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.

பழமையான போர்த்துகீசியர் காலத்து கட்டிடங்கள், இயற்கை எழில் நிறைந்த பகுதிகள், விதவிதமான பொருட்கள் கிடைக்கும் சந்தைகள், பல கலாச்சாரங்களின் சங்கமமாக விளங்கும் திருவிழாக்கள் என கோவாவில் நாம் செல்ல வேண்டிய இடங்களும்,செய்ய வேண்டிய விஷயங்களும் ஏராளமாக இருக்கின்றன. அப்படி நாம் கோவாவில் நிச்சயம் செய்ய வேண்டிய 20 விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

குடி ! குடி ! குடி ! :

குடி ! குடி ! குடி ! :

நம்ம ஊர்களில் கிடைப்பதை விடவும் கிட்டத்தட்ட பாதி விலைக்கு கோவாவில் பீர் மற்றும் இதர மதுபான வகைகள் கிடைக்கின்றன. கோவாவில்தான் பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான 'Kingfisher' பீர் தயாரிப்பு ஆலை இருக்கிறது. இங்கே வெறும் ₹50 பீர் வாங்கலாம். இரவு நேரத்தில் நண்பர்களுடன் குழுவாக கடற்கரையில் தீ மூட்டி அதனை சுற்றி அமர்ந்து பல கதைகள் பேசி சிரித்தபடி 'பீர்' குடிப்பது எவ்வளவு ஆனந்தமான அனுபவம் தெரியுமா ?

இரவு உலகம் :

இரவு உலகம் :

இந்தியாவில் நேரம் காலம் பார்க்காமல் கொண்டாட கோவாவில் மட்டுமே சாத்தியம். சொல்லப்போனால் இங்கே பத்து மணிக்கு மேல் தான் பார்டிகளே ஆரம்பிக்கின்றன. அதிரடிக்கும் டிரான்ஸ் இசை முழங்க அதிகாலை 4 மணி வரைக்கும் திகட்ட திகட்ட குத்தாட்டம் போடலாம். நம்ம ஊர்களில் இருப்பதை போல 11மணிக்கு மேல் சத்தமாக பாடல் ஒலிக்ககூடாது என்பது போன்ற விதிகள் எல்லாம் கோவாவில் கிடையவே கிடையாது.

லேக்கிங்க்ஸ் என்ன பிகினியே போடலாம் :

லேக்கிங்க்ஸ் என்ன பிகினியே போடலாம் :

லேக்கிங்க்ஸ் உடை அணிவதே கலாச்சாரத்திற்கு இழுக்கு என்று கூறி கொடி பிடிக்கும் கலாச்சார காவலர்கள் கோவாவிற்கு வந்தால் என்ன சொல்வார்களோ தெரியாது.கோவாவில் நாம் நினைத்த ஆடையை அணிந்து சுதந்திரமாக சுற்றி வரலாம். யாரும் வந்து தனி மனித சுதந்திரத்தில் தலையிடப்போவதில்லை என்பது கோவாவிற்கே உரிய சிறப்புகளில் ஒன்று.

நம்ம ஊர்களில் எல்லாம் நினைத்துகூட பார்க்க முடியாத 'பிகினி' ஆடைகளை அணிந்துகொண்டு கூட கோவா கடற்கரைகளில் வலம் வரலாம்.

டால்பின்களை பார்க்கலாம் :

டால்பின்களை பார்க்கலாம் :

இந்த உலகில் வாழும் எல்லா உயிரினங்களை காட்டிலும் அதிபுத்திசாலியான விலங்கு என்றால் அது டால்பின்கள் தான். இவை தன்னுடைய மூளையின் ஆற்றலில் 20% வரை பயன்படுத்தும் திறன் பெற்றவையாம். தெளிவாக சொல்லவேண்டும் என்றால் ஆகப்பெரிய விஞ்ஞானியான அல்பர்ட் ஐன்ஸ்டினே தன்னுடைய மூளையின் ஆற்றலில் 12% பயன்படுத்தியிருக்கிறாராம்.

அப்படிப்பட்ட டால்பின்களை இந்தியாவில் நாம் வெகு சில இடங்களில் மட்டுமே பார்க்க முடியும். கோவாவின் ஒரு குறிப்பிட்ட கடல் பகுதியில் டால்பின்களை நாம் பார்க்களாம்.

டால்பின்களை பார்க்கலாம் :

டால்பின்களை பார்க்கலாம் :

எங்கே பார்ப்பது? எவ்வளவு செலவாகும் ? :

கோவாவில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான அகுடா கோட்டையில் இருந்து டால்பின்களை பார்ப்பதற்காக சில தனியார் முகவங்களால் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகில் மாண்டோவி ஆற்றில் சில கி.மீ பயணித்தால் டால்பின்களை நாம் பார்க்கலாம். இதற்க்கு ஒருவருக்கு ₹500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 குட்டி போர்ச்சுகல் - கோவா :

குட்டி போர்ச்சுகல் - கோவா :

இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோதிலும் கோவா மட்டும் 1961ஆம் ஆண்டு வரை போர்துகீசியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த வந்தது. 1600களில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 400ஆண்டுகள் கோவாவை போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர்.

கோவாவில் போர்த்துகீசிய கட்டிடவியல் அமைப்பின் படி கட்டப்பட்ட சில நூறு ஆண்டுகள் பழமையான தேவாலயங்கள் இன்றும் இருக்கின்றன.

 குட்டி போர்ச்சுகல் - கோவா :

குட்டி போர்ச்சுகல் - கோவா :

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பழைய கோவாவில் இருக்கும் போம் ஜீசஸ் பசிலிக்கா, வேல்ஹா என்ற இடத்தில இருக்கும் சே கதீட்ரல், பாஞ்சிமில் இருக்கும் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 'Our Lady of the Immaculate Conception' சர்ச் ஆகியன கோவாவில் இருக்கும் மிகவும் முக்கியமான தேவாலயங்கள் ஆகும். கோவாவில் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் இவை.

 இறால் சாப்பிடலாம் ! நண்டு சாப்பிடலாம் ! :

இறால் சாப்பிடலாம் ! நண்டு சாப்பிடலாம் ! :

நம்ம ஆட்களுக்கு உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் இட்லியும், சாம்பாரும் இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. கோவாவில் உணவகத்துக்கு சென்றுவிட்டு அங்கும் நம்ம ஊர் உணவுகளை சாப்பிடாமல் கோவாவில் மட்டுமே கிடைக்கும் பிரத்யேகமான இறால் மற்றும் நண்டு குழம்புகளை ருசிபாருங்கள். தேங்காய்ப்பால் மற்றும் கொக்கும் பழங்கள் சேர்த்து சமைக்கப்படும் கோவா உணவுகள் அதியற்புதமான சுவையுடையவை.

சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம் :

சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம் :

கோவாவில் சாகச பிரியர்களை சந்தோஷப்படுத்தும் விஷயங்களும் ஏராளமாக இருக்கின்றன. முகக்கவசம், ஆக்சிஜன் வாயு மற்றும் நீந்துவதற்கு உதவும் சில உபகரணங்களை அணிந்துகொண்டு கடலினுள் செல்லும் ஆழ்கடல் நீச்சல் விளையாட்டான ஸ்கூபா டைவிங், ஒரு படகில் கயிறின் மூலம் இணைக்கப்பட்ட பாராசூட்டில் பறக்கும் விளையாட்டு, அலைச்சறுக்கு எனப்படும் சர்பிங் என பல திரில்லிங்கான நீர் விளையாட்டுகளில் நாம் ஈடுபடலாம்.

திருவிழாக்கள் :

திருவிழாக்கள் :

கோவாவில் திருவிழாக்கள் என்றதும் நம்ம ஊர் கோயில் திருவிழாக்கள் என்று நினைத்துவிடவேண்டாம். வெளிநாட்டில் நடப்பது போன்ற 'கார்னிவல்' விழாக்கள் கோவாவிலும் நடைபெறுகின்றன.

கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்கள் 'கோவா கார்னிவல்' என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது மக்கள் விதவிதமாக ஆடைகள் அணிந்தபடி அலங்கார ஊர்திகளின் முன்பு நடனமாடியபடி வருகின்றனர். இந்த விழா நடைபெறும் மூன்று நாட்களும் இரவு பகல் பாராமல் மக்கள் நடனமாடியும், குடித்தும் கொண்டாடுகின்றனர்.

கடற்கரை வீடு :

கடற்கரை வீடு :

கடற்கரை ஓரத்தில் ஒரு வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் நம் எல்லோருக்குமே உண்டு. அந்த ஏக்கத்தை போக்க சில நாட்கள் கோவாவில் கடற்கரையோரத்தில் இருக்கும் வீடுகளில் தங்கி மகிழலாம்.

இதுபோன்ற வீடுகளில் தான் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் இருப்பார்கள் என்பதால் சில வெளிநாட்டவரை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளும் வாய்ப்பையும் இதன் மூலம் நாம் பெறலாம்.

சூரிய உதயம் & அஸ்தமனம் :

சூரிய உதயம் & அஸ்தமனம் :

கோவாவின் கடற்கரைகளில் அதிகாலை நடக்கும் சூரிய உதயத்தை பார்ப்பதும், மாலையில் நடக்கும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதும் ஒரு அலாதியான அனுபவம் ஆகும். முடிவற்றதாய் தோன்றும் கடலின் பின்னால் வர்ணஜாலங்களை நிகழ்த்தும் சூரியனை ரசிப்பது மனதுக்கு புத்துணர்ச்சியளிக்கும்.

புத்தாண்டை இங்கே துவங்குங்கள் :

புத்தாண்டை இங்கே துவங்குங்கள் :

புத்தாண்டு சமயமான டிசம்பர் மாத இறுதியில் ஆசியாவில் கொண்டாடப்படும் மிகச்சிறந்த பார்டி என்று சொல்லப்படும் 'சன் பர்ன்' பார்டி நடக்கிறது. உலகின் முன்னணி வட்டு இசைக்கலைஞர்கள் (DJ) இந்த பார்டிகளில் கலந்துகொள்கின்றனர்.

கோவாவில் இருக்கும் வகேடோர் கடற்கரையில் இந்த சன் பர்ன் பார்டி திருவிழா நடைபெறுகிறது.

சூதாடலாம் :

சூதாடலாம் :

கோவாவில் சட்டப்படி நடத்தப்படும் கேசினோக்கள் நிறைய இருக்கின்றன. இங்கே கப்பலில் செயல்படும் கேசினோக்கள் ஒரு குட்டி சொர்க்கம் போன்றவை. இங்கே ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி சூதாட்டத்தில் கலந்து கொள்ளலாம். நிறைய அதிர்ஷ்டமும், திறமையும் இருந்தால் எந்த அளவுக்கும் பணம் பார்க்கலாம். வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கும் இந்த கேசினோக்களில் பார்டிகளுக்கும் சற்றும் குறையிருக்காது.

கோவா ஹோட்டல்கள் :

கோவா ஹோட்டல்கள் :

கோவாவிற்கு செல்லும் முன்பாகவே நாம் செல்லும் இடங்களில் இருக்கும் ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்வது நல்லது. கோவாவில் இருக்கும் ஹோட்டகள் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X