Search
  • Follow NativePlanet
Share
» »சரித்திரத்தின் சுவடுகள் !!

சரித்திரத்தின் சுவடுகள் !!

By Naveen

வரலாறு எப்போதுமே அளவற்ற சுவாரஸ்யம் நிறைந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ராஜாக்களை பற்றிய கதைகளை கேட்கும்போதோ, வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படங்களை பார்க்கும்போதோ நம்மையறியாத ஒரு பரவசம் தோன்றும்.

டைம் மெஷின் மற்றும் இருந்தால் இந்த காலத்திற்கு சென்று பார்க்கவேண்டும் என்று நம் எல்லோருக்கும் ஒரு சின்ன ஆசை மனதோரத்தில் இருக்கத்தான் செய்கிறது அல்லவா?.

திரும்பவும் வரலாற்று காலத்திற்கே சென்றதுபோன்ற உணர்வைப்பெற இருக்கும் ஒரே வழி காலத்தை வென்று நிற்கும் பழங்கால கட்டிடங்களை சென்று பார்ப்பது தான். வாருங்கள், இந்தியாவில் நாம் சென்றுபார்க்க வேண்டிய வரலாற்று இடங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

வாரணாசி படித்துரைகள்:

வாரணாசி படித்துரைகள்:

உலகின் பழமையான நகரமான வாரணாசி சூரியன் மறைந்து இருள்சூளும் வேளையில் தான் உயிர்ப்பெறுகிறது. மோட்சம் தேடி காசிக்கு வந்து துறவு வாழ்க்கை வாழ்ந்து இறப்பெய்தும் எண்ணற்ற மனிதர்களின் உயிரற்ற பூத உடல்கள் புனிதமான கங்கைக்கரையில் இருக்கும் படித்துறைகளில் எரியூட்டப்படுகின்றன.

வாரணாசி படித்துரைகள்:

வாரணாசி படித்துரைகள்:

தஷச்வமேத படித்துரை மற்றும் மணிகர்ணிகா படித்துறை ஆகியவை தான் காசியில் இருக்கும் மிகமுக்கியமான படித்துரைகள் ஆகும். எரியும் பிணங்களின் மாமிசங்களை தின்னும், அவ்வுடல்களின் சாம்பலை ஆடையாக உடுத்தும் மனித நிலை மறந்த அகோரிகளை இந்த படித்துரைகளில் காணலாம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழக்கங்கள் மாறாது தொடர்ந்து நடைபெற்று வரும் இவ்விடங்களுக்கு வருவது வாழ்க்கை பற்றிய நமது கண்ணோட்டத்தையே முழுமையாக மாற்றிவிடும்.

கௌதமன் புத்தனான இடம் !!

கௌதமன் புத்தனான இடம் !!

விவரமறியா ராஜகுமாரனாக அரண்மனை படி தாண்டாமல் வளர்ந்த கௌதனம் உலகுக்கே வழிகாட்டிய ஞான சுடரொளியாய் உருமாறிய இடம் இன்றைய பீகார் மாநிலத்தில் இருக்கும் புத்தகயா ஆகும்.

கௌதமன் புத்தனான இடம் !!

கௌதமன் புத்தனான இடம் !!

புத்தன் மோட்சமடைந்த போதி மரம் ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் அப்படியே இருக்கிறது. இங்கு வரும் பௌத்தமத பக்தர்கள் இம்மரத்தை சுற்றி அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு வார்த்தைகளுள் அடங்காத அந்த உன்னத ஞான உணர்வை வாழ்கையில் ஒருமுறையேனும் அனுபவித்திட வேண்டும்.

கௌதமன் புத்தனான இடம் !!

கௌதமன் புத்தனான இடம் !!

புத்தன் ஞானமடைந்து 280 ஆண்டுகள் கழித்து இவ்விடம் வந்த அசோக சக்கரவர்த்தி அடிக்கல் நாட்டி பின்னாளில் மிகப்பெரியதாக கட்டப்பட்ட மஹாபோதி கோயில் அமைந்துள்ளது.

கௌதமன் புத்தனான இடம் !!

கௌதமன் புத்தனான இடம் !!

புத்தர் பாதங்கள் !!

தஞ்சை - தமிழன் பெருமை !!

தஞ்சை - தமிழன் பெருமை !!

யானை பூட்டி நெற்புடைத்த தஞ்சை மண்ணில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழனையும் தமிழையும் தலைநிமிர வைக்கும் பெருமையாக வானுயர நிற்கிறது தஞ்சை பெரிய கோயில் என்னும் பிரகதீஸ்வரர் கோயில்.

தஞ்சை - தமிழன் பெருமை !!

தஞ்சை - தமிழன் பெருமை !!

கி.பி 1010ஆம் ஆண்டு முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆணைக்கிணங்க குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சன் என்பவரின் மேற்பார்வையில் இக்கோயில் கட்டப்பட்டிருகிறது.

216அடி உயரமுடைய பெரியகோயில் விமான கோபுரம் தான் உலகிலிருக்கும் மிக உயரமான கோயில் விமான கோபுரமாகும்.

தஞ்சை - தமிழன் பெருமை !!

தஞ்சை - தமிழன் பெருமை !!

இன்றும் இக்கோயிலின் கட்டுமானம் நவீன அறிவியலுக்கு முழுமையாக விளங்காமல் இருப்பதே அக்காலத்தில் தமிழன் எவ்வளவு பெரிய நாகரீக உச்சத்தை அடைந்திருந்தான் என்பதுக்கு சான்றாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழன் வந்து வழிபட்ட இக்கோயிலுக்கு தமிழனாய் பிறந்த யாவரும் கட்டாயம் வரவேண்டும்.

தஞ்சை - தமிழன் பெருமை !!

தஞ்சை - தமிழன் பெருமை !!

தஞ்சை பெரியகோயிலில் இருக்கும் முதலாம் ராஜ ராஜ சோழனின் பேரழகு ததும்பும் சிலை !!

சோமநாதர் ஆலயம்:

சோமநாதர் ஆலயம்:

சிவபெருமானுக்கு இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களுள் முதன்மையானது குஜராத் மாநிலத்தில் பிரபாஸ் பட்டன் என்னுமிடத்தில் இருக்கும் சோமநாதர் கோயிலாகும்.

சோமநாதர் ஆலயம்:

சோமநாதர் ஆலயம்:

ஒரு காலத்தில் இக்கோயில் பிரகாரம் நெடுகவும் வைர வைடூரியங்களும், தங்க ஆபரணங்களும் நிறைந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பல படையெடுப்புகளுக்கும் இக்கோயில் உள்ளாகியிருக்கிறது.

சோமநாதர் ஆலயம்:

சோமநாதர் ஆலயம்:

1024 ஆம் ஆண்டு ஆப்கானிய மன்னன் முகமது கஜினியும், பின்1299ஆம் ஆண்டு துருக்கிய உலகுக் கானும் இங்கு படையெடுத்து செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்ததோடு, ஆயிரக்கணக்கான மக்களை கொல்லவும் செய்திருக்கின்றனர்.

இம்மாதம் நடக்கவிருக்கும் சிவராத்திரி பண்டிகை இக்கோயிலில் கோலாகாலமாக கொண்டாடப்படவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

சோமநாதர் ஆலயம்:

சோமநாதர் ஆலயம்:

படையெடுப்புகள் காரணமாக சிதலமடைந்திருக்கும் சோமநாதர் ஆலயத்தின் பழைய புகைப்படம் !!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X