Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிகவும் சுத்தமான நகரம் எது தெரியுமா?

இந்தியாவின் மிகவும் சுத்தமான நகரம் எது தெரியுமா?

By Naveen

கர்னாடக மாநிலத்தில் கலாச்சார தலைநகரம் என்றழைக்கப்படும் மைசூர் இந்தியாவின் மிகவும் சுத்தமான நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி மைசூர், சண்டிகர் மற்றும் மூன்றாவதாக மலைக்கோட்டை மாநகரமான திருச்சியும் இந்தியாவின் முதல் மூன்று சுத்தமான நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

வாருங்கள், இந்தியாவின் மிகவும் சுத்தமான நகருக்கு ஒரு சுற்றுலா சென்று வரலாம்.

மைசூர் அரண்மனை:

மைசூர் அரண்மனை:

மைசூர் நகரின் தவிர்க்கமுடியாத அடையாளமாக இருப்பது மைசூர் அரண்மனையாகும். கி.பி 1399ஆம் ஆண்டிலிருந்து 1950ஆம் ஆண்டுவரை மைசூர் சமஸ்தானத்தின் அரசர்களாக இருந்த வடையார் வம்சத்தின் அதிகாரப்பூர்வ இல்லம் தான் இந்த மைசூர் அரண்மனையாகும்.

Arian Zwegers

மைசூர் அரண்மனை:

மைசூர் அரண்மனை:

மைசூர் மன்னர் நான்காம் கிரிஷ்ணராஜா உடையாரின் உத்தரவின் படி 1897ஆம் ஆண்டு மைசூர் அரண்மனையின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1912ஆம் ஆண்டு நிறைவுற்றது.

இந்த அரண்மனை ஹிந்து, முகலாய மற்றும் ராஜபுத்திரர்களின் கட்டிடக்கலையின் கூட்டு சங்கமமாக உள்ளது.

Sabarish Raghupathy

மைசூர் அரண்மனை:

மைசூர் அரண்மனை:

வார இறுதி நாட்களிலும் மற்ற பொது விடுமுறை நாட்களின் போதும் இந்த அரண்மனை முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது.

மாலை 7-7:45 வரை வார நாட்களில் ஒளி-ஒலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கு நுழைவுக்கட்டணமாக சிறுவர்களுக்கு ₹25 பெரியவர்களுக்கு ₹40 வசூலிக்கப்படுகிறது.

B Balaji

மைசூர் அரண்மனை:

மைசூர் அரண்மனை:

தசரா திருவிழாவின் போது இந்த அரண்மனையில் உள்ள தங்க அரியாசனம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.சுற்றுலாப்பயணிகள் இந்த அரண்மனையில் அரச உடைகள் வைக்கப்பட்டுள்ள அறை, அரச ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் ஓவியக்காட்சி அறை போன்றவற்றை எந்த வித தடங்கலும் இன்றி மிக அருகில் பார்த்து மகிழலாம்.

Indraneel Baruah

பிருந்தாவன் கார்டன்ஸ்:

பிருந்தாவன் கார்டன்ஸ்:

மைசூர் நகருக்கு அருகே மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிரிஷ்ணராஜா சாகர் அணையின் அருகில் இருக்கிறது பிருந்தாவன் கார்டன்ஸ்.

ஆண்டுக்கு இரண்டு லட்சம் சுற்றுலாப்பயணிகள் இந்த பூங்காவிற்கு வருகைதருகின்றனர்.

Ashwin Kumar

பிருந்தாவன் கார்டன்ஸ்:

பிருந்தாவன் கார்டன்ஸ்:

இந்த பூங்காவின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது 'இசை ஊற்று' ஆகும். இரவு நேரத்தில் பலவண்ண ஒளிவிளக்குகள் மிளிர இசைக்கேற்றபடி நடனமாடுவது போல இந்த ஊற்றில் தண்ணீர் மேலும்புகிறது.

Prince Gladson

பிருந்தாவன் கார்டன்ஸ்:

பிருந்தாவன் கார்டன்ஸ்:

பிருந்தாவன் கார்டனில் இருக்கும் இசை ஊற்று !!

Prince Gladson

பிருந்தாவன் கார்டன்ஸ்:

பிருந்தாவன் கார்டன்ஸ்:

இந்த பூங்கா அமைந்திருக்கும் கிரிஷ்ணராஜா சாகர் அணையில் இருந்து தான் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படுகிறது என்பது குரிப்பிடப்படக்கூடிய விஷயமாகும்.

Ravi Sarma

மைசூர் வனவிலங்கு பூங்கா:

மைசூர் வனவிலங்கு பூங்கா:

ஸ்ரீ சாமராஜெந்திரா உயிரியல் பூங்கா எனப்படும் மைசூர் வனவிலங்கு பூங்கா மைசூரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாகவும் இந்தியாவின் முக்கியமான உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகவும் உள்ளது.

_paVan_

மைசூர் வனவிலங்கு பூங்கா:

மைசூர் வனவிலங்கு பூங்கா:

1892ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் மகாராஜா ஸ்ரீ சாமராஜ உடையாரால் கட்டப்பட்டதாகும். இந்த பூங்காவினுள் கிட்டத்தட்ட 168 வகை விலங்குகளும் பறவைகளும் வசிக்கின்றன.

குறிப்பாக இந்தியாவிலேயே அதிகளவு யானைகள் வசிக்கும் வனவிலங்கு பூங்காவாகும் இது. தவிர அனகோண்டா பாம்புகள், ஒட்டகச்சிவிங்கிகள், வரிக்குதிரைகள், காண்டாமிருகங்கள் போன்றவையும் இருக்கின்றன.

Christopher Porter

மைசூர் வனவிலங்கு பூங்கா:

மைசூர் வனவிலங்கு பூங்கா:

மைசூர் வனவிலங்கு பூங்காவின் தனித்துவமான அம்சமாக இருப்பது இங்கிருக்கும் அரியவகை வெள்ளை புலிகள் தான். அழிவின் நுனியில் இருக்கும் வெள்ளை புலிகளை பார்க்கவே பிரத்யேகமாக சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

shrikant rao

லலிதா மஹால்:

லலிதா மஹால்:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'முத்து' படம் நினைவிருக்கிறதா உங்களுக்கு?. இப்படத்தில் ஊருக்கே படியளக்கும் ராஜாவாக ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட அரண்மனை தான் இந்த லலிதா மஹால் ஆகும்.

இது நான்காம் கிரிஷ்ணராஜா உடையாரால் இந்திய வைஸ்ராய் தங்குவதற்காக பிரத்யேகமாக கட்டப்பட்டதாகும்.

Curt Smith

லலிதா மஹால்:

லலிதா மஹால்:

இந்த லலிதா மஹால் லண்டனில் இருக்கும் St Paul's Cathedral கட்டிடத்தை போலவே வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த அரண்மனை 1974ஆம் ஆண்டிலிருந்து தனியார் தங்கும் விடுதியாக செயல்பட்டுவருகிறது.

Brian Snelson

லலிதா மஹால்:

லலிதா மஹால்:

தங்கும் விடுதியாக மாற்றப்பட்டாலும் இன்றும் அதே பழைய ராஜ உபச்சாரம் இங்குவரும் விருந்தினர்களுக்கு அளிக்கப்படுகிறது.

நீங்களும் சில நாட்கள் அக்கால ராஜாக்களை போல இருக்கவேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த லலிதா மஹாலுக்கு வரலாம்.

Curt Smith

மைசூர்:

மைசூர்:

நீங்கள் சென்னை அல்லது பெங்களூருவில் வசிப்பவராக இருந்தால் நிச்சயம் வார விடுமுறை சுற்றுலா செல்ல மைசூர் மிகச்சிறந்த இடமாகும்.

மைசூர் சுற்றுலா தகவல்கள்

மைசூர் ஹோட்டல்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X