Search
  • Follow NativePlanet
Share
» »நபதீப் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நபதீப் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நபதீப் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது |

நபதீப் என்பது பெங்காளி மொழியில் 'ஒன்பது தீவுகள்' எனும் பொருளை குறிக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள இந்த இடம் பங்களாதேஷ் நாட்டினை ஒட்டியே அமைந்துள்ளது. நபதீப் எனப்படும் இந்த தீவுத்தொகுதியிலுள்ள ஒன்பது தீவுகளும் பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

நபதீப் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Joydeep

அந்தர்த்வீப், சிமந்தாத்வீப், ருத்ராத்வீப், மத்ய த்வீப், கோத்ரும்த்வீப், ரித்த்வீப், ஜானுத்வீப், மொஹத்ரும் த்வீப் மற்றும் கோலாத்வீப் என்பவையே அவை. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுவதால் இந்த நபதீப் தீவுகளுக்கு உலகெங்கிலுமிருந்து யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். நபதீப் மண்டலா பரிக்கிரமா எனும் திருவிழா இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மந்திர உச்சாடனங்களுடன்கூடிய ஒரு ஊர்வல சடங்கு நிகழ்ச்சி ஒன்று இத்திருவிழாவின்போது நடத்தப்படுகிறது. குருபூர்ணிமா மற்றும் ராஷ் பூர்ணிமா போன்ற திருநாட்களும் விசேஷமாக இப்பகுதியில் கொண்டாடப்படுகின்றன. சைதன்ய மரபு! இந்த தீவுநகரத்திற்கு கிழக்கே அழகிய பாகீரதி ஆறு ஓடுகிறது. அது மட்டுமல்லாமல் இது மஹா சைதன்ய குரு அவதரித்த ஸ்தலமாகவும் புகழ் பெற்றுள்ளது. இவர் வைணவ மரபை செழிக்க செய்தவர் வேதாந்தி ஆவார். ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த இவருக்கு பின் பல சீடர்களும் தோன்றி அவரது பணியை தொடர்ந்துள்ளனர்.

சுற்றுலா வசதிகள்

நபதீப் தீவுப்பகுதியில் தங்கும் வசதிகளுக்கு குறைவில்லை. இங்கு முனிசிபாலிட்டி கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. இதில் தங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர சைதன்யா கௌடியா மிஷன் இல்லம் மற்றும் இஸ்க்கான் கெஸ்ட் ஹவுஸ், தனியார் ஹோட்டல்கள் போன்றவையும் இங்கு அமைந்திருக்கின்றன. இங்குள்ள உணவகங்களில் சுவையான பெங்காளி உணவுகள் பரிமாறப்படுகின்றன. உள்ளூர் போக்குவரத்து தேவைகளுக்கு வாடகைக்கார் மற்றும் டெம்போக்கள் போன்றவை கிடைக்கின்றன.

Read more about: west bengal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X