Search
  • Follow NativePlanet
Share
» »கடன் தொல்லையா? உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்! இப்போதே செல்லுங்கள்!

கடன் தொல்லையா? உடனே தீர்க்கும் அந்திலி நரசிம்மர்! இப்போதே செல்லுங்கள்!

கடன் பிரச்சனைகளால் தவித்து வருகிறீர்களா ?. கவலைய விடுட்டு, குடும்பத்துடன் இந்த திருத்தலத்திற்கு சென்று வந்தால், குடும்ப பிரச்சனைகள், கடன் தொல்லை நீங்கி, நல்ல காலம் பிறக்கும்.

ஜாதகம், தோஷங்களில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஒரு விசயம் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும். அதாவது, ஜாதகத்தில் நல்ல காலம் போட்டிருக்கிறதே ஆனால் நிகழ்காலம் அப்படி இருக்கவில்லையே என்பதுதான் அது. அப்படி கருதுபவர்களில், பலருக்கு கடன் தொல்லை, சச்சரவுகளால், வீட்டில் சண்டை என குடும்ப உறவுகள் கலங்கப்படும் வகையில் இருக்கும். சில சமயங்களில் பேசித் தீர்க்கவேண்டிய விசயங்களைக் கூட சண்டையில் கொண்டுவந்து, ஆத்திரத்தில் நடக்கக்கூடாது நடந்துவிடும் அளவுக்கு போய்விடும். அத்தகைய பிரச்சனைகளால் தவித்து வருகிறீர்களா நீங்கள். கவலைய விடுட்டு, குடும்பத்துடன் இந்த திருத்தலத்திற்கு சென்று வந்தால், குடும்ப பிரச்சனைகள் நீங்கி, நல்ல காலம் பிறக்கும்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


விழுப்புரம் மாவட்டம் அந்திலி கிராமத்தில் அடைந்துள்ளது அருள்மிகு நரசிம்மர் திருக்கோவில். விழுப்புரத்தில் இருந்து குப்பம், கல்பட்டு, அயந்தூர் கடகனூர் வழியாக சுமார் 35 கிலோ மீட்டர் பயணித்தால் அரக்கந்தநல்லூர் அடுத்து அமைந்துள்ளது அந்திலி. தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார்.

Bikashrd

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


மகாவிஷ்ணு நரசிம்மர் அவதாரத்தில் தூணில் இருந்து தோன்றி இரணியனை அழித்து பிரகலாதனை காப்பாற்றி தரிசனம் செய்தார். அதே போல் தனது வாகனமான கருட பகவானுக்கு நரசிம்மராக விஷ்ணு காட்சி தந்த தலம் இந்த அந்திலி நரசிம்மர் கோவில் ஆகும்.

Ramanathan.k.i

திருவிழா

திருவிழா


வைகுண்ட ஏகாதசி, நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, சுவாதி நட்சத்திரம் உள்ளிட்ட தினங்களில் ஊர் மக்கள் கூடி நரசிம்மர் கோவிலில் விழா கொண்டாடுகின்றனர்.

Skrishnankec

நடைதிறப்பு

நடைதிறப்பு


அருள்மிகு நரசிம்மர் கோவில் நடை காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். காலை நேர நடை திறக்கப்பட்ட நிலையில் சூரிய ஒளி நரசிம்மர் மீது படரும் காட்சி காண்பது அரிது.

Bikashrd

வழிபாடு

வழிபாடு


குடும்பத்தில் தொடர் பிரச்சனை, தீராத கடன் தொல்லை, திருமணத் தடை, தோஷம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து வர நன்மை நிகழும்.

Dineshkannambadi

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


வேண்டிய காரியங்கள் நிறைவேறியதும் மூலவருக்கு புத்தாடைகள் சாற்றி, நரசிம்மர் ஹோமம் செய்து நேர்த்திக்கடன் செய்யப்படுகிறது.

Bshankar31

ஆலய வரலாறு

ஆலய வரலாறு


கருடன் நாராயணனை வேண்டி உணவு, தண்ணீர் இன்றி அந்திலியில் இருந்த பாறைமீது அமர்ந்து கடும் தவம் செய்தார். இதையறிந்த நாராயணப் பெருமாள் கருடன் முன் தோன்றி வரம் தந்தார். கருடன் நரசிம்ம அவதாரத்தில் காட்சியருலும் படி வேண்டவே கருடனின் விருப்பப்படி நாராயணன் இம்மண்ணில் நரசிம்மராகக் காட்சி தந்தார். மகாலட்சுமியும் நரசிம்மரின் மடியில் அமர்ந்தாள். அதனைக் கொண்டே இங்கு லட்சுமி நரசிம்மருக்குக் கோவில் கட்டப்பட்டது.

Adityamadhav83

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


விழுப்புரத்தில் இருந்து கடகனூர் சாலையில் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலும், கண்டச்சி புரம் சாலை வழியாக பயணித்தால் 44 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் இருந்து வேரையூர் சாலை வழியாக 37 கிலோ மீட்டர் பயணித்தாலும் இந்த நரசிம்மர் கோவிலை அடையலாம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை


இந்த பயணத்தை மேலும் சிறப்புடையதாக்க திருவண்ணாமலைக்கும் சென்று வரலாம். இந்த நகரம் பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இங்கு அமைந்துள்ள அருணாச்சலேஷ்வரா கோவில், ரமணா ஆசிரமம், விருபாக்‌ஷா குகை மற்றும் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் ஆகியவை தென்னிந்திய இந்துக்கள் இடையே சமயச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்கள் ஆகும்.

tiruvannamalai town

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X