Search
  • Follow NativePlanet
Share
» »நர்கண்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நர்கண்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நர்கண்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கண்களைக் கவரும் பனி மூடிய இமயமலை தொடர்கள் மற்றும் மலையடிவாரத்தில் பசுமையான காடுகளையும் கொண்ட அழகிய சுற்றுலாத்தலம் தான் நர்கண்டா. நர்கண்டா நகரத்தில் இருக்கும் சுற்றுலாப் பகுதிகளில், மிகவும் பிரபலமான இடமாக இந்நகரிலேயே உயரமான பகுதியாக விளங்கக் கூடிய ஹடூ சிகரம் உள்ளது. மலையின் உச்சியில் அமைந்திருக்கும் ஹடூ மாதா கோவில் உள்ளூர்வாசிகளால் பயபக்தியுடன் கொண்டாடப்படும் புனிதத்தலமாக விளங்குகிறது. இந்து மதத்தில் காலம் மற்றும் மாற்றத்தின் கடவுளாக சித்தரிக்கப்படுகின்ற காளி தேவிக்காக கட்டப்பட்டிருக்கும் மாகாமாயா கோவில் நர்கண்டாவின் மற்றுமொரு புகழ் பெற்ற கோவிலாக விளங்குகிறது.

நர்கண்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Ashish Gupta

தானேடாரில் உள்ள ஸ்டோக்ஸ் பண்ணை, பரவலான மக்களால் அறியப்படும் ஆப்பிள் பழத் தோட்டமாகவும் மற்றும் உலகளவில் புகழ் பெற்ற இடமாகவும் உள்ளது. 18-வது நூற்றாண்டில் இந்த பண்ணையைத் துவக்கிய அமெரிக்கரான சாமுவேல் ஸ்டோக்ஸ் என்பவரின் பெயரைத் தாங்கியதாக இந்த இடம் விளங்குகிறது. நர்கண்டாவில் இருந்து 17 கிமீ தொலைவில், சட்லெஜ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பழமையான கிராமமான கோட்காருக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம். இந்த கிராமம் 'U' வடிவ பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது.

கோட்காரில் இருந்தபடியே குலு பள்ளத்தாக்கின் சுற்று வட்டக்காட்சிகள், ஜிக்ஜாக் சாலைகள் மற்றும் பனி படர்ந்த இமயமலை தொடர்கள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளால் ரசித்திட முடியும். பனிச்சறுக்கு மற்றும் மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற நர்கண்டா நகரம், சுற்றுலாப் பயணிகள் பனி மூடிய இமயமலை சரிவுகளில் குளிர்கால விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்பினை தரும் இடமாகும். ஏப்ரல் முதல் ஜுன் மாதங்கள் வரை, மிதமான வெப்பத்தை தாங்கிய கோடைகாலம் நீடிப்பதால் நர்கண்டாவிற்கு வருகை தர உகந்த நாட்களாக இவை உள்ளன. நர்கண்டா நகரம் விமானம், சாலை மற்றும் இரயில் ஆகிய போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் எளிதில் அடையும் இடமாக உள்ளது.

ஹடூ சிகரம்

புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஹடூ சிகரம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ளது. 3300 மீ உயரமுடைய இந்த சிகரம் இந்நகரத்திலேயே உயரமான இடமாக விளங்குவதால், இங்கிருந்தபடியே இமயமலைத் தொடரைப் பறவையின் பார்வையில் பார்க்க முடியும். இதன் மூலம் பனி படர்ந்த மலைகள், அடர்த்தியான பைன் காடுகள், பழத்தோட்டங்கள் மற்றும் பசும் நெல் வயல்கள் ஆகியவற்றை காண முடியும். நர்கண்டா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிகரத்தை அடைவதற்கு இருக்கும் ஒரே வழி மலையில் மெதுவாக ஏறத் தொடங்குவது மட்டுமே. இந்த மலையில் அமைந்திருக்கும் ஹடூ மாதா கோவில் இவ்விடத்தை முக்கியமான மத வழிபாட்டுத்தலமாக வைத்திருக்கிறது. இந்த இடத்தில் இருக்கும் பொதுப்பணித்துறையின் விருந்தினர் விடுதி சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கவும், தளர்ச்சியாக அமர்ந்திருக்கவும் மற்றும் இந்த சிகரத்தைப் பற்றி நினைத்திருக்கவும் ஏற்ற இடமாக இருக்கிறது. இந்த சிகரத்திலிருந்தவாறே துமாரி மற்றும் ஜாவ் பாக் ஆகிய இடங்களை, அவற்றின் வழியிலிருக்கிற பசும் புல்வெளிகளை ரசித்துக் கொண்டே காண முடியும்.

நர்கண்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Manish57335

தானேடார்

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நர்கண்டா நகரத்திலுள்ள தானேடார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்டோக்ஸ் பண்ணை ஒரு முதன்மையான சுற்றுலா தலமாகும். உலகளவில் புகழும், பல்வேறு நாடுகளில் விற்பனையும் ஆகிக் கொண்டிருக்கும் சுவைமிக்க ஆப்பிள்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இடம் ஸ்டோக்ஸ் பண்ணையாகும். பரந்து விரிந்த பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பண்ணையின் ஆப்பிள் தோட்டங்கள் பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சியையும் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலையும் அளிப்பதில் வியப்பில்லை. இந்திய தத்துவங்களால் கவரப்பட்டு 1904-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த சாமுவேல் ஸ்டோக்ஸ் என்பவர் தான் இந்த ஆப்பிள்களை வணிக நோக்கில் வளர்ப்பதற்கு காரணமானவராவார். பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஆப்பிள் மரங்களால் இந்த இடம் முழுமையாகவும் வெண்மை நிற பள்ளத்தாக்கைப் போல காட்சியளிக்கும் ஏப்ரல் மாதத்தில் இந்த பண்ணைக்கு வருகை தருவது பார்வையாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜுலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரை நடக்கும் அறுவடைக் காலமும் இந்த பண்ணைக்கு வருகை தர ஏற்ற நாட்களாகும்.

ஜலோரி கணவாய்

ஹிமாச்சல பிரதேசத்தின் நர்கண்டாவில், கடல் மட்டத்திலிருந்து 3350 மீ உயரத்தில் அமைந்திருக்கும் மனம் மயக்கும் சுற்றுலாத்தலம் ஜலோரி கணவாய். சட்லெஜ் பள்ளத்தாக்கின் வழியாக லூரி, ஆனி மற்றும் குலு பள்ளத்தாக்கின் கானாக் ஆகிய கண்கவரும் இடங்களை கடந்து அடைய வேண்டிய ஜலோரி கணவாய் நர்கண்டாவில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள இடமாகும். இந்த கணவாயிலிருந்து 30 நிமிட நடை பயணத் தொலைவில் அமைந்துள்ள சரோல்சார் ஏரியானது செழுமையான காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. பஞ்சார் பள்ளத்தாக்கில் உள்ள முதன்மையான வழிபாட்டுத் தலமான ஷிரிங்கா ரிஷி கோவில் இந்த கணவாய்க்கு மிக அருகிலுள்ள இடமாகும். புரணாங்களில் வரும் கதைப்படி, இந்த காட்டுப்பகுதியில் உள்ள 'பிண்டி' என்ற புனிதக் கல், இந்த வழியாக செல்லும் ஒவ்வொரு பயணியிடமும் தன்னை கோவிலில் கொண்டு போய் பிரதிஷ்டை செய்யுமாறு கேட்குமாம். இந்த கணவாய் குலு பள்ளத்தாக்கினை ராம்பூர், சிம்லா மற்றும் கின்னாருடன் நேரடியாக இணைக்கும் இடமாக உள்ளது. சிம்லாவிலிருந்து மணலிக்கு செல்வதற்கு இந்த கணவாயிலிருந்து செல்லும் பாதையை மோட்டார் பைக் சவாரி செய்வதற்காக தேர்ந்தெடுப்பவர்கள் இந்த மாநிலத்திலேயே மிகச் சிறந்ததாக கருதப்படுகிற இயற்கைக் காட்சிகளை தங்களுடைய பயணத்தின் போது காண்பார்கள்.

Read more about: himachal pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X