Search
  • Follow NativePlanet
Share
» »இரண்டே நாளில் கட்டி முடிக்கப்பட்ட தர்கா..! எதற்காகத் தெரியுமா ?

இரண்டே நாளில் கட்டி முடிக்கப்பட்ட தர்கா..! எதற்காகத் தெரியுமா ?

அஜ்மீரில் என்னவெல்லாம் உள்ளது ? இஸ்லாமியர்கள் அதிகளவில் உள்ள இப்பகுதியில் இரண்டே நாளில் தர்கா கட்டி முடிக்கப்பட்டதன் பின்னனி என்ன என பார்க்கலாம் வாங்க.

இந்தியாவின் வடமேற்கே இயற்கையும், நகரமயமாதளும் கலந்த பிரம்மிப்பூட்டும் அழகுடைய மாநிலம் ராஜஸ்தான். நம் நாட்டின் பாரம்பறிய பெருமைகளைக் கொண்டுள்ள இம்மாநிலத்தில் செல்வச் செழிப்பிற்கும், வரலாற்று பெருமைக்கும் புகழ்பெற்ற நகரம் அஜ்மீர். இம்மாநிலத்திலேயே பெரிய நகரங்களின் பட்டியலில் அஜ்மீரும் இடம்பெற்றுள்ளது. ஆரவல்லி மலைத் தொடரின் இயற்கை அம்சங்களைக் கொண்டுள்ள அஜ்மீர் சுற்றுலாத் தலங்குள்கும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. அப்படி, இங்கே என்னவெல்லாம் உள்ளது ? இஸ்லாமியர்கள் அதிகளவில் உள்ள இப்பகுதியில் இரண்டே நாளில் தர்கா கட்டி முடிக்கப்பட்டதன் பின்னனி என்ன என பார்க்கலாம் வாங்க.

அஜ்மீர்

அஜ்மீர்

அஜ்மீர் நகரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பிரசிதிபெற்றது காஜா மொயின் - உத்- தின் சிஸ்தி எனும் புகழ்பெற்ற சூஃபியின் சமாதி தான். உண்மையில் இதுவோர் தர்கா. தாராகர் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த தர்க்கா ஷரீப் எனும் வழிபாட்டுத் தலம் பிற மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து மதத்தினராலும் ஈர்க்கப்படுகிறது.

Jgnsonir

அஜ்மீர் ஏரி

அஜ்மீர் ஏரி

அஜ்மீரில் உள்ளர் சிற்றுலாவாசிகளின் விருப்பமான இடம் அணா சாகர் ஏரி. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஏரி பேரரசர் ஷாஜஹான் கட்டிய பர்தாரி என்றழைக்கப்படும் மண்டப அமைப்புகளுக்கு அருகில் அமைந்துள்ள அழகிய நீர்நிலையாகும். இப்பகுதிக்கு சுற்றுலா செல்வோர் தவறாமல் பயணிக்க வேண்டிய பகுதி இது.

Singh92karan

இந்து கடவுள் சிலைகள்

இந்து கடவுள் சிலைகள்

அஜ்மீருக்கு பயணித்த மாபெரும் பேரரசர் தங்குவதற்காக கட்டமைக்கப்பட்ட அழகிய கோட்டை தான் தற்போது அஜ்மீர் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 6 மற்றும் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கடவுள்களின் சிலைகள் காணப்படுவது வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

AdityaVijayavargia

அதய் தின் கா ஜோப்ரா

அதய் தின் கா ஜோப்ரா

அதய் தின் கா ஜோப்ரா என்னும் மசூதி வடிவிலான வழிபாட்டுத் தலம் வெறும் இரண்டரை நாட்களில் கட்டி முடிக்கப்பப்பட்ட சாதனைக கட்டிடம் ஆகும். இந்த தின் கா ஜோப்ரா எனும் மசூதி ஒன்று இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலை மேன்மைக்கான உதாரணமாக திகழ்கிறது.

Varun Shiv Kapur

ஜெயின் கோவில்

ஜெயின் கோவில்

அஜ்மீரில் உள்ள ஆன்மீகத் தலங்களில் பிரபலமானது நிம்பர்க் பீடம், நரேலி ஜெயின் கோவில் மற்றும் நசியான் கோவில்கள். இத்தலத்திற்கு முன்னதாக அஜ்மீரின் புனித பயணத்திற்கான தலமாக புஷ்கர் ஏரி திகழ்கிறது. புஷ்கர் ஏரி மற்றும் ஒரு பிரம்மா கோயிலுக்கு புகழ் பெற்று விளங்கும் புஷ்கர் தலத்துக்கு வருடந்தோறும் லட்சக் கணக்கான பயணிகள் வருவது வழக்கம்.

Ramesh Lalwani

நினைவு மண்டபம்

நினைவு மண்டபம்

சோலா கம்பா எனும் நினைவு மண்டபத்துக்கு அதன் கூரையைத்தாங்கும் 16 தூண்களின் காரணமாக அப்பெயர் பெற்றுள்ளது. இது ஔரங்கசீப் மன்னரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தர்க்க ஷெரீப் சமாதிக்கு வெளியிலேயே உள்ள இது காஜா மொயின் - உத்- தின் சிஸ்தி தர்க்காவை நிர்வகித்த ஞானியால் 4 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nizil Shah

லால் மந்திர்

லால் மந்திர்

லால் மந்திர் கோவிலானது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரித்வி ராஜ் மார்க் எனும் இடத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். முதலாம் ஜைன தீர்த்தங்கரரான ஆதிநாதருக்காக இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்தக் கோவிலின் கர்ப்பக்கிருக அமைப்பு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு பிரிவில் ஆதிநாதர் சிலை மற்றும் வழிப்பாட்டுக்கூடமும் மற்றொரு பிரிவில் ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகிறது.

Vaibhavsoni1

கலைநயமிக்க தங்கக் கோவில்

கலைநயமிக்க தங்கக் கோவில்

இக்கோவிலானது தங்கம் மற்றும் வெள்ளியைக் கொண்டு வேலைப்பாடுகள் செயப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட மர வேலைப்பாடுகள், தங்க வண்ண ஓவியங்கள் உள்ளிட்ட கலைநயமிக்க அம்சங்களை இக்கோவில் பெற்றுள்ளது. மேலும், விலைமதிப்பற்ற ஆபரணக் கற்கள், தங்கம், வெள்ளி ஆகியவற்றால் ஆன வேலைப்பாடுகளை கொண்டிருப்பதால் சோனி ஜி கி சையான் என்றும் இந்தக்கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது.

Vaibhavsoni1

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X