Search
  • Follow NativePlanet
Share
» »நவாதா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நவாதா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நவாதா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் இந்த நவாதா கிராமிய மாவட்டப்பகுதி அமைந்திருக்கிறது. முன்பு இது கயா மாவட்டத்தின் அங்கமாக இருந்திருக்கிறது. பிருஹத்ரதா, மௌர்யா, கனஹ் மற்றும் குப்த வம்சத்தினர் இந்த பூமியை வரலாற்று யுகத்தில் ஆண்டு வந்துள்ளனர். ஒரு காலத்தில் ஹிந்து சமூகத்தினரில் ஆன்மீக(மத) கேந்திரமாக இம்மாவட்டம் இருந்து வந்திருக்கிறது.

நவாதா மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

நவாதா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Neil Satyam

கோயில்கள் வீற்றிருக்கும் அழகிய கிராமங்கள் இந்த நவாதா மாவட்டத்தில் ஏராளம் உள்ளன. கண்ணைக்கவரும் இயற்கை எழிற்காட்சிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. நவாதாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சோப்நாத், குணாவா ஜல் கோயில் மற்றும் சங்கத் மோச்சன் மந்திர் போன்றவை இடம் பெற்றுள்ளன. இவை யாவுமே ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட இடங்களாக கருதப்படுகின்றன. ஜைன மதப்பிரிவினருக்கும் இது ஒரு முக்கிய ஸ்தலமாக இருந்து வருகிறது.

மஹாவீரர் முக்தியடைந்த பவன்புரி - தீர்த்தங்கர் எனும் இடம் இப்பகுதியில்தான் உள்ளது. இது தவிர குணாவா எனும் ஜைனக்கோயிலும் இங்கு அமைந்திருக்கிறது. நவாதாவின் முக்கிய சுற்றுலா அம்சமாக கக்கோலட் மலைகளில் உள்ள கக்கோலட் நீர்வீழ்ச்சி பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் ரம்மியமான இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக்கூடாத ஒரு அம்சம் இந்த கக்கோலட் நீர்வீழ்ச்சி.

புராணிக நம்பிக்கைகளின்படி இந்த நீர்வீழ்ச்சியில் கோபிகா ஸ்தீரிகளுடன் ஷீகிருஷ்ணர் நீராடியதாக நம்பப்படுகிறது. இவை தவிர நவாதாவில் நாரத் மியூசியம் மற்றும் ராஜௌலி எனும் இயற்கை அழகுப்பிரதேசம் போன்றவையும் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்களாகும். நவாதாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களான மஹாவீர் ஜயந்தி, ஜன்மாஷ்டமி மற்றும் சத் பூஜா போன்றவையும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.

எப்போது செல்லலாம்?

பருவநிலையை பொறுத்தவரையில் நவாதாவில் கோடைக்காலத்தில் உஷ்ணம் அதிகமாகவும், குளிர்காலத்தில் குளிர் அதிகமாகவும் காணப்படுகிறது. மழைக்காலத்தில் கடும் மழைப்பொழிவும் இருக்கும். செப்டம்பர் வரை மார்ச் வரையிலான மாதங்கள் இங்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு ஏற்றவையாக உள்ளன. இருப்பினும், கக்கோலட் மலையை பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் கோடைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

எப்படி செல்வது?

சாலைப்போக்குவரத்து மற்றும் ரயில் மார்க்கம் ஆகிய இரண்டும் நவாதாவுக்கு பயணம் மேற்கொள்ள ஏற்றவையாக உள்ளன.

Read more about: bihar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X