Search
  • Follow NativePlanet
Share
» »1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா?

1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா?

1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா?

By IamUD

1966ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த நூர் மஸ்ஜித் பட்கல் நகரின் மையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது நிச்சயமாக அந்த நகரின் முக்கிய பார்வையிடங்களில் ஒன்றாகும். மாநிலத்திலேயே சிறந்த மசூதிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த மசூதி 1987ம் ஆண்டில் பழைய வடிவமைப்பை இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளது. 1500 பக்தர்கள் ஒரே நேரத்தில் இந்த மஸ்ஜித்தில் தொழுகையில் ஈடுபட்டிருக்கு அற்புதக்காட்சி கண்டிப்பாக பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் காண வேண்டிய ஒன்றாகும். வாருங்கள் இந்த மஸ்ஜித் குறித்த மற்ற தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

எப்படி அடைவது

எப்படி அடைவது

பட்கலில் இருந்து 6 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது இந்த மசூதி. அதுவும் தேசிய நெடுஞ்சாலை 66 ஐ ஒட்டியே அமைந்துள்ளதால் இது மிகவும் புகழ் பெற்ற தாக விளங்குகிறது. வெறும் 2.2 கிமீ தூரம்தான்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கேதாப்பய்யா நாராயணா கோவில் (3 கிமீ தொலைவில்)

சிவன் கோவில் (3 கிமீ தொலைவில்)

மேற்கு கடற்கரை சாகச நிகழ்வுகள் (5 கிமீ தொலைவில்)

முருதேஸ்வரா பீச் (3 கிமீ தொலைவில்)

Nvvchar

கேதப்பய்ய நாராயணா கோயில்

கேதப்பய்ய நாராயணா கோயில்

பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் நேரம் இருப்பின் இந்த கேதப்பய்ய நாராயணா கோயிலுக்கு அவசியம் விஜயம் செய்யலாம். இது விஜயநகர பாணி கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ளது.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் பல்வேறு அடையாளங்களும் சிற்பவடிப்புகளும் இந்த கோயிலில் காணப்படுகின்றன. நான்கு தூண்களுடன் காட்சியளிக்கும் நவரங்க மண்டபத்தில் அஷ்டதிக் பாலகர்களைக்கொண்ட அமைப்பை இந்த கோயிலில் பயணிகள் காணலாம். மேலும் வனவாசம், ராமாயணம், ராமபட்டாபிஷேகம், புத்திர காமேஷ்டி போன்ற பல்விதமான புராணிக மற்றும் மஹாகாவிய நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் சிற்ப வடிப்புகள் இந்த கோயில் சுவர்களில் இடம் பெற்றுள்ளன.

 துவஜஸ்தம்பம்

துவஜஸ்தம்பம்

கோயில் வாசலில் கொடித்தூண் எனப்படும் துவஜஸ்தம்பம் கோயிலின் அழகை கூட்டும் வகையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த கோயிலின் தீவிர பக்தரும் புரவலருமான கேட்டா பாய் மற்றும் அவரது துணைவியாரின் சிற்ப வடிப்பும் இங்கு கோயிற்சிலையின் அருகில் காணப்படுகிறது.

Read more about: travel karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X