Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க கூர்க் டூர் போகப்போறீங்களா? இதை கண்டிப்பாக படியுங்கள் !!

நீங்க கூர்க் டூர் போகப்போறீங்களா? இதை கண்டிப்பாக படியுங்கள் !!

கூர்க், கர்னாடக மாநிலத்தில் இருக்கும் அற்புதமான மலைவாசஸ்தலமாகும். மடிகேரி, தலைக்காவேரி, நாகரஹோலே தேசிய பூங்கா, குஷால் நகர், கோனிகொப்பல் போன்ற அருமையான இடங்கள் இங்கே இருக்கின்றன. வருகின்ற டிசம்பர் மாதம் முதல் கூர்கில் சுற்றுலா சீசன் துவங்கவுள்ளது. சீசன் காலத்தில் இங்கே சுற்றுலா சென்றால் அவ்வளவாக வசதிகள் இல்லாத ஹோட்டல்களில் அதிக கட்டணம் கொடுத்து தங்க நேரிடும். அதை தவிர்க்க கூர்கில் இருக்கும் மிகச்சிறந்த சுற்றுலா விடுதியை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

நீங்க கூர்க் டூர் போகப்போறீங்களா? இதை கண்டிப்பாக படியுங்கள் !!

கூர்கின் தலைநகரான மடிகேரியில் தீச்சூர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது புஷ்பாஞ்சலி. ஆக்கர் மூன் ஹாலிடே என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுற்றுலா விடுதி கூர்கில் தங்குவதற்கு மிகச்சிறந்த இடமாகும். நகரத்தின் இரைச்சல் எதுவும் இல்லாமல் குடும்பத்தினருடனும் நண்பர்களுடன் சில நாட்களை கழிக்க விரும்புகிறவர்களுக்கு இதை விட சிறந்த தேர்வு இருக்க முடியாது.

நீங்க கூர்க் டூர் போகப்போறீங்களா? இதை கண்டிப்பாக படியுங்கள் !!

பசுமை நிறைந்த இயற்கை அழகு சூழ்ந்த இடத்தில் இருக்கும் இந்த விடுதியில் இருந்து புஷ்பகிரி மலையை கண்கொட்டாது பார்த்துக்கொண்டே இருக்கலாம். இது போன்ற சுற்றுலா விடுதியில் தங்குவதற்கும் ஹோட்டலில் தங்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சுற்றுலா விடுதிகள் (Home Stay) தங்கும் போது வீட்டில் இருப்பது போன்றே உணரலாம்.

நீங்க கூர்க் டூர் போகப்போறீங்களா? இதை கண்டிப்பாக படியுங்கள் !!

அதிலும் சுற்றுலாப்பயணிகளின் தேவையை மனதில் கொண்டு நடத்தப்படும் புஷ்பாஞ்சலி ஹோம் ஸ்டேவில் விசாலமான மூன்று படுக்கை அறைகள், சிறிய தோட்டம், ஒன்றாக அமர்ந்து சாப்பிட டைனிங் ஹால் போன்ற வசதிகள் இருக்கின்றன. அதோடு அதிசுவையான கூர்க் உணவுகள் இங்கே பரிமாறப்படுகிறது.

நீங்க கூர்க் டூர் போகப்போறீங்களா? இதை கண்டிப்பாக படியுங்கள் !!

தலைக்காவேரி மடிகேரி கோட்டை, ஓம்காரேஸ்வரா கோயில் போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்கள் புஷ்பாஞ்சலி ஹோம் ஸ்டேவில் இருந்து வெறும் இரண்டு கி.மீ தொலைவில் இருக்கின்றன. எனவே அடுத்தமுறை கூர்க் வந்தால் இந்த புஷ்பாஞ்சலி ஹோம் ஸ்டேவில் உங்கள் விடுமுறையை இனிமையாக செலவிடுங்கள்.

Read more about: coorg south india hotels
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X