Search
  • Follow NativePlanet
Share
» »கோடை காலத்தில் கட்டாயம் செல்ல வேண்டிய வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்

கோடை காலத்தில் கட்டாயம் செல்ல வேண்டிய வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்

கடந்த சில நாட்களாகவே வாட்டியெடுக்க ஆரம்பித்திருக்கிறது வெயில். மதிய நேரங்களில் வெளியில் நடமாடவே முடியாத அளவுக்கு உச்சி வெயில் மண்டையை பிளக்கிறது. இத்தனைக்கும் இன்னும் கோடை காலம் ஆரம்பிக்கவே இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இந்த வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க குளுகுளு சுற்றுலாத்தலங்களுக்கு செல்வது தான் ஒரே வழி. வாருங்கள், கோடைகாலத்தில் நாம் நிச்சயம் செல்லவேண்டிய வித்தியாசமான சுற்றுலாத்தளங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ரூ.8000 மதிப்பிலான இலவச பயண கூப்பன்களை இங்கே பெற்றிடுங்கள்

மேகமலை :

மேகமலை :

தேனி நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில் உள்ள இடம் தான் மேகமலை மலைப் பகுதியாகும். இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும்.

Photo:Vinoth Chandar

மேகமலை :

மேகமலை :

இன்னும் அதிகம் பிரபலமாகாத சுற்றுலாத்தலமான இந்த மலையில் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் வெள்ளிமலையில் இருந்துதான் தென்தமிழகத்தின் உயிர்நாடியான வைகை நதி உற்பத்தியாகிறது. மேலும் இங்கே பச்சை போர்வை போர்த்தியது போன்ற பசுமையான தேயிலைத்தோட்டங்கள் உள்ளன.

Photo:Nara Simhan

மேகமலை :

மேகமலை :

DSLR கேமரா வைத்திருப்பவராக இருந்தால் இந்த மேகமலை உங்களுக்கு சொர்க்கம் போல காட்சி தரும். யானைகள், புள்ளிமான்கள், பலவகையான அணில்கள் மற்றும் பறவைகள் ஏராளமாக உள்ளன. ஊட்டி, கொடைக்காணல் போன்று இல்லாமல் இந்த மேகமலை சற்றும் மனிதர்களால் மாசுபடாத இடமாக உள்ளது. தூய்மையான இயற்கையை ரசித்திட விரும்புபவர்கள் நிச்சயம் இந்த மேகமலைக்கு வரவேண்டும்.

Photo:Vinoth Chandar

மேகமலை :

மேகமலை :

இந்த மேகமலையை தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அல்லது மதுரை மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் இருந்தும் சென்றடையலாம். மேகமலையில் இரவு தங்க விரும்புபவர்கள் இங்குள்ள விருந்தினர் விடுதியில் அறைகளை முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.

Photo:Vinoth Chandar

மேகமலை :

மேகமலை :

மேகமலையில் இருக்கும் முருகன் கோயில்.

மேகமலை :

மேகமலை :

மேகமலையில் நடமாடும் யானைகள்.

ஏற்காடு :

ஏற்காடு :

தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

ஏற்காடு :

ஏற்காடு :

கிளியூர் அருவி, ஏற்காடு ஏரி, சேர்வராயன் கோயில் போன்றவை இங்கே இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கலாக திகழ்கின்றன. சமீப காலமாக ஏற்காடு ட்ரெக்கிங் சாகசத்தில் ஈடுபட சிறந்த இடமாக பிரபலமாகி வருகிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் சேர்வராயன் விழா கொண்டாடப்படுகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் அந்த விழாவின் போது மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி போன்றவை நடைபெறுகிறது.

ஏலகிரி :

ஏலகிரி :

ஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். தமிழகத்தின் பிற மலைவாசஸ்தலங்களான ஊட்டி, கோடைக்கானல் அளவுக்கு ஏலகிரி வளர்ச்சி அடையவில்லை என்றாலும் சமீபகாலமாக ஏலகிரி மாவட்ட நிர்வாகம் பாராகிளைடிங், மலையேறுதல் முதலிய விளையாட்டு வகைகளை பிரபலப்படுத்துவதன் மூலம் ஏலகிரியை ஒரு சாகச சுற்றுலா மையமாக பிரபலப்படுத்த முயற்சி செய்து வருகிறது

ஏலகிரி :

ஏலகிரி :

வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் அமைந்திருக்கும் ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,410.மீ உயரத்தில் அமைந்திருப்பதால் கோடை காலத்திலும் இங்கே இதமான தட்பவெட்பம் நிலவுகிறது. ஏலகிரியை சுற்றிலும் ரோஜா மலர் தோட்டங்கள் மற்றும் பசுமையான காடுகள் நிறைந்திருக்கின்றன.

ஏலகிரி :

ஏலகிரி :

நிலாவூர் ஏரி, ஏலகிரி:

ஏலகிரி மலையில் படகு சவாரி செய்ய விரும்புகிறவர்கள் போக வேண்டிய இடம் நிலாவூருக்கு தான். அங்கே உள்ள நிலாவூர் ஏரியில் படகு சவாரி செய்தபடியே ஏலகிரி ஏரியை சுற்றி நிறைந்திருக்கும் அழகான இயற்கை காட்சிகளை ரசித்தபடி ஏகாந்தத்தில் ஆனத்தம் கொள்ளலாம். மற்ற இடங்களில் இருக்கும் நீரைக் காட்டிலும் இந்த ஏரியில் தண்ணீர் மிகவும் சுத்தமாக இருப்பது மற்றுமொரு சிறப்பாகும்.

ஏலகிரி :

ஏலகிரி :

கோடை விழா:

கோடை விழா ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கொண்டாடப்படுகிறது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா ஏலகிரியில் வசிக்கும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தையும் , பழக்கவழக்கங்களையும் சுற்றுலாப்பயணிகள் அறிந்து கொள்ள சிறந்த ஒரு தளமாக விளங்குகிறது. இது சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது. இவ்விழா ஏலகிரியில் நடக்கும் மிகமுக்கியமான நிகழ்வாகும்.

ஏலகிரி :

ஏலகிரி :

ஏலகிரியில் இருக்கும் சாகச விளையாட்டுகள் :

மேலே குறிப்பிட்டது போல தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற மலைவாசஸ்தளங்கள் அளவிற்கு இங்கே இயற்கையாக அமைந்த இடங்கள் இல்லை என்றாலும் அதனை சரி கட்டும் விதமாக தமிழ் நாட்டில் வேறெங்கும் இன்னும் அறிமுகமாகியிராத சாகச விளையாட்டுகள் இங்கே இருக்கின்றன. மலை குன்றின் மேல் இருந்து பாராசூட் உதவியுடன் குதிக்கும் 'பாராக்ளிடிங்', சவால் நிறைந்த உயரமான கோபுரத்தின் மீது ஏறுவது போன்ற விளையாட்டுகள் இங்கே உண்டு.

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

உலகத்திலேயே டீ உற்பத்தியாகும் மிக உயரமான இடம் தான் இந்த கொலுக்குமலை. கடல் மட்டத்தில் இருந்து 7500 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் மூணாறில் இருந்து 30 கி.மீ தொலைவில் இன்னும் அதிகமானோர் கேள்விப்பட்டிராத சுற்றுலாதலமாகவே இருந்து வருகிறது. மூணாறைப் போன்றே அற்புதமான இயற்க்கை காட்சிகளை இங்கு பார்த்து ரசிக்கலாம்.

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

தேனி மாவட்டத்தில் கேரளா, தமிழ்நாடு மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த கொலுக்குமலை. மூணாறு வந்து அங்கிருந்து கிழக்கே 23 கி.மீ தொலைவில் உள்ள சூரிய நெல்லி என்கிற இடத்தை அடைய வேண்டும். அதற்குமேல் காரில் பயணம் செல்வது மிகக்கடினம் என்பதால் இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தனியார் ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்திக்கொள்கின்றனர்.

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

மேலே செல்லச்செல்ல இயற்கையின் வர்ணஜாலம் ஆரம்பிக்கிறது. அற்புதமான இயற்கை காட்சிகள் நம் கண்களுக்கு விருந்து படைகின்றன.

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

கொலுக்குமலைப்பதை தனியாருக்கு சொந்தமானது என்பதால் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்தவேண்டும். இங்கு தங்கவேண்டுமானால் கொலுக்குமலை தேயிலை உற்பத்தி ஆலையால் நடத்தப்படும் 3 படுக்கையறை வசதி கொண்ட தாங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

சூரிய உதயம் தான் கொலுக்குமலையின் சிறப்பம்சம் ஆகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அக்காட்சியை நிச்சயம் தவற விடக்கூடாது.

கொலுக்குமலை :

கொலுக்குமலை :

தனியாக கேம்ப் அமைந்து தங்கினால் அது இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இங்கிருக்கும் தேயிலை உற்பத்தி ஆலையில் வெறும் பத்து ரூபாய்க்கு அதிருசியான தேநீர் கிடைக்கிறது.

வால்பாறை :

வால்பாறை :

வால்பாறை மலைப்பிரதேசம் மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக 'தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான சின்னக்கல்லாரை உதாரணமாக சொல்லலாம். இவ்விடம் தோட்டங்களுக்கும், தேனீர் தொழிற்சாலைகளுக்கும், அணைகளுக்கும் பெயர்பெற்றதாக திகழ்கின்றது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X