Search
  • Follow NativePlanet
Share
» »மெட்ராஸ் ஏங்க பெயர் மாறியது ?

மெட்ராஸ் ஏங்க பெயர் மாறியது ?

By Staff

இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, சாலைகளுக்கு ஆங்கிலப் பெயர்கள் இருந்திருக்கின்றன, இன்னும் இருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, நாம் இந்த ஆங்கிலேயே அடையாளங்களைத் துறக்கும் பொருட்டு இந்தியாவின் பல நகரங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டு வருகிறோம். அப்படி பெயர் மாறிய நகரங்கள் என்னென்ன ?

பாம்பே டு மும்பை

பாம்பே டு மும்பை

1996'இல்தான் பாம்பே நகரம், மும்பை என்று பெயர் மாற்றப்பட்டது.

மும்பையின் பூர்வ குடி விவசாயிகளான அகிறிக்களுக்கும், மீனவர்களான கோலிகளுக்கும் குல தெய்வமாய் விளங்கிய மும்பாதேவி அம்மனின் பெயரில் இருந்து தான் 'மும்பை' என்ற சொல் வந்திருக்கிறது.

மெட்ராஸ் டு சென்னை

மெட்ராஸ் டு சென்னை

1996'இல் மெட்ராஸ் சென்னை'ஆனது. இருந்தும், இன்னும் பலர்(குறிப்பாக 80களுக்கு முன் பிறந்தவர்கள்) மெட்ராஸ் பெயரின்மீது ஒரு காதல் கொண்டு பல நேரங்களில் மெட்ராஸ் என்றே விளிக்கின்றனர்.

சென்னப்பட்டினம் என்று முன்பு இருந்தது. சென்னப்பனாயக்கர் என்ற அரசர் ஆண்டிருக்கிறார். பின் ஆங்கிலேயர் காலத்தில் மெட்ராஸ் ஆனது. திரும்பவும் சென்னப்பட்டினம், சென்னை என்று மாறிவிட்டது.

Photo Courtesy :KARTY JazZ

பாண்டிச்சேரி டு புதுச்சேரி

பாண்டிச்சேரி டு புதுச்சேரி

ஃப்ரெஞ்சு காலனியாதிக்கத்தில் பாண்டிச்சேரி என்று இருந்தது. இருந்தும் மக்களால் புதுச்சேரி, பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது. 2006'இல் அதிகாரப்பூர்வமாக புதுச்சேரி என்று ஆனது.

Photo Courtesy :NDSRAM

கல்கத்தா டு கொல்கத்தா

கல்கத்தா டு கொல்கத்தா

சின்ன ஊறுகாய் பிரச்சனைக்குகூட ஊர்வலம் போற ஊர்டா இது அதான் கல்கத்தாங்குற பேர கொல்கத்தான்னு மாத்தி வச்சுறுகாங்க!! பாத்து ஜாக்கிரதையா இருடா!

மேலே உள்ள நகைச்சுவை வசனம் எந்தப் படம் என்று நியாபகம் இருக்கிறதா. மஜ்னு படத்தில் விவேக் சொல்வது.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

2001'இல் கல்கத்தா கொல்கத்தா ஆனது.வங்காள வழக்கான கோலிகத்தாவே கொல்கத்தா என்று ஆனது.

Photo Courtesy : Wikipedia

வால்டேர் டு விசாகப்பட்டினம்

வால்டேர் டு விசாகப்பட்டினம்

ப்ரிட்டிஷ் காலத்தில் வால்டேர் என்று அழைக்கப்பட்டு 1987'இல் விசாகப்பட்டினம் என்று மாற்றப்பட்டது. ஆந்திரம் பிரிந்த பிறகு இதுதான் ஆந்திராவின் மிகப்பெரிய கடலோர நகரம். வைழாக் (Vizag) என்றும் அழைக்கப்படுகிறது.

Photo Courtesy :Sankara Subramanian

பெங்களூர் டு பெங்களுரூ

பெங்களூர் டு பெங்களுரூ

2014'இல் பெங்களூர், பெங்களுரூ ஆனது. அதே போல் மைசூர் மைசூரு, ஹூப்ளி ஹப்பாலி என்று கன்னடம் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் பல கர்நாடக நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.

Photo Courtesy :Augustus Binu

குர்காவ்ன் டு குருக்ராம்

குர்காவ்ன் டு குருக்ராம்

மகாபாரத காலத்தில், மாணவர்களுக்கு வில் வித்தை பயிற்சி அளிப்பதற்கு, பாண்டவர்கள், துரோணாச்சாரியருக்கு, ஒரு கணிசமான நிலத்தை வழங்கினார்கள் .

அந்தப் பகுதிதான் குருக்ராம். பின்னாளில் அது குர்காவ்ன் என்று மாறியது. இப்போதும் மீண்டும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில், குருக்ராம் என்று மாற்ற அதிகாரப்பூர்வமாக அரசு முடிவெடுத்திருக்கிறது.

Photo Courtesy :Pithwilds

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X