Search
  • Follow NativePlanet
Share
» »தெலங்கானாவில் ஒருநாள் முழுமைக்கும் சுற்றலாம் வாங்க

தெலங்கானாவில் ஒருநாள் முழுமைக்கும் சுற்றலாம் வாங்க

தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் எல்லா சுற்றுலாத் தளங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்க்க எங்கே எப்படி எப்போது என்ற பயணவழிகாட்டி இது.

By Udhaya

'தெலுங்கர்களின் நாடு' என்ற பொருளில் அறியப்படும் தெலங்கானா மாநிலம் இந்தியாவின் 29-வது மாநிலமாக ஜூன் 2, 2014-ஆம் ஆண்டு உதயமானது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில், தக்காணப் பீடபூமியில் வாரங்கல், அதிலாபாத், கம்மம், நிஜாமாபாத், நல்கொண்டா, பத்ராச்சலம், மேடக், போச்சம்பல்லி, நாகர்ஜுனாசாகர் மற்றும் மாநிலத் தலைநகர் ஹைதராபாத் ஆகியவற்றை உள்ளடக்கி தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. பண்டைய வரலாறு மகாபாரத காலத்தில் 'தெலவானா' என்ற இனம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் போர் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தெலங்கானா பகுதியே மகாபாரதத்தில் 'தெலிங்கா நாடு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வாருங்கள் இந்த மாநிலத்தின் எல்லாமாவட்டங்களிலும் இருக்கும் சுற்றுலாப் பகுதிகளைப் பார்ப்போம். ஆனா அதுக்கு முன்னாடி இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் பெல் பட்டனைத் தட்டி, இந்த தளத்திலிருந்து தொடர் அப்டேட்டுகளை பெறுங்கள். மேலும் நமது முகநூல் பக்கத்திலும் பின்தொடருங்கள். ஏதேனும் சுற்றுலாத் தொடர்பான சந்தேகங்களுக்கு முகநூல் பக்கத்தின் உள்டப்பியைத் தொடர்புகொள்ளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட்

பண்பாடு

பண்பாடு

கலாச்சாரம் தெலங்கானா பகுதி இஸ்லாமிய மன்னர்களால் பல காலம் ஆளப்பட்டதால் இந்திய மற்றும் பெர்சிய தாக்கம் இங்கு வாழும் மக்களிடையே இயற்கையாகவே காணப்படுகின்றன. அதோடு தென்னகத்தை சேர்ந்திருந்தாலும், வட இந்தியாவில் கொண்டாடப்படும் சில திருவிழாக்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

McKay Savage

பிராந்திய திருவிழாக்கள்

பிராந்திய திருவிழாக்கள்

இது தவிர 'பத்துகம்மா பண்டுகா', போனாலு, சமக்க சாராலம்மா ஜாதரா போன்ற பிராந்திய திருவிழாக்களும் இங்கே கொண்டாடப்பட்டு வருகின்றன. உணவு வகைகள் தெலங்கானா பகுதியில் தெலுங்கு சமையல் வகை மற்றும் ஹைதராபாத் சமையல் ஆகிய இரண்டு உணவு வகைகள் இருக்கின்றன. இவற்றில் தெலுங்கு சமையல் வகை தென்னிந்திய பாணியில் இருக்க, ஹைதராபாத் உணவு வகையோ தெலுங்கு சமையலோடு, அராபிய, துருக்கிய மற்றும் முகாலய பாணிகளை கொண்டு செய்யப்படுகிறது.

Ahmed Mahin Fayaz

தெலங்கானாவின் சுற்றுலாச் சிறப்பு!

தெலங்கானாவின் சுற்றுலாச் சிறப்பு!

தெலங்கானாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அறியப்படுகிறது. சார்மினார், ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி, ஐமேக்ஸ், பிர்லா மந்திர், ஃபலக்னுமா பேலஸ், கோல்கொண்டா கோட்டை, ஹுசேன் சாகர் ஏரி, லாட் பஜார், ஐமேக்ஸ், ஸ்னோ வேர்ல்டு என்று எக்கச்சக்கமான சுற்றுலாப் பகுதிகள் ஹைதராபாத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அதோடு வாரங்கல்லில் உள்ள ஆயிரம் தூண் கோயில், பத்ராச்சலம் போன்ற ஸ்தலங்கள் ஆன்மிக ஸ்தலங்களாக புகழ்பெற்றுள்ளன.

arunpnair

காட்டுச்சுற்றுலா

காட்டுச்சுற்றுலா

1 ஹைதராபாத் நகரத்தில் மீர் ஆலம் குளத்துக்கருகில் அமைந்துள்ள இந்த நேரு ஜுவாலஜிகல் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது.

2 ஹைதராபாத் நகரத்தின் மூன்று முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். 1959-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த வனவிலங்கு பூங்கா 1963-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது.

3 பூங்காவில் பலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊர்வன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.

4 புலி, சிறுத்தை, ஆசியச்சிங்கம், மலைப்பாம்பு, உராங்குடான் குரங்கு, முதலை, காட்டெருமை, கலை மான், மான் மற்றும் இந்திய காண்டாமிருகம் போன்ற விலங்குகள் இங்கேயே வளர்க்கப்பட்டு இனப்பெருக்கம் செய்விக்கப்படுகின்றன.

5 விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இயற்கையான வாழ்விடச்சூழல் கிடைக்கும்படியாக இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

6 காட்டு விலங்குகள் பற்றி தெரிந்து கொள்வதற்கான கல்விக்கூடம் போன்று அமைந்துள்ளதால் குழந்தைகளோடு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் தவறாமல் இந்த வனவிலங்கு பூங்காவுக்கு விஜயம் செய்கின்றனர்.

7 தினசரி இந்த பூங்காவில் யானைச்சவாரி மற்றும் காட்டுச்சுற்றுலா (சஃபாரி) போன்றவை பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

8 இயற்கை வரலாறு பற்றிய காட்சிப்பொருட்களை கொண்டிருக்கும் ஒரு விசேஷ அருங்காட்சியகமும் இந்த வனவிலங்கு பூங்காவில் உள்ளது.

PP Yoonus

நிஜாம் மியூசியம்

நிஜாம் மியூசியம்

1 ஹைதராபாத் நகருக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு பயணியும் கண்டிப்பாக விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் இந்த நிஜாம் மியூசியமும் ஒன்று

2 நிஜாம் மன்னர்களின் அரண்மனைப்பகுதியின் ஒரு அங்கமாக உள்ள இந்த மியூசியத்தில் ஏராளமான ஓவியங்கள், ஆபரணங்கள், அரிய பரிசுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பழமையான கார்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

3 நிஜாம் மன்னர்களுக்கு பரிசாக கிடைத்த ஏராளமான பொருட்கள் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்நாளில் கலாரசனையோடு சேகரித்த அரும்பொருட்கள் ஆகியவை இங்குள்ள சேகரிப்பில் இடம் பெற்றுள்ளன.

4 வெள்ளியில் உருவாக்கப்பட்ட ஹைதராபாத் நகர சின்னங்களின் மாதிரி வடிவமைப்புகளையும் இங்கு பார்வையாளர்கள் காணலாம்.

5 மரத்தாலும் தங்கத்தாலும் செய்யப்பட்ட சிம்மாசனம், வாசனைத்திரவியங்கள் வைப்பதற்கான வெள்ளிக்குப்பிகள், ரத்தினங்கள் பொதிக்கப்பட்ட வெள்ளி காபி குவளைகள், முத்துச்சிப்பி பதிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பேழை போன்றவை இங்குள்ள பொருட்களில் சில.

6 பிரேதப்பெட்டிகள், வைரங்கள் பதித்த தங்க உணவுப்பெட்டி, வெள்ளிசரிகை வேலைப்பாடு கொண்ட யானையும் பாகனும் கொண்ட பொம்மை போன்றவையும் இங்கு பயணிகளை கவரும் அம்சங்களாக காட்சிக்கு உள்ளன.

7 நிஜாம் ராஜ வம்சத்தினரின் நவீன அந்தஸ்து அடையாளங்களான ரோல்ஸ்ராய்ஸ் கார் மற்றும் ஜாகுவார் கார் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை வின்டேஜ் கார் பிரியர்களை வெகுவாக கவர்கின்றன.

Randhirreddy

 கைவினைக்கலை கிராமம்

கைவினைக்கலை கிராமம்


ஷில்பராமம் என்பது மிகப்பிரசித்தமான ஒரு ஓவிய-சிற்ப-கைவினைக்கலை கிராமம் ஆகும். இது மாதப்பூர் ஹைடெக் சிட்டிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரிலிருது 20 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கலைக்கிராமம் ஓவியம் மற்றும் சிற்பக்கலையை பேணவும் கைவினைத்தொழில் நுணுக்கங்களை வளர்க்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.

Sankarshansen

 கலை மரபு

கலை மரபு


ஆந்திரப்பாரம்பரிய கலையம்சங்களை மட்டுமல்லாமல் எல்லா மாநில கலை மரபுகளையும் பேணும் பரந்த நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய கைவினைப்பாரம்பரிய மரபுகளை காப்பாற்றி ஆதரிக்கும் நோக்கத்துடன் வருடந்தோறும் இங்கு பாரம்பரிய திருவிழாக்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

Sen

திருவிழாகண்காட்சிகள்

திருவிழாகண்காட்சிகள்

1992ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த கலைக்கிராமம் இங்கு நடத்தப்படும் திருவிழாகண்காட்சிகள் மூலம் நாடு முழுவதும் அறியப்படும் புகழை பெற்றுள்ளது. இந்த திருவிழாக்கண்காட்சிகளின்போது பார்வையாளர்களுக்கு அற்புதமான இந்திய கைவினைப்பொருட்களை பார்க்கவும் வாங்கவும் வாய்ப்பு கிடைப்பதோடு, இது போன்ற பாரம்பரிய கலையம்சங்கள் அழிந்துபோகாமல் இருக்க உதவுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

Nikhilb239

மனதுக்கு சாந்தி

மனதுக்கு சாந்தி


பாரம்பரிய ஆபரணங்கள், தையல் வேலைப்பாடு செய்யப்பட்ட உடைகள், கையால் செதுக்கப்பட்ட பல்வேறு மர அலங்கார பொருட்கள் மற்றும் அறைகலன்கள் போன்றவற்றை இந்த கலைக்கிராமத்தில் பயணிகள் வாங்கலாம். பசுமையான புல்வெளிகளை கொண்டிருக்கும் இந்த கலைக்கிராமத்தை பார்த்து ரசிப்பதும் மனதுக்கு சாந்தியளிக்கும் ஒரு இனிய அனுபவமாகும்.

KALX999

ஸ்பானிஷ் மசூதி

ஸ்பானிஷ் மசூதி

1 ஹைதராபாத் நகரில் உள்ள இந்த ஸ்பானிஷ் மசூதியானது இந்தியாவிலேயே இதுபோன்று ஒன்றே ஒன்றுதான் எனும் புகழை பெற்றுள்ளது.

2 ஐவான் - இ - பேகம்பேட் அல்லது மஸ்ஜித் உத் தௌலா என்று உள்ளூர மக்களால் அழைக்கப்படுகிறது.

3 பைகா வம்சத்தை சேர்ந்த நவாப்பான சர் இக்பால் உத் தௌலா என்பவர் ஸ்பெயின் நாட்டுக்கு விஜயம் செய்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த கொர்டோபா கதீட்ரல் பாணி மசூதியை பார்த்து அவற்றின் அழகில் மிகவும் கவரப்பட்டார்.

4 ஊர் திரும்பிய அவர் அதேபோன்ற ஒரு மசூதியை உருவாக்க விரும்பி 1906ம் ஆண்டில் இந்த ஸ்பானிஷ் மசூதி கட்டுமானத்தை துவங்கியுள்ளார்.

5 ஸ்பெயின் நாட்டிலுள்ள கொர்டோபா கதீட்ரல் மசூதியைப்போன்றே இது வடிவமைக்கப்பட்டது. இருப்பினும் கர்நாடகாவில் உள்ள குல்பர்கா ஜமா மசூதியிலிருந்தும் சில வடிவமைப்பு அம்சங்கள் இதன் உருவாக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

6 மூர் வம்ச கட்டிடக்கலை அம்சங்களை கொண்டிருப்பதால் இது மூர் மசூதி என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு கதீட்ரல் தேவாலயம் போன்ற காட்சியளிக்கும் தனித்தன்மை காரணமாக இது உலகளாவிய புகழை பெற்றுள்ளது.

7 கட்டிடக்கலை அம்சத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய அம்சம் இந்த ஸ்பானிஷ் மசூதி என்பதில் சந்தேகமே இல்லை.

Nikkul

ஓஸ்மான் சாகர் ஏரி

ஓஸ்மான் சாகர் ஏரி


1 ஹைதராபாத் நகரிலுள்ள இந்த ஓஸ்மான் சாகர் ஏரி உள்ளூர் மக்களால் கண்டிபேட் என்றும் அழைக்கப்படுகிறது.

2 ஹுசேன் சாகர் ஏரியை போன்றே மற்றுமொரு செயற்கை ஏரியான இது மூஸி ஆற்றில் ஒரு அணையை கட்டும்போது உருவாக்கப்பட்டுள்ளது.

3 1920ம் ஆண்டில் உருவான நாள் முதல் இந்த ஏரி ஹைதராபாத் நகரம் மற்றும் சுற்றியுள்ள நகரங்களுக்கான நீராதாரமாக விளங்கி வருகிறது.

4 வெள்ளப்பெருக்கிலிருந்தும் இப்பகுதியை ஓஸ்மான் சாகர் ஏரி பாதுகாத்துவருகிறது. இந்த ஏரி உருவாவதற்கு முன்னர் 1908ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் வெள்ளப்பெருக்கில் ஹைதரபாத் நகரம் முழுவதுமே பெரும் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Swaanan

 கடைசி நிஜாம் மன்னர்

கடைசி நிஜாம் மன்னர்


1ஹைதரபாத் நகரத்தின் கடைசி நிஜாம் மன்னரான ஓஸ்மான் அலி கான் என்பவரது ஆட்சியில் கட்டப்பட்டதால் இந்த ஏரிக்கு அவரது பெயரே வைக்கப்பட்டுள்ளது.

2 ஏரியை நோக்கியவாறு கட்டப்பட்டிருக்கும் ஒரு அரண்மனை மாளிகை சாகர் மஹால் என்று அழைக்கப்படுகிறது. நிஜாம் மன்னர் ஓஸ்மான் அலி கான் இந்த மாளிகையை கோடை ஓய்வு மாளிகையாக பயன்படுத்தியுள்ளார்.

3 அழகிய ஏரிப்பகுதியை ரசிக்க உதவும் பாரம்பரிய நினைவுச்சின்னமாக இந்த மாளிகை வீற்றுள்ளதோடு தற்போது ஒரு சொகுசு ரிசார்ட் விடுதியாகவும் இது இயங்குகிறது.

Karunakanth

ஆயிரம் தூண் கோயில்

ஆயிரம் தூண் கோயில்

1 ஆயிரம் தூண் கோயில் என்றழைக்கப்படும் இந்த புராதனக்கோயில் மஹாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் சூரியக்கடவுள் ஆகியோர் உறையும் ஆலயமாக இது வீற்றிருக்கிறது.

2 1163ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான ருத்ரதேவ் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. நுணுக்கமாக வடிக்கப்பட்ட 1000 தூண்களைக்கொண்டதாக அமைந்துள்ளதால் இதற்கு ஆயிரம் தூண் கோயில் என்ற பெயர் வந்துள்ளது.

3 கலையம்சம் கொண்ட வாசல் அலங்கார அமைப்புகள், தூண்கள், கூரைவிமான அமைப்புகள் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் போன்றவை இந்த கோயிலில் நிரம்பியுள்ளன.

4 இது வாரங்கல் கோட்டைக்கு அடுத்தபடியாக வாரங்கல் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது.

ஹனுமகொண்டா மலை

ஹனுமகொண்டா மலை

கோயிலின் பின்னணியில் ஹனுமகொண்டா மலை வீற்றிருப்பது இந்த கோயிலின் அழகை இன்னும் கூட்டுகிறது. வழவழப்பான ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஒரு நந்தி ஒன்றும் கோயிலின் வாசலிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை மயங்க வைக்கும் கட்டிடக்கலை அற்புதங்களுடன் இந்த கோயில் அமைதியாக வீற்றிருக்கிறது. ஒப்பற்ற கலைத்திறமையின் உச்சமாக விளங்கிய காகதீய அரசாட்சிக்காலத்தை எதிரொலிக்கும் இந்த கோயில் காலங்களைக் கடந்து நீடித்து நிற்கிறது. தென்னிந்தக்கோயில்களிலேயே மிகப்பழமையான அற்புதக்கோயிலாக வரல்லாற்றியல் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களால் இந்த ஆயிரம் தூண் கோயில் கருதப்படுகிறது.

Shishirdasika

 தெலங்கானாவை எப்படி அடைவது?

தெலங்கானாவை எப்படி அடைவது?


தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையமான ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் ரயில் மற்றும் சாலை மூலமாக தெலங்கானாவை எந்த சிரமமுமின்றி அடைந்துவிட முடியும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X