Search
  • Follow NativePlanet
Share
» »ஓர்ச்சா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஓர்ச்சா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஓர்ச்சா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

பெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர்ச்சா, இந்தியாவின் இதயப்பகுதி போன்ற மத்தியப்பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பந்தல்கண்ட் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய மன்னரான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் 1501-ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட ஓர்ச்சா, உத்தரப்பிரதேசத்தின் ஜான்ஸியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் நிறுவனரான மஹாராஜா ருத்ர பிரதாப் சிங் அவர்களே இதனை முதன்முதலில் ஆண்ட மன்னராவார்.

ஓர்ச்சா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது


Damini1992

ஓர்ச்சா சுற்றுலாத் தலங்கள்

ஒரு மன்னரால் உருவாக்கப்பட்டு ஆளப்பட்ட ஓர்ச்சா, நெஞ்சார்ந்த பாராட்டுகளுக்குரியனவும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியனவுமாகிய பல கட்டிடங்களைக் கொண்டுள்ளது. சந்திரஷேகர் ஆசாத் நினைவகம், சாத்ரிகள், தௌஜி கி ஹவேலி, தின்மான் ஹர்டாலின் அரண்மனை, ஃபூல் பாக் போன்றவை ஓர்ச்சாவில் உள்ள சில அற்புதமான ஸ்தலங்களாகும். ஓர்ச்சா சுற்றுலாத்துறை, ராஜா மஹால், ராணி மஹால், சுந்தர் மஹால், லக்ஷ்மி நாராயண் கோயில் போன்ற பல இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கின்றது.

ஓர்ச்சா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bgabel

ஓர்ச்சாவில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் செலுத்தப்படும் கட்டுமரத்தில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பெறலாம். இது சாகச விரும்பிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும். ஓர்ச்சா அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்காகவும் பெரிதும் அறியப்படுகிறது. இது பெரிய நகரமாக இல்லாவிடினும், இங்கு வாழ்ந்து வரும் மக்கள் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் பழகி வருகிறார்கள் என்பதை விழாக் கொண்டாட்ட சமயங்களில் கண்கூடாகக் காணலாம்.

ஓர்ச்சா - பேரெழில் பொங்கும் ஸ்தலம்!

பிரபல நகரமான ஓர்ச்சாவின் எல்லைக்குள் பொதிந்திருக்கும் சொக்க வைக்கும் அழகை ரசிக்கவரும் பயணிகளை ஓர்ச்சா சுற்றுலாத்துறை பெருமையுடன் வரவேற்கிறது. இந்த எழில்மிகு நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான மஹால்கள், கோயில்கள், அரண்மனைகள் மற்றும் அழகிய கட்டுமானங்கள் பார்த்து ரசிக்கும் பொருட்டு அணி வகுக்கின்றன. ஓர்ச்சா பயணத்தின் அற்புதமான நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது செலவிட வேண்டும்.

ஓர்ச்சாவை அடைவது எப்படி?

ஜான்ஸி மற்றும் ஓர்ச்சாவிற்கு இடையிலான தூரம் சுமார் 16 கி.மீ. ஆகும். சாலை வழி போக்குவரத்து சேவைகள் எளிதாகக் கிடைக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் ஓர்ச்சாவில் ரம்மியமான வானிலையே நிலவுகிறது.

Read more about: madhya pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X