Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்!

கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்!

our lady of immaculate conception Goa, Goa tourism, travel to Goa, அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் , கோவா சுற்றுலா, கோவா பயணக் கட்டுரை

By Udhaya

கோவா என்று சொன்னாலே பலருக்கும் அதன் தலைநகர் பனாஜிதான் நினைவுக்கு வரும். இந்த பனாஜி, மிகப்பெரிய நகரமல்ல, அதேபோல் அதிக மக்கள் தொகையையும் கொண்டிருக்கவில்லை. எனினும் கேளிக்கைக்கும், கொண்டாட்டத்துக்கும் மையமாக விளங்கும் பனாஜி உங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கப் போவது நிச்சயம். பனாஜி நகரம் கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு மகிழ்ச்சி வெள்ளம் மட்டுமே கரைபுரண்டு ஓடுமே தவிர, வேறு வெள்ளத்தை நீங்கள் ஒரு போதும் காண முடியாது. கோவா மதச்சார்பற்ற சுற்றுலாத் தளம் என்றாலும் கூட, இங்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் உட்பட பல கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர்கள். அதுமட்டுமில்லாமல் இங்கு வாழும் மக்கள் பெரும்பகுதியினர் கிறித்தவர்கள். அவர்களுக்காக பல தேவைலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்!

Klaus Nahr

கோவாவில் எத்தனையோ வரலாற்று சிறப்பு வாய்ந்த தேவாலயங்கள் இருக்கின்ற போதும்அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் அவற்றுக்கு மத்தியில் தனித்துவ அழகோடு காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த தேவாலயம் கோவா தலைநகர் பனாஜியில் அமைந்திருக்கிறது. அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் தேவாலயத்துக்குள் காலடி எடுத்து வைத்த உடனே அதன் மாசற்ற வீதிகளும், உருளைக்கற்கள் பதித்த நடைபாதைகளும், எல்லவற்றுக்கும் மேலே கன்னி மேரியின் மிகப்பெரிய சிலையும் உங்கள் கவலைகளையெல்லாம் நொடிப்பொழுதில் மறக்கச் செய்து விடும்.

கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்!

AaronC's Photos

இந்த தேவாலயம் 1541-ஆம் ஆண்டு கட்டப்பட்டாலும், 1619-ஆம் ஆண்டில்தான் அதன் பணிகள் முழுமையடைந்தது. இதன் வெளிப்புற தோற்றத்தை விட, உட்புற தோற்றத்தின் எளிமை அனைவரையும் சுலபத்தில் கவர்ந்துவிடும். இங்கு உள்ள பிரதான பூஜை மாடம் அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதோடு மேரிக்கு கீழே உள்ள இரண்டு பூஜை மாடங்களில் ஒன்று ஏசு கிறிஸ்துவுக்கும், மற்றொன்று அவர் லேடி ஆஃப் ரோசரிக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பிரதான கட்டிடத்தில் செயின்ட் ஃபிரான்ஸிஸுக்காக அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோட்டம் ஒன்றும் இருக்கிறது. அவர் லேடி ஆஃப் இம்மாக்குலேட் கான்செப்ஷன் தேவாலயத்தின் வெண்ணிறத் தோற்றம் இரவு நேரத்தில் அலங்கரிக்கபட்டிருக்கும் மின்விளக்குகளால் ரெட்டிப்பு அழகுடன் காட்சியளிக்கும்.

கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்!

Josephdesousa

மேலும் இந்த தேவலாயத்தின் சுற்றுப் பகுதிகளில் எண்ணற்ற அங்காடிகள் பரபரப்புடன் இயங்கி வருவதால் இங்கு வரும் யாத்ரிகர்களுடன், சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் அதிகமாக காணப்படும். இந்த தேவாலயத்துக்கு வாஸ்கோ, மார்கோ போன்ற தெற்கு கோவா பகுதிகளிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர பாகா, கலங்கூட், கேண்டலிம் உள்ளிட்ட வடக்கு கோவா பகுதிகளிலிருந்து வருபவர்கள் வாடகை கார்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Read more about: goa travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X