Search
  • Follow NativePlanet
Share
» »அண்ணன்தம்பிகளை சிலையாக மாற்றிய பாடகபிள்ளையார்! காதலை எதிர்த்தால் நடந்த அதிசயம்!

அண்ணன்தம்பிகளை சிலையாக மாற்றிய பாடகபிள்ளையார்! காதலை எதிர்த்தால் நடந்த அதிசயம்!

By Udhaya

காதல் என்றால் எந்த பெற்றோரும் ஒரு நிமிடம் யோசிப்பார்கள்,. அவர்களைப் பொறுத்த வரை நம் பிள்ளைகள் நல்ல இடத்தில் சென்று வாழ வேண்டும். நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அப்படி அவர்களின் எண்ணம் இருக்கையில் பிள்ளைகளோ பெற்றோரை எதிரியாக பார்க்கிறார்கள். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறது. பிள்ளைகளுக்கும் மனவருத்தத்தை தராமல், பெற்றோர்களையும் சம்மதிக்கவைத்து திருமணத்திலும், திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையிலும் எந்த பிரச்சனையும் வராமல், அப்படியே வந்தாலும் தாங்கும் சக்தியை தரும் ஒரு அற்புத ஆலயம் திருநெல்வேலியில் உள்ளது. என்ன காதல் நிறைவேற கோயிலா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இங்கு வந்து சென்றவர்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாகவே வீட்டில் பிரச்சனை நீங்கி திருமண நிகழ்வு நடந்துள்ளது. வாருங்கள் அந்த கோயிலைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

எங்கேயுள்ளது

எங்கேயுள்ளது

பாடகலிங்கம், மகாலிங்கம் ஆகியோரை மூலவராகக் கொண்டுள்ள இந்த கோயில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது.

வில்வம் தல விருட்சமாக இருக்கும் இந்த கோயிலில், தீர்த்தம் பாடகலிங்க தெப்பமாகும். இது பக்தர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தீர்த்தமாகும். இதை தெளிப்பதால் நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Jarek Tuszyński

 திருவிழாக்கள்

திருவிழாக்கள்

இந்த கோயிலின் முக்கிய திருவிழா ஓணம் பண்டிகை ஆகும். கேரள பண்டிகை யான ஓணம் ஏன் இங்கு கொண்டாடப்படுகின்றது என்பதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. இது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு இங்குள்ள மலையாள மக்களும் ஒரு காரணமாகும்.

இந்த பகுதியை ஆண்ட கேரள மன்னர் இந்த கோயிலை கட்டினார் என்பது வரலாறு. அதிலும், இந்த கேரளப்பகுதி அப்போது இருந்தே மிக பிரபலமானதாகும். ஒரு முறை இங்கு வந்து சென்றால் காதல் நிறைவேறும் என்பதாலும், காதல் திருமணம் கை கூடும் என்பதாலும் இளைஞர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

மற்றொரு பண்டிகை பங்குனி உத்திரம். இது பெரும்பாலும் நிறைய கோயில்களில் கொண்டாடப்படும்.

Sailko

மூன்று நாள் சிறப்பு

மூன்று நாள் சிறப்பு

சாஸ்தா என்பவர் பெருமாள் மற்றும் சிவன் இருவரின் அமைப்பால் பிறந்தவர். அவருக்காக இந்த பகுதியில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு சிறப்பு மூன்று நாட்களுக்கு நீங்காமல் நடக்கும். மூன்று நாட்களிலும் சிறப்பு பூசைகளும், விழா நிகழ்ச்சிகளும் கலை கட்டும். பக்தர்கள் வருகை தந்து சிறப்பிப்பார்கள்.

Adityamadhav83

விழாவின் முக்கிய நிகழ்வு

விழாவின் முக்கிய நிகழ்வு

இவ்விழாவின் முக்கிய நிகழ்வு என்று பார்த்தால், பாடகலிங்க நாச்சியாரை சுனையிலிருந்து அழைத்து வரும் வைபவம்தான். இது பொதுவாகவே திருவிழா காலங்களில் மற்ற கோயில்களில் நடக்கும் விசயம்தான் என்றாலும், இந்த கோயிலில் இது மிக சிறப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது.

விழாவின் மூன்றாவது நாளில் சுவாமிக்கு சிறப்பு பூசைகளும், எண்ணெய்க் காப்பிட்டு அலங்காரமும் நடக்கும்.

KedarnathReddy

 சிலையாக மாறிய மனிதர்கள்

சிலையாக மாறிய மனிதர்கள்

காதலுக்கு எதிரியானதால் சிலையாக மாறிய மனிதர்கள் இந்த கோயிலில் இன்றும் சிலையாக உள்ளனர். ஏழு பேர்.. அந்த ஊரில் மிகவும் நல்ல வசதியாக வாழ்ந்துவந்தனர். இதில் இளையவள் ஒரு பெண். அவளுக்கு அருகில் இருக்கும் ஒருவனுடன் காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் அவர்களின் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் ஓடி வந்து இந்த கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டான் அவன். இதை அறிந்த பெண்ணின் சகோதரர்கள் கத்தி, அரிவாளுடன் தாக்க வர, கிட்டத்தட்ட தன் கணவனை இழந்துவிட்டாள் அப்பெண்.

பிள்ளையாரின் சந்நிதியில் நடந்த இந்த கொலைக்கு பிள்ளையார்தான் தீர்வு தரவேண்டுமென தன்னைத் தானே பிள்ளையாருக்கு அர்ப்பணித்தாள் அவள். உயிரை மாய்த்தாள். அப்போது அந்த எழுவரையும் சிலையாக மாறச் செய்து இந்த கொலைக்கு தண்டனை வழங்கினாராம் பிள்ளையார். கணவன் மனைவி இருவரையும் தனது அருகே அழைத்துக்கொண்டாராம். அவர்களும் சிலையாக இருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

Upendra1978

என்னவெல்லாம் இருக்கிறது

என்னவெல்லாம் இருக்கிறது

மூலஸ்தானத்தில் மகாலிங்கம், பாடலிங்கம் ஆகிய இரண்டு லிங்கங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. இவை கொஞ்சம் சிறிய வகையைச் சார்ந்தவையாகும். இந்த லிங்கங்களுக்கு இடையே ஒரு சிறிய வகை நந்தியும் அமைந்துள்ளது. இந்த லிங்கத்துக்கு இருக்கும் சக்தி அதே அளவில் இந்த நந்திக்கும் இருப்பதாக நம்பிக்கை.

இந்த லிங்கங்களுக்கு பின்புறம் சித்ரபுத்ர சாஸ்தாவும், பாடகலிங்க நாச்சியாரும் உள்ளனர்.

Thamizhpparithi Maari

பாடகபிள்ளையார் கோயில்

பாடகபிள்ளையார் கோயில்

இந்த கோயிலுக்கு பாடக பிள்ளையார் கோயில் என்று பெயர் வரக் காரணம், இந்த கோயிலுக்கு வரும் காதலர்கள் கட்டாயம் ஒன்றிணைவார்கள் என்பதால்தானாம். இந்த கோயிலின் மூலவர் பாடகலிங்கசுவாமிதான் என்றாலும், காதலர்களை சேர்த்து வைப்பரவாயின் அவரது பெயராலே பாடகபிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

Alanvel

மற்ற தெய்வங்களும் அருகிலுள்ள கோயில்களும்

மற்ற தெய்வங்களும் அருகிலுள்ள கோயில்களும்

இந்த கோயிலில் சங்கிலி பூதம், தளவாய் மாடன், மாடத்தி, வனப் பேச்சி, தர்மசாஸ்தா, பிரம்மராட்சி, கெங்காதேவி, பேச்சி, விடுமாடத்தி, விடுமாடன், தக்கராஜன், சுடலைமாடன், கருப்பசாமி ஆகிய காவல் தெய்வங்களும் இந்த கோயிலில் இருக்கிறார்கள்.

இதன் அருகில் நீலமணிநாத கோயில், ஆதிவராகர், தோத்தாத்திரிநாதன், சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், லட்சுமி நாராயணர், வீரமார்த்தாண்டேஸ்வரர், பேராத்துச் செல்வி கோயில்,அகத்தீஸ்வர் கோயில், காசிநாதசுவாமி கோயில், தென்னழகர், கிருஷ்ணசுவாமி, திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பாலசுப்ரமணியசுவாமி கோயில், தீப்பாச்சியம்மன் கோயில் ஆகியன இருக்கின்றன.

H. Grobe - Own work

வழிபாடும் செயல்பாடும்

வழிபாடும் செயல்பாடும்

திருமண தோசம் நீங்க, புத்திர தோசம் மறைய, வீடு குதூகலித்திருக்க இங்கு வந்து பிரம்மரட்சி தாய்க்கு தாலி அணிவித்து குங்குமம், மஞ்சள், பச்சை கற்பூரம், பன்னீர், விளக்கெண்ணெய் சேர்த்து மஞ்சணை செய்து நெற்றியில் சாத்தி வழிபடுகின்றனர். இதனால் தோசம் நீங்கி, திருமணம் நடக்கிறதாம். மேலும் குழந்தை இல்லாதவர்கள் இங்கு இந்த முறையில் 18 தடவை தொடர்ந்து ஈடுபட குழந்தை பிறக்குமாம்.

படையல் வைத்து, சக்கரைப் பொங்கல் சாத்தி வழிபடுகிறார்கள்.

Rangakuvara

வாருங்கள் செல்லலாம்

வாருங்கள் செல்லலாம்

திருநெல்வேலியிலிருந்து கிட்டத்தட்ட 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கல்லிடைக் குறிச்சி என்னும் அழகிய ஊர். இங்கிருந்து 9 கிமீ தூரத்தில் உள்ளது இந்த கோயில். பேருந்து வசதிகள் இரண்டு மூன்று மணிக்கு ஒரு முறைதான் இருக்கிறது என்பதால் வாடகை வண்டிகளில் செல்வது சிறந்தது.

இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையமாகும்.

மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் விமான நிலையங்கள் உள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X