Search
  • Follow NativePlanet
Share
» »இத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்!

இத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்!

பழனியாண்டவர் கோயிலின் தெய்வம் தண்டாயுதபாணி ஆவார்.

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். அழகு எனும் பொருளில் பெயர் கொண்ட முருகப் பெருமான் தமிழர்கள் வாழும் இடங்களில் ஆட்கொண்டிருப்பார். உலகில் தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இடங்களில் பழனி மிக முக்கியமான இடமாகும்.வாருங்கள் பழனி கோவிலுக்கு செல்வோம்.

பழனி நகரம், இந்தியாவில் உள்ள ஒரு மிக பழமையான மலைப் பிரதேசம் ஆகும். பழனி என்ற வார்த்தை பழம் மற்றும் நீ என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் இந்த பழனி மலை பாளையக்காரங்களின் தாயகமாக விளங்கியிருக்கிறது. தற்போது இந்த பழனி மலை உலக மக்களின் பார்வையைஅதிக அளவில் ஈர்த்து வருகிறது. அதற்கு காரணம் பழனி மலையின் உச்சியில் பழனி தண்டாயுதபாணி சுவாமியாக எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே.

பழனியைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை பல ஆன்மீக ஏடுகள் குறிப்பிடுகின்றன. மதுரை மற்றும் கோயம்புத்தூர் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக பல காலங்கள் பழனி இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு இருக்கும் பெரிய நாயகி அம்மன் ஆலயம், பாண்டிய மற்றும் நாயக்க மன்னர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பழனிக்கு சுற்றுலா சென்று மகிழ்ந்து, தண்டாயுதபாணியின் அற்புதங்களைப் பற்றி அறிந்து அவர் அருளைப் பெற்று வாருங்கள்...

தண்டாயுதபாணி ஆலயம்

தண்டாயுதபாணி ஆலயம்

பழனியில் முக்கியமாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று பழனி தண்டாயுதபாணி ஆலயம் ஆகும். முருகப் பெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த ஆலயம் பழனி மலையின் உச்சியில் கம்பீரமாக அமைந்திருக்கிறது.

PC: Adityamadhav83

எத்தனை படிகள் தெரியுமா?

எத்தனை படிகள் தெரியுமா?

இந்த மலைக்கு மேலுள்ள கோயிலுக்கு போக 600 படிகள் ஏறவேண்டும். குடும்பத்தோடு பழனி மலை ஏறினால் குடும்பம் செழித்து விளங்கும் என்பது ஐதீகம்.

PC: Athi S

ரோப் கார்

ரோப் கார்

இந்த மலை மீது ஏறுவதை எளிமையாக்கும் வகையில் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இரவு மற்றும் பராமரிப்பு பணிகள் இடைவேளைத் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் ரோப் கார் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.


PC: Ranjithsiji

கட்டியது யார்?

கட்டியது யார்?

தண்டாயுதபாணி ஆலயத்திலிருந்து பழனி நகர் முழுவதையும் தெளிவாகப் பார்க்கலாம். தண்டாயுதபாணி ஆலயம் சேர மன்னன் சேரமான் பெருமாலால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Pc: SivRami

கட்டடக்கலை

கட்டடக்கலை


தங்கள் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் பாண்டியர்களும், சோழர்களும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து பல வசதிகள் செய்துள்ளனர். கோபுரங்கள், மண்டபங்கள் இதன் சிறப்பாக சொல்லலாம்.

PC: palanimurugantemple

பறவைகளின் சொர்க்க பூமி

பறவைகளின் சொர்க்க பூமி

பறவைகளை விரும்புவோரின் சொர்க்கமாகவும் பழனி விளங்குகிறது.

ஏனெனில் நைட் ஹெரான்ஸ், இக்ரெட்ஸ், கோல்டன் பேக்ட் உட்பெக்கர்ஸ் போன்ற வெளிநாட்டு புலம்பெயர் பறவைகளை இந்த பகுதியில் சாதாரணமாக பார்க்கலாம்.

டிரெக்கிங்க் எனும் மலையேற்றம்

டிரெக்கிங்க் எனும் மலையேற்றம்

மலை ஏறுபவர்களுக்கும் இந்த பழனி மலை ஒரு ஏற்ற இடமாக இருக்கிறது.

PC: Renju George

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அழகாக பசுமையான சூழலில் அமைந்துள்ளது பழனி.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

போகர் சமாதி, இடும்பன் ஆலயம், சரவண பொய்கை, குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி, பெரிய நாயகி அம்மன் ஆலயம், வரதமனதி அணை, தேக்கந்தோட்டம் நீர்வீழ்ச்சி, திரு ஆவினன் குடி முதலிய சுற்றுலாத் தளங்கள் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தைச் சுற்று உள்ளது.

நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளாணட் தமிழ்

தைப்பூச விழா

தைப்பூச விழா

பழனி முருகன் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். உலகின் எந்த மூலையில் முருகன் கோவில் இருந்தாலும் தைப்பூச விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். பழனியில் கொண்டாடப்படும் தைப்பூசம் பற்றியும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

William Cho

எப்போது கொண்டாடுவார்கள்?

எப்போது கொண்டாடுவார்கள்?

தை மாதம் தமிழர்களுக்கு புனிதமானதாக நம்பப்படுகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும், பௌணர்மியும் ஒரே நாளில் வரும். அந்த நாளே தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. ஜனவரி 21ம் தேதி தான் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

Nestor's Blurrylife

 பழனி தைப்பூச சிறப்புகள்

பழனி தைப்பூச சிறப்புகள்


தைப்பூசம் கொண்டாடப்படும் நாள்தான் உலகம் தோன்றியதாக நம்பப்படுகிறது.

முருகன் என்பதற்கு தமிழில் அழகு என்று பொருள். தருகாசூரனை வதம் செய்த நாளே தைப்பூசம் ஆகும்.

சிவபெருமானும் பார்வதியும் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடிய நாள் என்றும் கூறுகிறார்கள்.

முருகன் கோவில் தவிர்த்து சில சிவன் கோவில்களிலும் வெகு விமர்சையாக தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

Dassmahen

 பழனி கோவிலுக்கு எப்படி செல்லவேண்டும்

பழனி கோவிலுக்கு எப்படி செல்லவேண்டும்


தைப்பூச திருநாளில் பழனி கோவிலுக்கு செல்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்று கின்றனர். அதுதான் விரத முறை.

அதிகாலை 4 மணிக்கு விழித்து குளித்து முடித்து விட்டு, முருகனை வழிபட வருகிறார்கள். சிலர் பால்குடம், காவடி எடுத்தல், அன்னதானம் செய்தல் என அவரவர் வசதிக்கேற்ப வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

William Cho

 பல வகையான காவடிகள்

பல வகையான காவடிகள்

அலகு குத்துதல் என்பது நம்மில் பலருக்கு தெரியும். நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

தீர்த்தக் காவடி என்று அழைக்கப்படும் வழிபாடு கொடுமுடியிலிருந்து காவிரி தீர்த்தம் பக்தர்களால் நடந்தே எடுத்து வரப்படுகிறது.

மச்சக்காவடி எனும் சிறப்பு வழிபாடு மீன் நீருடன் பக்தர்களால் காலார நடந்து எடுத்து வரப்படுகிறது.

பறவைக் காவடி கொஞ்சம் ரிஸ்க் ஆனது போன்று தோன்றும். அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.

பால் காவடி எல்லா ஊர்களிலும் எடுத்து வருவதைப் போல பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

சர்க்கரை காவடி என்பதை சர்க்கரை பொதி, பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது. இது மயில் காவடி என்று அழைக்கப்படுகிறது.

DaphneBreemen

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X