Search
  • Follow NativePlanet
Share
» »இந்த இடத்துல வைரங்கள் கொட்டிக் கிடக்குதாம்!

இந்த இடத்துல வைரங்கள் கொட்டிக் கிடக்குதாம்!

இந்த இடத்துல வைரங்கள் கொட்டிக் கிடக்குதாம்!

மத்திய பிரதேச மாநிலத்தில், புகழ்பெற்ற வைரச் சுரங்கங்களைக் கொண்ட நகரம் பண்ணா. இந்த வைரங்கள், உலகத் தரம் வாய்ந்தவைகளாக இல்லாவிட்டாலும், இதனை பலரும் விரும்பி வாங்குகின்றனர். ஒவ்வொரு மாத இறுதியிலும், மாவட்ட நீதிபதி முன்பாக இந்த வைரங்கள் ஏலம் விடப்படுகின்றன. மேலும், இது ஒரு சிறந்த ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. தன்னை அறிந்து சுய விழிப்பு நிலை அடைதல் குறித்து மஹாமதி பிரன்னாத் அவர்கள் போதனை செய்த இடம் பண்ணா. மேலும், இங்கு தான் அவர் ஜகனி கொடியையும் தோற்றுவித்தார். 11 வருடங்கள் தன் சிஷ்யர்களுடன் வாழ்வைக் கழித்த மஹாமதி அவர்கள், பண்ணா நகரில் ஜீவ சமாதி அடைந்தார்.

இந்த இடத்துல வைரங்கள் கொட்டிக் கிடக்குதாம்!

Benchmark3

பண்ணா சுற்றுலாத் தலங்கள்

பண்ணா நகரில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலம் பண்ணா தேசியப் வன விலங்குப் பூங்கா. இது தவிர பாண்டவர் குகை மற்றும் நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவருகின்றன. இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்கள், பண்ணா நகரத்திற்கு வந்து, இங்குள்ள பூங்காக்கள், வன விலங்குகள் பறவைகள் மற்றும் பல இயற்கை சூழல்களை கண்டு ரசிக்கலாம்.

புலிகளின் சரணாலயம்!

பண்ணா தேசியப் பூங்கா, சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் சுற்றுலாத் தளமாக திகழ்கிறது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புலிகளைக் காணலாம். கஜூரஹோவிற்கு அருகில் இந்தப் பூங்கா அமைந்திருக்கிறது. இதனைச் சுற்றி பல்வேறு கேளிக்கை விடுதிகளும், தங்கும் இடங்களும் உள்ளன.

பண்ணாவை அடைவது எப்படி?

ரயில், பேருந்து மூலமாக பண்ணா நகரத்தைல் எளிதில் அடையலாம். பண்ணா நகரின் கோடை காலத்தில் வெயில் அதிகமாக உணரப்படும். ஆனால் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை வெப்பம் குறைந்து சுற்றிப் பார்ப்பது ஏதுவாக இருக்கும்.

Read more about: madhya pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X