Search
  • Follow NativePlanet
Share
» »வாங்க வானத்துல இருந்து குதிக்கலாம்

வாங்க வானத்துல இருந்து குதிக்கலாம்

எத்தனையோ ஹாலிவூட் படங்கள்ல எல்லாம் பார்த்திருப்போம் ஹீரோ அப்படியே வானத்துல இருந்து பாராசூட்ல வந்து இறங்கி வில்லனுகள பொரட்டி எடுக்குறத. அதே மாதிரி நாமளும் எப்பவாவது செய்யனும்னு ஆசைப்பட்டிருக்கீங்களா. அந்த கனவை நிஜமாக்குற நேரம் வந்தாச்சு. வாங்க வானத்துல இருந்து பாரசூட்ல குதிக்கலாம்.

புகைப்படம்: Karthik Chandrasekariah

மகாராஷ்டிரா மாநிலத்தோட தலைநகரான மும்பைல இருந்து 110 கி.மீ தொலைவில் இருக்கிற ஒரு கிராமம் தான் காம்சேத்னு அழைக்கப்படுற கர்மச்சேதிரம். ரொம்பவும் சின்ன கிராமமான இங்க இன்னமும் மக்கள் குடிசைகளில் தான் இருக்காங்க. இருந்தும் இந்த இடம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தளமா விளங்குது. பச்சப்பசேல்னு இருக்கிற மலைகள், செழுமையான விவசாய நிலங்கள்னு ஒரு அழகான கிராமத்துல என்னவெல்லாம் இருக்கணுமோ அது எல்லாமே இங்க இருக்கு. ஆனா இந்த விஷயங்கள் எல்லாத்தையும் மீறி காம்சேத் புகழ் பெறக்காரணம் இங்க அக்டோபர் மாதத்துல தொடங்கி ஜனவரி வரைக்கும் நடக்குற பாராக்ளைடிங் விளையாட்டுகள் தான்.

சரி மொதல்ல பாராக்ளிடிங்னா என்ன?

புகைப்படம்: Karthik Chandrasekariah

தலைகீழா குட்டிக்கரணம் அடிச்சாலும் தன்னால காக்கா மாதிரியோ கழுகு மாதிரியோ பறக்க முடியாதுன்னு தெரிஞ்சுகிட்ட மனுஷன் கண்டுபிடிச்ச ஒரு சாகச விளையாட்டு தான் இந்த பாரக்ளைடிங். ரொம்ப உறுதியான அதேசமயம் எடையே இல்லாத இறகு மாதிரியான ஒரு பொருளை ரொம்ப உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் போது விரிச்சு பிடிக்குறது மூலமா அது நாம குதிக்கிற வேகத்தை குறைத்து பறக்குற மாதிரியான ஒரு அனுபவத்தை கொடுக்கும். ரொம்ப ரொம்ப எளிமையான அதே சமயம் மனிதனுக்கு அதிகபட்ச பறக்கும் அனுபவத்தை கொடுக்குறதுதான் இந்த பாரக்ளைடிங் விளையாட்டு.

ஆர் யு ரெடி?

முறையாக பயிற்சி எடுத்துகிட்டவங்க மட்டும் தான் தனியா பாராக்ளைடிங் செய்ய அனுமதிக்கப்படுறாங்க. கொஞ்சம் தவறு நடந்தாலும் மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்குற ஆபத்தும் இந்த விளையாட்டுல நிறையா இருக்கிறது. முறையா பாராக்ளைடிங் பயிற்சி எடுத்துக்க கொஞ்ச நாட்கள் தேவைப்படுவதால் இங்க சுற்றுலாப்பயணிகள் டாண்டம் பாரக்ளைடிங் மூலம் இந்த சாகசத்தில் ஈடுபடலாம்.

புகைப்படம்: Karthik Chandrasekariah

ஏற்கனவே நன்றாக பயிற்சி பெற்ற ஒருவரின் உதவியுடன் குதிப்பதால் இந்த டாண்டம் பராக்ளைடிங் செய்ய முன் அனுபவமோ, பயிற்சியோ தேவையில்லை. 8-10 நிமிடங்கள் வரை நாம் வானத்தில் மிதக்கலாம் அப்படியே இந்த அனுபவத்தை படம்பிடிக்க விசேஷ கேமராக்களும் இங்கு கிடைக்கின்றன.

வாங்க வானத்துல இருந்து குதிக்கலாம்

புகைப்படம்: Len Matthews

காம்சேத்தில் டவுன் ஹில் மற்றும் வேஸ்ட் டேக் ஆப் ஆகிய இடங்களில் இருந்து பாராக்ளைடிங் செய்யலாம். முறையாக பயிற்சி எடுத்து தனியாக பாராக்ளைடிங் செய்ய விரும்புகிறவர்களுக்கு என்றே நிறைய பயிற்சி பள்ளிகளும் இங்கு உள்ளன.

சரி பாராக்ளைடிங் தவிர வேறு என்ன இருக்கிறது?

மலையேற்றம் (Trekking) செல்ல அருமையான மலைகள் காம்சேத்தில் உள்ளன. ஜம்போலி என்னும் இடத்தில் இருந்து கொண்டேஸ்வரர்கோயில் அருவி வரை இருக்கும் மலைப்பாதை அதிக சிரமம் இல்லாதது. முதல் முறை மலையேற்றம் செல்பவர்களுக்கும் எற்ற பாதை இது. கடல் மட்டத்தில் இருந்து 2200 அடி உயரத்தில் அமைந்திருக்கும் வடிவளி ஏரி சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டுரசிக்க அருமையான இடம். பட்ஜெட்டுக்குள் வரக்கூடிய தாங்கும் விடுதிகள் இங்கு நிறைய இருப்பதால் குறைவான செலவில் நிறைவான ஆனந்தத்தை பெறலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X