Search
  • Follow NativePlanet
Share
» »அள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்!

அள்ளித் தரும் மகாலட்சுமி... நாலு தலைமுறைக்கு செல்வம் தரும் கோயில்கள்!

ஒருவரது வாழ்வில் கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றும் இருந்தால்தான் அவரது வாழ்க்கை நல்ல நிலையில் இருக்கும் என்பது மக்களது நம்பிக்கை. இவை மூன்றில் நடைமுறையில் மற்ற இரண்டையும் விட செல்வம்தான் அதிக முக்கி

By Udhaya

ஒருவரது வாழ்வில் கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றும் இருந்தால்தான் அவரது வாழ்க்கை நல்ல நிலையில் இருக்கும் என்பது மக்களது நம்பிக்கை. இவை மூன்றில் நடைமுறையில் மற்ற இரண்டையும் விட செல்வம்தான் அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. அதை நோக்கியே மக்களின் மன ஓட்டமும் செல்கிறது. இதனால் மனித மனங்களைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நமக்கு ஒரு விசயம் புரிவதில்லை. நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் உயரும்போதுதான் நாமும் உயர்வோம் என்று. அதே நேரத்தில் செல்வம் நமக்கு எளிதில் கிடைப்பதில்லை. அதற்கென நிறைய மெனக்கெடல்கள், தியாகங்கள் செய்யவேண்டியிருக்கும். தொழிலில், கல்வியில் அதிக கவனம் செலுத்தி நம் குறிக்கோள்களை அடைய முயற்சிக்க வேண்டும். அது மட்டும் போதுமா என்றால், இல்லை நிச்சயம் இல்லை. லட்சுமியின் அருள் வேண்டும். அவள்தானே செல்வத்தின் அதிபதி.. அப்படி லட்சுமியை வழிபட்டால் நாலு தலைமுறைக்கும் செல்வம் சேர்க்கலாம்.

லட்சுமி நாராயணர் திருக்கோயில்

லட்சுமி நாராயணர் திருக்கோயில்

விருதுநகர் மாவட்டத்தில் காரிசேரி எனும் பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் திருக்கோயில். இங்கு வைகுண்ட ஏகாதசி நாட்களில் வெகு சிறப்பான கொண்டாட்டங்கள் நிகழும்.

Bazar Art

நடை திறப்பு

நடை திறப்பு

காலை எட்டு மணிக்கு திறக்கப்படும் நடை 12 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

Rajivhk

 நவபாஷாண சிலை

நவபாஷாண சிலை

மூலவர் சிலை, நவபாஷாணத்தால் செய்யப்பட்டிருக்கும். இதுவே இந்த கோயிலின் சிறப்பாகும். இதனால் இது சிறிய கோயிலாக இருந்தாலும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஏனெனில் பெருமாள் சிலையை நவபாஷாணத்தில் பார்ப்பது அரிதாகும்.

Ssriram mt

வழிபாடு

வழிபாடு

திருவோண நட்சத்திரத்துக்கு முன்பு 28 நாட்கள் விரதம் இருந்து பின்பு லட்சுமி நாராயணரை வணங்குகிறார்கள். இப்படி வணங்கினால் மனதில் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு வருகை தருவதால் செல்வம் நிறைந்து வீடு வளமாகும் என்பது சிறப்பு. பல அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் இந்த கோயிலுக்கு சனிக்கிழமைகளில் வருகை தருகிறார்கள்.

Ssriram mt

லட்சுமி நரசிம்மர் ஆலயம்

லட்சுமி நரசிம்மர் ஆலயம்

பிரகலாத வரதன் உற்சவராக இருக்க, அமிர்தவல்லி தாயாருடன், லட்சுமி நரசிம்மர் வீற்றியுள்ள கோயில் விழுப்புரம் மாவட்டம் பூவரசங்குப்பத்தில் அமைந்துள்ளது. நெல்லியை தலவிருட்சமாக கொண்ட இந்த கோயிலில், சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

Ssriram mt

நடை திறப்பு

நடை திறப்பு


காலை 6 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 8 மணி வரையிலும் இயங்கும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், அதிக அளவு பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த காலங்களில் வருகை தந்து தரிசித்தால் இறைவன் செல்வங்களை அள்ளித் தந்து உங்கள் குடும்பத்தை நலமுடன் இருக்கச் செய்வார் என்பது நம்பிக்கை.

mckaysavage

வழிபாடு

வழிபாடு

எல்லா முயற்சிகளையும் செய்தாகிவிட்ட பிறகு, இனி எதுவுமிலை என விரக்தியடைபவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபடுவதால் செய்த பிழை நீங்கி வாழ்வில் நல்லொளி வீசும் என்றும், பின் அவரவர் குடும்பம் நல்ல நிலையை அடையும் என்பதும் நம்பிக்கை,. ஆண்டாள் சன்னதி தனியாக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில், அமிர்த பல்லவி என அழைக்கப்படும் இக்கடவுள் வேண்டியதை வழங்குகிறாள்.

Sudharsun.j

கனகவல்லி லட்சுமி நரசிம்மர் கோயில்

கனகவல்லி லட்சுமி நரசிம்மர் கோயில்

விழுப்புரம் மாவட்டம், பரிக்கல் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த கனகவல்லி லட்சுமி நரசிம்மர் கோயில். வைகுண்ட ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.

Raja Ravi Varma

நடை திறப்பு

நடை திறப்பு

காலை 6 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை திறந்திருந்து பின் அடைக்கப்படுகிறது. உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கிறது இந்த கோயில்.

Bikashrd

தலச்சிறப்பு

தலச்சிறப்பு

இந்த கோயிலில் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமியை நரசிம்மர் ஆலிங்கனம் செய்தபடியும் இருக்கிறார்கள், பொதுவாக நரசிம்மர் கோயிலில் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்தபடி இருப்பதுதான் நரசிம்மரின் சிறப்பாகும்.

Jean-Pierre Dalbéra

மகாலட்சுமி குபேரன் திருக்கோயில்

மகாலட்சுமி குபேரன் திருக்கோயில்


விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலின் தல விருட்சம் தாமரை. சித்ரா பவுர்ணமி, அட்சய திருதியை, கோகுலாஷ்டமி உள்ளிட்ட பல விழாக்களின்போது இந்த இடம் மிக அழகாக காட்சியளிக்கிறது , கொண்டாட்டங்களால் கோலாகலமான இந்த இடம் மிகவும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும் இடமாகவும் உள்ளது.

Rajasekhar1961

நடை திறப்பு

நடை திறப்பு

காலை 6.30 மணி முதல் 1.30 மணி வரை திறந்திருக்கும் நடை பின் இடைவேளைக்கு பிறகு மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த சமயங்களில் அதிக அளவு பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்து அருள் பெற்று செல்கின்றனர். இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படுகிறது.

தினமும் காலை 7 மணிக்கு மகாலட்சுமி மீது சூரியனின் கதிர்கள் படர்கின்றன. இது மிக அதிசயமாக பார்க்கப்படுகிறது.

Sujit kumar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X