Search
  • Follow NativePlanet
Share
» »அமிர்தசரஸில் தங்கக் கோயில் தவிர வேறென்ன இருக்கு தெரியுமா?

அமிர்தசரஸில் தங்கக் கோயில் தவிர வேறென்ன இருக்கு தெரியுமா?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல குருத்வாரா கோயில்கள் இந்த அம்ரித்ஸர் நகரில் அமைந்துள்ளன. இவற்றில் முக்கியமானதாக தங்கக்கோயில் என்று அழைக்கப்படும் ‘ஹர்மந்திர் சாஹிப்’ கோயிலை குறிப்பிடலாம். சீக்கிய மத

By Udhaya

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல குருத்வாரா கோயில்கள் இந்த அம்ரித்ஸர் நகரில் அமைந்துள்ளன. இவற்றில் முக்கியமானதாக தங்கக்கோயில் என்று அழைக்கப்படும் 'ஹர்மந்திர் சாஹிப்' கோயிலை குறிப்பிடலாம். சீக்கிய மதத்தினர் மத்தியில் புனிதமான வழிபாட்டுத்தலமாகவும் தலைமைப்பீடமாகவும் கருதப்படும் இந்த கோயில் தினமும் 10000 யாத்ரீக பக்தர்களை உலகெங்கிலிருந்தும் ஈர்க்கிறது. கால்சா எனப்படும் மத அமைப்பின் தலைமைக்கேந்திரமாக கருதப்படும் ஷீ அகால் தக்த் இந்த கோயில் வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கிறது. தங்கக்கோயில் மட்டுமல்லாமல் அம்ரித்ஸர் நகரில் பிபேக்சர் சாஹிப், பாபா அதல் சாஹீப், ராம்சர் சாஹிப் மற்றும் சந்தோக்ஸர் சாஹீப் போன்ற கோயில்களும் அமைந்திருக்கின்றன. சீக்கியர்களுக்கான யாத்ரீக ஸ்தலமாக மட்டுமன்றி அம்ரித்ஸர் நகரம் முக்கியமான வரலாற்று பின்னணி வாய்க்கப்பட்ட பூமியாகவும் அறியப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் 'ஜாலியன் வாலா பாக்' படுகொலை எனும் துக்க நிகழ்வு 1919ம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்தது.

அழியா அரியணை

அழியா அரியணை

ஸ்ரீ அகால் தக்த் எனும் பெயருக்கு ‘அழியா அரியணை' என்பது பொருளாகும். சீக்கியர்களின் ஆன்மீக தலைமை அமைப்பான ‘கால்சா'வின் பீடமாக இந்த ஸ்ரீ அகால் தக்த் செயல்படுகிறது. சீக்கிய குரு ஸ்ரீ குரு கோபிந்த் அவர்களால் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கம்பீர மாளிகை இந்தியாவிலுள்ள ஐந்து தக்த் பீடங்களில் உச்சமான ஒன்றாக வீற்றிருக்கிறது. தங்கக்கோயில் எனப்படும் ஹர்மந்திர் சாஹிப் குருத்வாரா வளாகத்திலேயே இந்த ஷீ அகால் தக்த் பீடம் அமைந்திருக்கிறது. சீக்கிய பாரம்பரியத்தின் உன்னத கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் ஐந்து அடுக்குகளை கொண்ட கம்பீர மாளிகை அமைப்பாக இந்த ஷீ அகால் தக்த் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது

Amarpreet.singh.in

மந்திர் மாதா லால் தேவி

மந்திர் மாதா லால் தேவி


மந்திர் மாதா லால் தேவி எனும் இந்த வழிபாட்டுத்தலம் அம்ரித்ஸர் நகரில் ராணி கா பாக் எனும் பூங்கா வளாகத்தின் அங்கமாக அமைந்துள்ளது. இது 20 ம் நூற்றாண்டில் பிரபல்யமாக வாழ்ந்த பெண் யோகி ஒருவரின் பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரை பூஜ்ய மாதாஜி என்று குறிப்பிட்டு வந்தனர். தற்போது அம்ரித்ஸர் நகரத்தின் முக்கியமான ஹிந்து வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக பிரசித்தமாக விளங்கும் இந்த கோயில் கத்ராவிலுள்ள புகழ் பெற்ற மாதா வைஷ்ணோ தேவி கோயிலைப்போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வெகு தூரங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த கோயிலை தரிசிக்க வருகை தருகின்றனர்.

Own work

மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம்

மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம்

அம்ரித்ஸர் நகரில் உள்ள அழகான ராம்பாக் தோட்டப்பூங்காவில் இந்த மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் அமைந்துள்ளது. துவக்கத்தில் ராஜவம்சத்தினரின் கோடைக்கால மாளிகையாக விளங்கிய இந்த கட்டிடம் மஹாராஜா ரஞ்சித் சிங் உரிமையில் இருந்து பின்னர் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. தோட்டபூங்காவின் வாசலில் உள்ள ஒரு பிரம்மாண்ட வாசல் அமைப்பை கடந்து இந்த அருங்காட்சியக மாளிகையை சென்றடையலாம். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு ஆயுதக்கருவிகள், புராதன நாணயச்சேகரிப்புகள் மற்றும் எழுத்துப்பிரதிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை முகலாயர் காலத்தை சேர்ந்தவையாகும். பஞ்சாப் பகுதியை ஆண்ட மன்னர்களின் அரண்மனைகள், அரசவைக்காட்சிகள், ராஜ வம்சத்தினரின் கூடார வாச காட்சிகள் போன்றவை சித்தரிக்கப்பட்டுள்ள வண்ண மை ஓவியங்களையும் இங்கு பார்க்கலாம். உலகப்பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரத்தின் மாதிரி வைரம் ஒன்றும், மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் பயன்படுத்திய முத்திரை பொதிக்கப்பட்ட பர்வானா ஒன்றும் இங்குள்ள இதர விசேஷமான காட்சிப்பொருட்களாகும். சீக்கிய இனத்தாரின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்த ஆழமான தகவல்களை அளிக்கும் இந்த அருங்காட்சியகம் தவறாமல் விஜயம் செய்யப்படவேண்டிய இடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

www.punjabmuseums.gov.in

 கைசர் பாக்

கைசர் பாக்

கைசர் பாக் எனும் இந்த அழகிய தோட்டப்பூங்கா முகாலயர் கால அம்சங்களும் காதிக் ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களும் கலந்த ஒரு அற்புத வளாகமாக அம்ரித்ஸர் நகரில் அமைந்திருக்கிறது.

1845-50 ம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தோட்டப்பூங்கா வளாகம் நாற்கர வடிவில், வாசற்பகுதியில் படிக்கட்டு அமைப்புகளோடு காட்சியளிக்கிறது.

நுழைவாயில் அமைப்பானது ஒரு பாலம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. அந்த பாலம் போன்ற அமைப்பில் இந்தோ-காதிக் பாணியில் கட்டப்பட்டிருக்கும் கோயில் ஒன்றும் கண்ணக்கவரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

கைசர் பாக் தோட்டபூங்காவின் பிரதான அம்சமாக அதன் நடுவில் ஒரு மாட மைதானம் அமைந்திருக்கிறது. இதன் மூன்று புறங்களில் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் கட்டுமானங்கள் காணப்படுகின்றன.

பல்வேறு மாட அமைப்புகள், அலங்கார விதான மாடங்கள் போன்றவற்றை கொண்டுள்ள இந்த பூங்கா புகைப்பட ரசிகர்கள் விரும்பக்கூடிய ஒரு எழிற்பிரதேசமாகும். பகல் நேரத்தில் அம்ரித்ஸர் நகரை சுற்றிப்பார்க்க விரும்பும் பயணிகள் இந்த பூங்காவுக்கு விஜயம் செய்வது அவசியம்.

Aditya somani

துர்கியானா கோயில்

துர்கியானா கோயில்


துர்கியானா கோயில் எனும் இந்த பிரசித்தமான ஹிந்து கோயில் அம்ரித்ஸர் நகரில் துர்க்கைக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. லட்சுமி நாராயண் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த வழிபாட்டுத்தலம் 20ம் நூற்றாண்டில் ஹர்சாய் மால் கபூர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தங்கக்கோயிலை ஒத்திருக்கும் வடிவமைப்புடன் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக அறியப்படும் பண்டித மதன் மோகன் மாள்வியா இந்த கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். இந்த கோயில் வளாகத்தில் பல ஹிந்து கடவுள்களின் சிலைகள் காணப்படுகின்றன. துர்க்கா, சீதா மற்றும் ஹனுமான போன்ற கடவுள்களின் சிலைகளை இங்கு தரிசிக்கலாம். துர்க்கையின் பல்வேறு அவதார தோற்றங்கள் கோயிலின் சுவர்ப்பகுதியில் அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கின்றன. ஹிந்து வேத நூல்களின் சாரங்களும் சுவரில் பொறிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. வெள்ளியால் ஆன வாசற்கதவுகளை கொண்டிருப்பதால் வெள்ளிக்கோயில் என்றும் இந்த கோயில் அழைக்கப்படுகிறது. அம்ரித்ஸர் நகரத்திற்கு வருகை தரும் ஹிந்து யாத்ரீகர்கள் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வழிபாட்டுத்தலமாக இந்த துர்கியானா கோயில் பிரசித்தி பெற்றுள்ளது.

Own work

கோபிந்த்கர் கோட்டை

கோபிந்த்கர் கோட்டை


கோபிந்த்கர் கோட்டை அல்லது பாங்கியான் டா கிலா என்று அழைக்கப்படும் இந்த புராதன கோட்டை அம்ரித்ஸர் நகரில் தவறாமல் தரிசிக்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும். குஜ்ஜார் சிங் பாங்கி என்பவரது படையினர் இந்த கோட்டையை கட்டியுள்ளனர். 1760ம் ஆண்டில் கற்கள் மற்றும் சுண்ணாம்புக்கலவை பயன்படுத்தி நான்கு கொத்தளங்களுடன் இந்த கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 1805-1809ம் ஆண்டுகளில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்த கோட்டையை மறு கட்டுமானம் செய்துள்ளார். 1849 ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த கோட்டையை கைப்பற்றி இதில் உள்ள தர்பார் ஹால், ஹவா மஹால் மற்றும் பான்சி கர் போன்ற இணைப்புகளை உருவாக்கினர். 1919ம் வருடத்தில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டையர் இந்த பான்சி கர் மாளிகையில்தான் வசித்துள்ளார். சுதந்திரத்திற்குப்பின் இந்த கோட்டை இந்திய ராணுவத்தினர் வசம் வந்தது. 1948ம் ஆண்டு பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க இது பயன்பட்டது. இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக இருந்த இந்த வரலாற்றுக்கோட்டை 2006ம் ஆண்டு பஞ்சாப் முதல் அமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங் அவர்களால் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது

Gobindgarh Fort

Read more about: travel temple india punjab
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X