Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் ஜோடியுடன் நியூஇயர் கொண்டாட ஏற்ற இடங்கள் எதுலாம் தெரியுமா?

உங்கள் ஜோடியுடன் நியூஇயர் கொண்டாட ஏற்ற இடங்கள் எதுலாம் தெரியுமா?

இன்னும் குறைந்த நாள்களே உள்ள நிலையில், புது வருடத்தை வரவேற்க தயாராக இருக்கிறவங்க நியூ இயர் கொண்டாட இந்த இடத்துக்கு கூட்டி போயி உங்க பிரெண்ட்ஸ் இல்லனா லவ்வர சந்தோசப்படுத்துங்க....

By Udhaya

என்னங்க.. 2016 க்கு டாட்டா பை பை சொல்லி கடய மூடற நேரம் வந்தாச்சி. அப்றோ 2017 புது வருசத்த வரவேற்க தயாராகிட்டீங்களா? உங்க நண்பர்களோட, காதலி அ காதலனோட புது வருசம் பொறக்குற அன்னிக்கு மகிழ்ச்சியா கொண்டாடனும்னு ஆசை படுறீங்களா அப்போ இந்த இடங்களயும் மனசுல வச்சிக்கோங்க.. குறைந்த பட்ஜெட்ல நெறஞ்ச கொண்டாட்டம்...

சென்னை மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரை

நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக போக விரும்புவது சென்னை மெரினா கடற்கரைதான். கிட்டத்தட்ட இரவு 8 மணிக்கே கடற்கரையில் விழா ஆரம்பித்துவிடும். நியூ இயர் கொண்டாட்டத்தின்போது கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டமாக இருக்கும் சென்னை மெரினா கடற்கரை. இங்கே கொண்டாட்டத்துக்கும் பஞ்சமிருக்காது. ஆடல், பாடல் என நள்ளிரவில் அமர்க்களமாகும் சென்னை.

PC: Aslamwonders

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

கடற்கரையைச் சுற்றியுள்ள அண்ணா சமாதி, எம்ஜியார் சமாதி, காமராஜர் நினைவகம் உள்ளிட்ட இடங்களிலும் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும். அதுமட்டுமின்றி நீங்கள் சென்னையில் உள்ள பல்வேறு மால்களிலும் புதுவருட கொண்டாட்டங்கள் களைகட்டும்.

PC: Balasubramanian G Velu

பெசன்ட்நகர் கடற்கரை

பெசன்ட்நகர் கடற்கரை


சென்னை மெரினாவிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள மற்றொரு கடற்கரை எல்லியட்ஸ் கடற்கரை. நீங்கள் புது வருட கொண்டாட்டத்தை நிகழ்த்த இந்த இடம் மிகச்சிறந்ததாகும். மெரினா அளவுக்கு இங்கு கூட்டம் இருக்காது என்பதாலும், இங்கு அதிக அளவில் காதலர்கள் வருகின்றனர்.

PC: *sha!*

பெசன்ட்நகர் கடற்கரை

பெசன்ட்நகர் கடற்கரை

இது திருவான்மியூரிலிருந்து, வடக்கு திசையில் அமைந்துள்ளது. இதற்கு சற்று தொலைவில் சான் தோம் தேவாலயம் இருக்கிறது. இங்கும் புது வருடத்தின் போது சிறப்பான கொண்டாட்டங்கள் நிகழ்த்தப்படும். வடபழநி, பிராட்வே, பெரம்பூர் முதலிய இடங்களிலிருந்தும் இங்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

PC:KARTY JazZ

கோவா

கோவா

இது தான் என் கனவு அப்டினு காலேஜ் படிக்கிறப்போ ஒவ்வொரு பையனும் நினைத்திருப்பான். அது வேற எதும் இல்ல கோவா வுக்கு வாழ்க்கைல ஒரு தடவயாச்சும் போய்ட்டு வந்துரணுங்குறதுதான். உங்க நண்பர்களுடன் நல்லா கொண்டாட வேண்டும் சற்று செலவு ஆனாலும் பரவாயில்லை அப்படின்னா. உடனடியா கோவாவுக்கு டிக்கெட் எடுத்துடுங்க..

PC: Anoop Negl

கோவா

கோவா

பீச், பார்ட்டி, கார்னிவல்ஸ் னு ஊரே அதிரக்கூடிய வகையில் கோவாவில் கொண்டாட்டங்கள் களைக்கட்டும்.

புது வருட காலங்களில் இன்ப சுற்றுலாவுக்கு ஏத்த இடம் இந்த கோவா பீச். புதுசா திருமணம் ஆனவங்களா நீங்க. அப்போ தொந்தரவே இல்லாம கொண்டாடவும் கோவாவில் இடம் இருக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்து அதிரிபுதிரியாக கொண்டாடவும் கோவாவில் இடம் உள்ளது.

PC: RItash Chand

புதுச்சேரி

புதுச்சேரி

பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரியில் இருக்கும் கடற்கரை புது வருட கொண்டாட்டத்திற்கு உகந்ததாக இருக்கும். சுத்தமான தெருக்கள், அழகான கடற்கரைகள், விதவிதமான மதுபான வகைகள் என ஊரே கொண்டாடப்படும். தமிழ்நாட்டை விட குறைந்த விலையில் கிடைப்பதால் அநேக நண்பர்கள் பாண்டிச்சேரியில் புதுவருடத்தைக் கொண்டாட முடிவெடுத்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது.


PC: V Hari Krishna Nukala

படகு குழாம் தீவு

படகு குழாம் தீவு

இதுவும் புதுச்சேரியில் தான் இருக்கிறது. புதுவருட கொண்டாட்ட தினத்தில் மேலும் பல இடங்களுக்கு சென்று வரலாம். அதில் முக்கியமான ஒன்றுதான் இந்த படகு குழாம். கண்ணை கவரும் பச்சை பசேலென்று காட்சியளிக்கும் இந்த படகு தீவு காதலர்களை மிகவும் கவரக்கூடியது. மேலும் இங்கு புதுச்சேரி தாவரவியல் பூங்கா, முற்றிலும் பிரெஞ்சு முறையில் கட்டப்பட்ட கௌபர்ட் அவென்யூ, ஆயி மண்டபம், அரசு பூங்கா என பல்வேறு இடங்கள் பார்ப்பதற்கு உள்ளன.

PC: Akash Bhattacharya

மங்களூரு தண்ணீர் பவி

மங்களூரு தண்ணீர் பவி

கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ள இந்த இடம் தண்ணீர் பவி என்று அழைக்கப்படுகிறது. புதுமணத்தம்பதிகள், காதலர்கள் இங்கு சென்று புதுவருட கொண்டாட்டத்தை மகிழலாம். ஏனென்றால் இங்கு கூட்டநெரிசல் என்பதே கிடையாது. அதிக அளவில் மக்கள் நெரிசல் மிக்க இடங்களில் உங்கள் கொண்டாட்டம் தடைபடலாம். அதுபோன்று கருதுபவர்கள் இந்த கடற்கரையில் உங்கள் துணையுடன் கொண்டாடலாம்.

PC: Harshith

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்

கொஞ்சம் அதிகமாக காசு செலவழிந்தாலும் பரவாயில்லை ஆனால் இரண்டு,மூன்று நாள் மகிழ்ச்சியா இருந்துட்டு வரணும்னு ஆசப்படுறீங்களா. அப்போ அந்தமான் போக தயாராகுங்க. உங்கள் துணையுடன் இரண்டு நாட்கள் இன்ப சுற்றுலா செல்ல மிகவும் அட்டகாசமான இடம் அந்தமான் தான்.

PC: Indranil Banerjee

வாண்டூ கடற்கரை

வாண்டூ கடற்கரை

அந்தமானில் உள்ள வாண்டூ கடற்கரை மிகவும் அருமையான சுற்றுலா இடமாகும். இங்கு உங்கள் துணையை கூட்டி வந்து பாருங்கள். பின் வாழ்நாளில் உங்களுக்கு இது மறக்கமுடியாத இடமாகவே மாறிவிடும்.

PC: Panagis Chartouliaris

கலாபத்தர் கடற்கரை

கலாபத்தர் கடற்கரை

வெள்ளை மணலில் கரும்பாறைகள் ஆங்காங்கே புள்ளி வைத்தாற்போல, பார்ப்பதற்கே பரவசமூட்டும் அழகைக் கொண்டது கலாபத்தர் கடற்கரை. இங்கு பைக் ரைடிங் செய்வது அலாதியான அனுபவமாக இருக்கும்.

PC:Mvbellad

லட்சத் தீவுகள்

லட்சத் தீவுகள்

இணையுடன் செல்வதற்கு ஏற்ற மற்றொரு இடம் லட்சத்தீவுகள். இந்தியாவில் இருக்கிறோமா அல்லது சொர்க்கமா என்று சந்தேகம் வருகிற அளவுக்கு இந்த இடம் அவ்வளவு அழகாக காட்சி தரும். இது அந்தமான் போல நிறைய தீவுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றில் 10 மட்டுமே மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட தீவுகளாகும். மேலும் இப்படி ஒரு இடம் இருப்பதே பலருக்கு தெரியாது. கொஞ்சம் பொருட்செலவும் அதிகம். எனவே பெரும்பாலானோர் வருவதற்கு விரும்பமாட்டார்கள். கூட்ட நெரிசல் இன்றி தனிமையில் தங்கள் துணையுடன் மனம் விட்டு பேச உகந்த இடமாக இது அமையும்.

PC: krishnakumar krishnakumar

 வால்பாறை

வால்பாறை

கோவை மாவட்டத்துக்குட்பட்ட சுற்றுலாத் தளங்களில் வால்பாறையும் ஒன்று. அடர்ந்த காடுகள், தேயிலைத் தோட்டங்கள், வானுயர்ந்த மரங்கள் என வால்பாறை உங்களை வரவேற்கும். பல அருவிகள், பிரம்மாண்ட அணைகள் என சுற்றுலாவுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் நிறைந்து காணப்படுகிறது வால்பாறை.

PC: Subramanian Arumugam

வால் பாறை

வால் பாறை

இங்கே உங்கள் துணையுடன் புத்தாண்டை கொண்டாட லோயர் நீராறு, சின்னக்கல்லாறு, கூழாங்கல் ஆறு என நிறைய இருக்கிறது. புதுமணத்தம்பதிகளுக்கு புத்தாண்டைக் கொண்டாட அருமையான இடம்.

PC: sathya narayanan

 கொடைக்கானல்

கொடைக்கானல்

கொடைக்கானல் உங்கள் நண்பர்கள் அல்லது துணையுடன் புத்தாண்டு சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகும். இதமான சூழலில் மனம் விட்டு பேச நல்ல சூழ்நிலையை உருவாக்கித்தரும் இந்த கொடைக்கானல். இங்கு செயற்கை ஏரி ஒன்று உள்ளது. செயற்கை ஏரியான கொடைக்கானல் ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். 1863-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த ஏரி மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

PC: Indira Nair

வெள்ளி நீர்வீழ்ச்சி

வெள்ளி நீர்வீழ்ச்சி

சில்வர் கேஸ்கேட் என்றழைக்கப்படும் வெள்ளி நீர்வீழ்ச்சி கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தளமாகும். பாறைகளில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல வழிந்தோடும் நீர் நம்மை பரவசமடையச் செய்யும். தெருவிளக்குகளின் மங்கிய ஒளியில் இரவிலும் அருவியை கண்டு ரசிக்கலாம்

PC: Asmin Kuntal Bhar

ஆலப்புழா

ஆலப்புழா

இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆலப்புழா கேரள சுற்றுலாவுக்கு ஒரு சிறப்பான இடத்தை தந்துள்ளது. அங்கு நடைபெறும் படகுப்போட்டிகள், படகு வீடுகள், கடற்கரைகள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது.

PC: Anoop

 படகு இல்லங்கள்

படகு இல்லங்கள்

படகு இல்லங்கள் ஆலப்புழாவின் சிறப்பாகும். இவை உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகளை கேரளத்துக்கு வரத் தூண்டும் இடங்களில் ஒன்றாகும். நன்றாக அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், நவீன கழிப்பறைகள், ஆடம்பர வரவேற்பு அறைகள், சமையலறை மற்றும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதற்கு ஏற்ற பால்கனி என அனைத்து வசதிகளையும் கொண்ட படகு இல்லங்கள் தற்போது இயங்குகின்றன. துணையுடன் வருபவர்கள் நிச்சயமாக படகு இல்லம் போய்வர வேண்டும். இல்லையென்றால் ஒரு அருமையான தருணத்தை இழப்பீர்கள் நிச்சயமாக...

PC: Gerald Cowles

மலை ரயிலில் பயணம்:

மலை ரயிலில் பயணம்:

நீலகிரி வரும் எந்த ஒரு பயணியும், எல்லாப் பயணிகளும், கண்டிப்பாகத் தவற விடக் கூடாத ஒரு அனுபவம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம். யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி டார்ஜீலிங் மலை ரயில் பாதைக்கு இணையான உலகப் பாரம்பரியம் மிக்க பாதையாக இது கருதப் படுகிறது. உலகிலேயே மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ள மரத்தாலான அடுக்கு பற்சக்கர அமைப்பு இங்கு உள்ளது.

PC: Saurabh chatterjee

கேத்தரின் நீர்வீழ்ச்சி

கேத்தரின் நீர்வீழ்ச்சி

இது நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிடும்படியான சுற்றுலாத் தளமாகும்.

PC: Thanakaraj Kumaravel

ஏற்காடு:

ஏற்காடு:


ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலத்திலிருந்து ஏறக்குறைய 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஏரிப் பூங்கா, படகு இல்லம், அண்ணா பூங்கா என சுற்றுலாவிற்காக நிறைய இடங்கள் உள்ளன.

PC: Anandarup kar

Read more about: tamilnadu chennai beach goa new year
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X