» »பொங்கலுக்கு எங்க போறீங்களோ இல்லையோ..இந்த இடங்களுக்கு போக மறந்துடாதீங்க!

பொங்கலுக்கு எங்க போறீங்களோ இல்லையோ..இந்த இடங்களுக்கு போக மறந்துடாதீங்க!

Written By: Udhaya

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. மகரத்திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு மட்டுமின்றி உலகில் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படுகிறது பொங்கல் விழா. மூன்று நாள் நிகழும் இந்த பொங்கல் விழாவை சிறப்பிக்க வேண்டுமென்றால், பொங்கல் நிகழும் இடங்களுக்கு ஒரு சுற்றுலா சென்று வரலாமே. ஒரே நேரத்தில் அனைத்து இடங்களுக்கும் செல்வது இயலாத காரியம்தான் என்றாலும், தமிழர்களாகிய நாம் நம் வீட்டிலே பொங்கலிட்டு நம் பாரம்பரியத்தைக் காக்கவேண்டும். குறைந்த பட்சம் பொங்கல் விடுமுறைகளில் வெறுமனே டிவி முன் உட்காராது, பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களின் கலாச்சாரத்தை பார்க்கவேண்டும்.

தமிழகத்தின் அனைத்து கலாச்சாரங்களும் நிறைந்த பகுதியென்றால் அது சென்னை தான். எல்லா மாவட்டத்திலிருந்து வந்த மக்கள் இங்கு வசிப்பர். அவர்கள் பொங்கலின் போது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். மற்றவர்கள் சென்னையிலேயே பொங்கலிட்டு விழாவை சிறப்பிக்க விரும்புவர்.

பொங்கல் விழாவின்போது நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள் பற்றி காண்போம்.

திருச்சி

திருச்சி

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

திருச்சியின் பல இடங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்படும். திருச்சி மக்கள் மிகுந்த பாரம்பரியத்தோடு கரும்பு, வெல்லம், மஞ்சள் படைத்து சூரியனை வழிபடுவர்.


PC: J'ram DJ

மதுரை

மதுரை


உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

PC: Vinay Shivakumar

திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் கொண்டாடப்பட்ட, மருவிய அல்லது கிட்டத்தட்ட மறைந்து விட்ட ஒரு நடைமுறை சிறுவீட்டுப் பொங்கல். பொங்கல் தினம் கழிந்து இரண்டாம் நாள் இளம்பெண்கள் அனைவரும் மீண்டும் பொங்கலிடுவர். மாட்டுச் சாண வறட்டிகள், பொங்கல், தேங்காய், வெல்லம் முதலியவற்றை ஒரு தாம்பூலத்தில் எடுத்துச்சென்று அருகிலுள்ள நீர் நிலையில் மீனுக்கு உணவாக கொடுப்பர். பிறகு வீடு திரும்புவர். அழகழகான உடைகள், அலங்காரங்களுடன் வீதிகளில் வரும் இளம்பெண்களை கண்டால் , இளங் காளைகளின் கதியை கேட்கவா வேண்டும். இப்படி ஒரு பழக்கம் இருந்துள்ளது,.. ஆனால் நாளடைவில் இது மறைந்துவிட்டது. எனினும் திருநெல்வேலி மாவட்ட கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் பொங்கல் விழா வித்தியாசமாக இருக்கும்.

PC: Alagu

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

இந்திர_விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இப்போது, பொங்கல், தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.

PC: Dheepak Ra

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

பொங்கல் விழா அந்தக் காலத்தில் 28 நாள்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கின்றன. முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப்போது பொங்கல் ஊரையும், நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்புப் பூஜை நடைப்பெற்றது.

PC: Alagu

சென்னை

சென்னை

சென்னையில் பல்வேறு இன மக்களும் இருக்கின்றனர். எல்லா மாவட்டத்து மக்களும் அவரவர் முறைகளுக்கேற்ப பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். சென்னையில் பல வீடுகளில் பொங்கல் விழா வீட்டுக்குள் சிலிண்டர் அடுப்பில்தான் வைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக அவர்களுக்கு வீட்டின் வெளியே இடவசதி இல்லாததுதான் என்று கூறப்படுகிறது.

கிராமத்தில் அகண்ட வெளியில் பல்வேறு உறவினர்கள் மத்தியில் கொண்டாடப்படவேண்டிய பொங்கல் நான்கு சுவத்துக்குள் முடிந்துவிடுகிறது. பண்டிகைகள் நம் உறவுகளை வலுப்படுத்தவேண்டுமே தவிர.. பிளவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது.

PC: Sowrirajan S

 கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் செழிக்கும் என மக்கள் நம்பிக்கை. பிற்காலத்தில், சூரியன் பற்றிய அறிவு மக்கள் வந்தவுடன் சூரியன்சந்தோஷத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுள் பொங்கல் படைத்து வழிபட்டனர். பூமி இருக்கும் நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்குப் பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் அறுவடை செய்த புது நெல் தை முதல்நாளில் சமையல் இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.

PC: Kamala L

பொள்ளாச்சி

பொள்ளாச்சி


சாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இணைந்து சமத்துவ பொங்கலாக இந்த விழாவை கொண்டாடுவர். பொள்ளாச்சியில் பொங்கல் விழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். முதல் நாளான போகிப்பண்டிகையையொட்டி, வீடுகளின் முன்பு, பூளைப்பூ, பிரண்டை, ஆவாரம், தும்பை, வேப்பிலை அடங்கிய காப்பினை கட்டி, பொங்கல் விழாவை வரவேற்பர். இந்த காப்பு கட்டுதல் விழா தாவரங்களை முதலில் வழிபடுவதாக மரபு உள்ளது. இரண்டாம் நாள், இயற்கையின் பேராற்றல் வடிவமான சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவர். வீடுகளில், பொங்கல் பானைகளில், பொங்கல் வைத்து, பொங்கி வருவதை கண்டு, பொங்கலோ... பொங்கல் என சிறுவர்கள் கோஷமிட்டும் ஆரவாரத்துடன் கொண்டாடுவது வழக்கம்.

PC: rmesh iyanswamy

சேலம்

சேலம்

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் வேறுபாடானது. அவர்களின் கலாச்சாரத்தில் சிறிய சிறிய வேறுபாடு இருக்கும். பொங்கல் விழாவின் போதும் அவரவர் வசதிக்கேற்ப வேறுபாடுகள் நிறைந்தே காணப்படுகிறது. கிழக்கு நோக்கி விளக்கு போட்டு, இலை விரித்து காய்கறிகள் பழங்கள் தேங்காய்களை படைத்து, பொங்கல் வைத்து வழிபடுவது பொதுவான விசயம். இலைகளில் படைப்பது, கரும்புகளின் எண்ணிக்கை முதலியவற்றில் பல மாற்றங்களைக் கண்டுள்ளது பொங்கல் பண்டிகை.

விலைவாசி உயர்வு மிக முக்கிய காரணமாகும். வேலைப் பளு காரணமாக பலர் கிராமத்துக்கே செல்லாமல் நகர பொங்கலையே நாடுகின்றனர்.

PC: JayakanthanG

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர்

பொங்கலையும், ஏறுதழுவுதலையும் பிரிக்க முடியாது என்பதுதான் உண்மை. அதுவும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஏறுதழுவுதல் விழாவுக்கு வெளிநாடுகளிலும் இருந்த ரசிகர்கள் வருகின்றனர். பொங்கலின் போது நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய ஒரு இடம் என்றால் அது மதுரைதான் முதலிடம் பிடிக்கும்.

அலங்காநல்லூர், பாலமேடு என தெறிக்கவிடும் சல்லிக்கட்டு, சேலம், சிவகங்கை மாவட்டங்களிலும் நடக்கும்.

PC: Vinoth Chandar

சல்லிக்கட்டு பாக்க போறீங்களா அப்போ இத படிச்சிட்டு போங்க...

Read more about: pongal, travel, பயணம்
Please Wait while comments are loading...