Search
  • Follow NativePlanet
Share
» »இது புட்டு இல்ல இட்லி! நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு! இத படிங்க முதல்ல

இது புட்டு இல்ல இட்லி! நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு! இத படிங்க முதல்ல

இது புட்டு இல்ல இட்லி! நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு! இத படிங்க முதல்ல

இட்லியின் வகைகள்னு சொன்னாலே இனிப்பு இட்லி, கார இட்லி, மதுரை இட்லி,சென்னை இட்லினு பல வகைகள அடுக்கிட்டு போவீங்கனு தெரியும். ஆனா இந்த மாதிரியான இட்லிக்கள் நீங்க உள்ளூர்ல வாங்கி சாப்பிட்டிருக்க முடியாது. புட்டு மாதிரியான முறையில அவிக்கப்படுற இட்லி, மிருதுவான,அல்வா மாதிரியான இட்லி, தட்டையா இருக்குற தோசை மாதிரியான இட்லி, இது பாக்க என்னவோ மாதிரி இருக்கேனு யோசிக்க வைக்குற இட்லினு பல வகையான இட்லிக்கள் இந்தியாவுல கிடைக்குது. சொல்லப்போனா எல்லாமே தென்னிந்தியாதான். ஸ்பெஷல்லா கோவாவுலயும் ஒரு இட்லி தயாரிக்குறாங்கலாம். அது பத்தியும், இந்த இட்லி எங்கெல்லாம் கிடைக்குதுங்குறத பத்தியும் அட்டகாசமா, ரத்தின சுருக்கமா சொல்லிடுறோம் இந்த கட்டுரையில. அடுத்த முற இந்த இடங்களுக்கு போனா இட்லிக்கள சுவைக்க மறந்துடாதீங்க. வாருங்கள் நண்பர்களே இந்தியாவின் அதி சிறந்த 7 இட்லிக்கள் கிடைக்கும் இடங்கள் பத்தி பாக்கலாம்.

 இட்லி

இட்லி

இட்டவி எனும் தமிழ் சொல்லிலிருந்து திரிந்து பிறந்திருக்கலாம் என்று கருதப்படும் இட்லி மிக அழகான வடிவில், வெள்ளையாக உங்கள் மனதைப் போல சுத்தமானதாக இருக்கும். இதற்கு தொட்டுக்க சட்னி, சாம்பார்,இட்லிப் பொடினு சில பல சமாச்சாரங்கள் இருக்கு. இட்லிய பிச்சி அப்படியே சாம்பார்ல தொட்டு வாயில வச்சா அப்படியே வழுக்கிக்கிட்டு போகும் பாருங்க.. அடடே அந்த சுவைய நம்மாள மறக்கமுடியுமா. அடுத்ததா சட்னியும், கொஞ்சம் இட்லி பொடியும் சேர்த்து சாப்பிடுற சுவைக்கு நிகர் என்ன வரும்னு நினைக்குறீங்க. சரி வாங்க இந்த மாதிரியான இட்லிக்கள் கிடைக்கும் சிறப்பு இடங்கள பத்தி பாக்கலாம்.

Rajesh dangi

 செட்டிநாடு

செட்டிநாடு

சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ரெண்டையும் உள்ளடக்கிய பகுதி செட்டிநாடு. சாப்பாடுறதுக்கு பிறந்தவங்கனு நீங்க உங்கள நினச்சா செட்டிநாட்டு வகை உணவுகள ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டா போதும். அட அட அட அப்படி ஒரு சுவை,. சப்புக் கொட்டி சாப்டுட்டே இருக்கலாம்னு தோணும். வெஜ்னாலும் சரி நான் வெஜ்னாலும் சரி, காலை மதிய, இரவு உணவா இருந்தாலும் சரி அள்ளிப் போட்டு சாப்பிடத் தோணும் உங்களுக்கு. இந்த ஊர்ல கிடைக்குற இட்லியும் ஸ்பெஷல்

நம்ம தமிழ்நாட்டில் சாப்புறடதுக்காகவே இப்படி ஒரு சுற்றுலா போலாமேநம்ம தமிழ்நாட்டில் சாப்புறடதுக்காகவே இப்படி ஒரு சுற்றுலா போலாமே

தொட்டுக்க என்ன

செட்டிநாட்டு சிறப்பு இட்லிய தொட்டுக்க சாம்பார், சட்னினு எது இருந்தாலும் கறிக்குழம்பு அதுவும் செட்டிநாடு ஸ்டைல்ல வச்சி சாப்பிட்டா அதன் சுவையே ஒரு கிரக்கத்த ஏற்படுத்தும். அதான் வர்ற பொங்கலுக்கு இட்லி செஞ்சி சாப்பிடறதுதான. செய்யவேண்டாம் செட்டிநாடு ரெஸ்ட்ராரன்ட் போயி சாப்பிடுங்க போதும்.

Nileshantony92

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

செட்டிநாடுனாலே சுற்றுலாவுக்கு சிறப்பு மாதிரி, கோயில்களும் ஆன்மீகமும் சிறப்புதான். நகரத்தார் கோவில்கள்னு சொல்லப்படுற இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன்கோயில், நெமங்கோயில், இலுப்பைக்குடி, சூரைக்குடி, வேலங்குடி, இரணிகோயில், பிள்ளையார்பட்டி ஆகிய கோவில்கள்ல பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில் உலக பிரபலமானது.

முட்டையால் கட்டப்பட்ட சுவர்கள், அறிவியலையே அன்னாந்து பார்க்க வைத்த செட்டிநாடு வீடுகள்முட்டையால் கட்டப்பட்ட சுவர்கள், அறிவியலையே அன்னாந்து பார்க்க வைத்த செட்டிநாடு வீடுகள்

கற்பக விநாயகர் கோவில்

திருப்பத்தூர் - குன்றக்குடி சாலையில் திருப்பத்தூரிலிருந்து 8 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.

1300 வருடங்கள் பழமையானது என்று கருதப்படுகிறது.

2 மீட்டர் உயரம் கொண்ட கற்பக விநாயகர் திரு உருவம் இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.

5 கிமீ தொலைவில் குன்றக்குடி முருகன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் வந்து வழிபட்டு சென்றால் உங்கள் தொழில் மேம்பாடு அடையுமாம்.

Sai DHananjayan Babu

 மங்களூர்

மங்களூர்

கர்நாடக மாநிலத்தின் கடற்கரை நகரங்களில் மிகப் பெரியதாக விளங்கும் மங்களூரு ஒருவகை இட்லிக்கு பிரபலமானதாக விளங்குகிறது. அரபிக்கடலும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் சேர்ந்து குவிந்து இருக்கும் இந்த பகுதி மிகவும் வளமானதாக உள்ளது. இங்கு சுற்றிப் பார்க்க பல இடங்கள் இருக்கின்றன. முதலில் மங்களூர் இட்லி பற்றி பார்க்கலாம்.

முதே என்று அழைக்கப்படும் ஒருவகை பதார்த்தம் இங்கு சிறப்பாகும். இதை சிலர் மங்களூர் இட்லி என்றும் கூறுகின்றனர். முதே இட்லி என்பது இதன் பெயர். ஆனால் இது பார்ப்பதற்கு இட்லி போன்று இல்லை. ஆனால் புட்டு போன்ற வடிவத்தில் இருக்கிறது. இதன் சுவை உங்களை இதற்கு அடிமையாக்கும் என்பது மட்டும் நூறு சதம் உண்மை.

கர்நாடக மாநிலத்துக்கு உரித்தான ஒரு வகை சுவையுடன் கூடிய சாம்பார் கூடவே கொஞ்சம் சட்னி தொட்டு இந்த இட்லியை சுவைக்கலாம்.

Prashanthns

மங்களூரில் என்ன இருக்கு?

மங்களூரில் என்ன இருக்கு?

மங்களூரில் என்னதான் இல்லை என்று கேட்கலாம். ஓடியாட கடற்கரை வேண்டுமா, சாகசங்களுக்கு மலைகள் வேண்டுமா, சுவைக்க உணவு வேண்டுமா, ஆன்மீகத்துக்கும் இடங்கள் வேண்டுமா எல்லாம் இருக்கிறது மங்களூர் பகுதியில். மங்களாதேவி கோவில் உலகப் புகழ் பெற்றது. மேலும் இங்கு தண்ணீர் பாவி கடற்கரையும், சோமேஸ்வரா கடற்கரையும் வெளிநாட்டு பயணிகளிடையேயும் சிறப்பு வாய்ந்தது. சுல்தான் பத்தேரி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தளமாகும்.

Premnath Kudva

 காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி

சென்னையில் நாம் பெரும்பாலும் சாப்பிடுவது காஞ்சிபுரம் இட்லிதான். பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட மூன்றையும் கலந்து பாம்பே ரவை அளவு பதத்தில் திரித்துக்கொண்டு அதில் சலித்து இட்லிக்கு மாவை தயார் செய்கிறார்கள். நெய் ஊற்றி இட்டு அவித்தால் சூடான சுவையான காஞ்சிபுரம் இட்லி தயாராகிவிடுகிறது. இது மிகவும் சத்தானதும் கூட. சென்னை நகர வாசிகளுக்கு இது பெரிய அளவில் புதிதான சுவையை தரப்போவதில்லை என்றாலும் இதன் பெயர் காஞ்சிபுரம் இட்லி என்பது புதிதாக இருக்கலாம்.

காஞ்சிபுரம் சுற்றுலா

காஞ்சிபுரம் சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் கோவில்களை ரசித்துவிட்டு வருவது வழக்கம். இதனால் கோவில்கள் குறித்த தகவல்களை நம் இணையதளத்தில் நீங்கள் மிக விரிவாக காணலாம். மேலும் காஞ்சிபுரத்தில் என்னெவெல்லாம் இருக்கிறது என்பதையும் இந்த பகுதியில் சொடுக்கி விரிவாக காணுங்கள்.

Ssriram mt

சாம்பார் இட்லி தரும் பெங்களூர் மாநகரம்

சாம்பார் இட்லி தரும் பெங்களூர் மாநகரம்

சாம்பாரில் குளிக்க வைத்து தரும் இட்லி சாம்பார் இட்லி என்று அழைக்கப்படுகிறது. இது உடுப்பி நகரத்தின் சிறப்பான இட்லி என்பது பெங்களூரில் வசிப்பவர்களுக்கு கூட அதிகம் தெரிந்திருக்காது. இது பெங்களூருவின் அனைத்து இட்லி கடைகளிலும் கிடைக்கும் இட்லி ஆகும். பெங்களூரு சுற்றுலாத் தளங்கள் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.

Nikkul

குஷ்பூ இட்லி கொஞ்சும் கொங்கு மண்டலம்

குஷ்பூ இட்லி கொஞ்சும் கொங்கு மண்டலம்

சினிமா நடிகை குஷ்பூவின் பெயரில் உருவான இட்லி இது. தமிழகம்தான் தாய்வீடு. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இன்றளவும் இதுபோன்ற பெயரில் இட்லி விற்கப்படுகிறது. கொங்கு மண்டலத்துக்கு பயணம் செய்பவர்கள் நிச்சயமாக இந்த இட்லியை வாங்கி சாப்பிட்டு மகிழ மறந்திவிடாதீர்கள்.

Ragunathan

சன்னாஸ்

சன்னாஸ்

பார்ப்பதற்கு இட்லி போல ஓரளவுக்கு தெரிந்தாலும் இதன் வடிவம் சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா. இதுக்கு பேரு சன்னாஸ். இது கோவாவுல மிகப் பிரபலம். கோவா போனவங்க நிச்சயம் இத வாங்கி சாப்பிட்டு பாத்திருப்பாங்க ஒரு வேள நீங்க இத இப்பதான் முதன் முறையா கேள்விப் படுறீங்கன்னா அடுத்த முற கோவா போகும்போது மறக்காம வாங்கி சாப்பிடுங்க.

உங்களுக்கு தெரிந்திராத கோவாவின் உண்மை முகம்! இதுதான்உங்களுக்கு தெரிந்திராத கோவாவின் உண்மை முகம்! இதுதான்

பொதுவாக கோவாவின் பெரும்பான்மையான இடங்களிலும் இந்த வகை இட்லி கிடைக்கிறது. ஆனால் சில குறிப்பிட்ட இடங்களில் கிடைக்கும் சன்னாக்களுக்கு மிகவும் வரவேற்பு இருக்கிறது.

Satyajit Nayak

தட்டே இட்லி

தட்டே இட்லி

பெங்களூரு வாசிகளுக்கு அதிகம் பரிட்சியம் ஆகி இருக்கும் இட்லிக்களில் தட்டே இட்லி மிகவும் பிரபலம். முக்கியமாக தமிழர்களுக்கு. ஏனென்றால் கர்நாடக சிறப்பு இட்லிக்கள் தமிழக இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் ருசிக்கப்படுவதில்லை என்றே சொல்லலாம். ஆனால் தட்டே இட்லி மிகவும் சுவையானது. கிட்டத்தட்ட இது தமிழகத்தின் இட்லி சுவையை ஒத்ததாகும். ஒருமுறை வாங்கி சாப்பிட்டால் போதும் அந்த வேளைக்கு பசியே இருக்காது. வயிறும் மனதும் ஒருங்கே நிறையும்.

நீங்க சிங்கிளா? அப்படினா இப்போதே கோவா செல்லவேண்டிய 10 அல்டிமேட் காரணங்கள்நீங்க சிங்கிளா? அப்படினா இப்போதே கோவா செல்லவேண்டிய 10 அல்டிமேட் காரணங்கள்

இதுபோன்ற சிறப்பான இட்லிகள் இந்தியாவின் வெறெந்த பகுதிகளிலும் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் கமண்ட்டில் குறிப்பிடுங்கள். மேலும் உங்களுக்கு எந்த வகை இட்லி மிகவும் பிடித்திருக்கிறது என்பதையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களது கருத்துக்கள் எங்கள் இணைய தளத்தின் கமண்ட் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படும்.

Girionthenet

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X