Search
  • Follow NativePlanet
Share
» »என்னை அறிந்தால் - தல அஜித் படத்தில் வந்த சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஒரு சிறப்பு பார்வை

என்னை அறிந்தால் - தல அஜித் படத்தில் வந்த சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஒரு சிறப்பு பார்வை

பெரிய சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து சாதித்த வெகு சில நடிகர்களில் ஒருவர் தான் 'தல' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார். தெலுங்கு படத்தில் அறிமுகமாகி இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக உயர்ந்ததுடன் தனக்கென குறிப்பிடும்படியான எண்ணிக்கையில் ரசிகர்களையும் கொண்டுள்ளார்.

முதலில் மென்மையான காதல் கதைகளில் மட்டுமே நடித்திருந்தாலும் பின்னர் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களிலும் தனது நடிப்பு திறமையை நிருபித்துள்ளார். சரி, வாருங்கள் அஜித் படங்களில் வந்த சில சுற்றுலாத்தலங்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Goibibo வில் விமானம் மற்றும் ஹோட்டல்கள் புக் செய்து 6000 ரூ வரை தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன்களை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்

 சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், அமர்க்களம் - ஹம்பி :

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், அமர்க்களம் - ஹம்பி :

தல அஜித் படங்களிலேயே வைத்து மிகப்பிரபலமான பாடல் என்றால் அது அமர்க்களம் படத்தில் வரும் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என்ற பாடல் தான். S.P. பாலசுப்ரமணியம் ஒரே மூச்சில் பாடிய இந்த பாடலை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த பாடல் காட்சி எங்கு படமாக்கப்பட்டது தெரியுமா ?

 சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், அமர்க்களம் - ஹம்பி :

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், அமர்க்களம் - ஹம்பி :

அந்த இடம் கர்னாடக மாநிலத்தில் இருக்கும் ஹம்பி நகரம் தான். தென் இந்தியாவையே ஆட்சி செய்த விஜயநகர பேரரசர்களின் தலைநகரமாக ஒரு காலத்தில் செல்வ செழிப்போடு இருந்த இந்நகரம் இன்று ஆள் ஆரவாரமின்றி கைவிடப்பட்ட இடமாக இருக்கிறது. இங்கு விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள், கோட்டைகள் போன்றவை இருந்திருக்கின்றன.

போட்டோ: Christian Ostrosky

 சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், அமர்க்களம் - ஹம்பி :

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், அமர்க்களம் - ஹம்பி :

இங்குள்ள இந்த பழமையான கட்டிடங்களில் உள்ள வேலைப்பாடுகளை பார்க்கும் போது இந்தியாவிலேயே மிகச்சிறந்த கட்டிடக்கலை வல்லுனர்களாக அக்கால மக்கள் இருந்திருப்பதை உணர முடியும். அந்த அளவுக்கு களிமண்ணினால் ஆனதா இல்லை கல்லில் குடையப்பட்டதா என்ற சந்தேகம் வர வைக்கும் சிற்பங்களை ஏராளமாக இங்கே பார்க்கலாம்.

 சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், அமர்க்களம் - ஹம்பி :

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், அமர்க்களம் - ஹம்பி :

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல இங்கே நாம் நிச்சயம் காண வேண்டிய ஒரு சிற்பம் கற்சக்கரங்கள் பொருத்தப்பட்ட தேர். கர்நாடாக மாநில தலைநகர் பெங்களுருவில் இருந்து 353 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த ஹம்பிக்கு கட்டாயம் ஒருமுறை வாருங்கள். சத்தம் இல்லாத தனிமையின் அற்புத உணர்வை ரசித்திடுங்கள். ஹம்பி நகரை எப்படி அடைவது என்பது பற்றிய தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் எங்கள் தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Venkataramesh Kommoju

செம்மீனா விண்மீனா, ஆனந்த பூங்காற்றே - சிம்லா :

செம்மீனா விண்மீனா, ஆனந்த பூங்காற்றே - சிம்லா :

அஜித், மீனா மற்றும் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் ஆனந்த பூங்காற்றே. தேவா இசையமைத்து வெளியான இப்படத்தில் இடம்பெற்ற "செம்மீனா, விண்மீனா" என்ற பாடல் ரசிகர்கள் எல்லோராலும் விரும்பப்படும் பாடல்களில் ஒன்றாக இருந்தது. வெண்பனி மலைகள் சூழ்ந்திருக்கும் இடத்தில் எடுக்கப்பட்ட இந்த பாடலுக்கான காட்சி படம் பிடிக்கப்பட்ட இடம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகரான சிம்லா தான்.

செம்மீனா விண்மீனா, ஆனந்த பூங்காற்றே - சிம்லா :

செம்மீனா விண்மீனா, ஆனந்த பூங்காற்றே - சிம்லா :

ஹிமாலய மலையில் அமைந்திருக்கும் மிக அற்புதமான சுற்றுலாத்தலம் இந்த சிம்லா. இங்குள்ள ஹனுமான் கோயிலான ஜக்கூ, இந்தியாவில் இருக்கும் இரண்டாவது பழமையான சர்சான கிரைஸ்ட் சர்ச், மால் ரோடு, சம்மர் ஹில் போன்ற இடங்கள் முக்கியமான சுற்றுலாத்தலங்கலாகும். சாகச விளையாட்டுகளில் ஈடுபட விரும்புபவர்கள் குளிர் காலத்திலும், இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்கள் கோடை காலத்திலும் இங்கு வரலாம்.

செம்மீனா விண்மீனா, ஆனந்த பூங்காற்றே - சிம்லா :

செம்மீனா விண்மீனா, ஆனந்த பூங்காற்றே - சிம்லா :

சிம்லாவில் குளிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல பனிச்சறுக்கு விளையாட்டு, ஸ்னோ பைகிங், மலையேற்றம் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம். நம்ம ஊரில் இருக்கும் ஊட்டி மலை ரயிலைப் போன்றே இங்கு கல்கா - சிம்லா ரயில் பயணம் மிகப்பிரபலமாகும். இந்த இடத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள எங்கள் தளத்தில் நுழையுங்கள்.

 கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! :

கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! :

அஜித், ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, தபு, மணிவண்ணன், அப்பாஸ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து சூப்பர் ஹிட்டான படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். அக்கா தங்கை இவருடைய வாழ்க்கையில் நடக்கும் காதல் போராட்டங்களை சொல்லும் இப்படத்தில் முதல் பாதி காரைக்குடியில் இருக்கும் செட்டிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்.

 கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! :

கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! :

தமிழ்நாட்டிலேயே வைத்து மிகவும் வித்தியாசமான பகுதியென்றால் அது செட்டிநாடு தான். காரைக்குடி புதுக்கோட்டை பகுதிகளை உள்ளடக்கிய இந்த செட்டிநாட்டில் ஒவ்வொரு வீடுமே ஒரு தெரு நீளத்துக்கு இருக்கும். பர்மா தேக்குகள், இத்தாலி மார்பிள்கள், பெஞ்சியம் கண்ணாடிகள் என பிரமாண்டமாக இருக்கும் இந்த வீடுகளை கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்ட முக்கால்வாசி தமிழ்ப்படங்களில் பார்த்திருப்பீர்கள். இந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வரும் காட்சிகளும் அப்படிப்பட்ட ஒரு பெரிய செட்டிநாடு வீட்டில் தான் படமாக்கப்படிருக்கும்.

 கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! :

கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! :

அடுத்ததாக செட்டிநாட்டில் மிகப்பிரபலமான விஷயம் அதன் உணவுகள். கைகளால் அரைக்கப்பட்ட மசாலாவில் செய்த செட்டிநாட்டு சிக்கன் குழம்புக்கு நம் நாக்கு அடிமையாகிவிடும். அது தவிர அப்பம், மீன் வறுவல், தேன்குழல், அதிரசம் போன்ற செட்டிநாட்டு உணவுகளும் மிகவும் விரும்பப்படுகிற உணவுகளாகும். இதன் காரணமாகவே உலகம் முழுக்கவும் ஏராளமான செட்டிநாட்டு உணவகங்கள் இயங்கி வருகின்றன.

 கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! :

கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! :

சுவையான இந்த செட்டிநாட்டு உணவுகளை ருசிக்கவும், இங்கு பின்பற்றப்படும் வித்தியாசமான பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ளவும், பிரமாண்டமான செட்டியார் அரண்மனைகளை காணவும் நிச்சயம் காரைக்குடி பகுதிக்கு வாருங்கள். மதுரையில் இருந்து வெறும் 90 கி.மீ தொலைவில் தான் இந்த செட்டிநாடு அமைந்திருக்கிறது. காரைக்குடியில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

"டிங் டாங் கோயில் மணி"

அஜித்தின் இன்னுமொரு சூப்பர் ஹிட் படமான 'ஜி'யில் வரும் 'டிங் டாங் கோயில் மணி' என்ற அற்புதமான பாடலும் இதுபோன்ற ஒரு செட்டிநாட்டு வீட்டில் தான் படம் பிடிக்கபட்டிருக்கும்.

'என்னை அறிந்தால்' :

'என்னை அறிந்தால்' :

தல அஜித் நடித்த பல படங்கள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டவை என்பதால் அவற்றை பற்றி எங்கள் தளத்தில் எழுத இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். அவர் நடித்த படங்களில் வரும் இந்திய சுற்றுலாத்தளங்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை இங்கே comment பகுதியில் பதிவிடுங்கள். அது இந்த பதிவில் சேர்க்கப்படும்.

Read more about: ajith shimla hampi chettinadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more