Search
  • Follow NativePlanet
Share
» »தஞ்சாவூரை விட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல ஊர்களைக் கொண்ட மாவட்டம் இது!

தஞ்சாவூரை விட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல ஊர்களைக் கொண்ட மாவட்டம் இது!

அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பின் சேர்க்கப்பட்டு பின் மீண்டும் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இங்கு பெரிய அளவிலான சுற்றுலாத் தளங்கள் இல்லை என்பதே பலரது எண்ணம் ஆனால், இங்குள்ள சுற்றுலாத் தலங்களையும் உங்களை பார்வைக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம். சரி அரியலூர் மாவட்டத்தில் என்னென்ன சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன பார்க்கலாமா?

 கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

கங்க அரசர்களை வென்ற சோழன் சோழபுரத்தை கங்கை கொண்ட சோழபுரமாக அறிவித்தான். இங்கு ஒரு ஆலயத்தையும் கட்டி அதை சிவபெருமானுக்கு அர்ப்பணித்தான். இதுவே நாளைடைவில் வரலாற்று சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. மேலும் இங்குள்ள கோவிலுக்கும் நிறைய பேர் வருகை தருகின்றனர்.

நாட்டியமாடும் விநாயகர், சிங்கத் தலை கிணறு, ராஜேந்திரச் சோழனுக்கு முடி சூட்டும் ஓவியங்கள் என காண்பதற்கு இனிய காட்சிகள் பல இருக்கின்றன.

சோழர்களின் பழமை பெருமைகளை பட்டியலிட்டால் அதில் முதல் இடத்தை பிடிக்கத் தகுந்த ஒரு இடமாக இந்த கங்கை கொண்ட சோழபுரம் அமைந்துவிடும்.

Ssriraman

மேலப் பழுவூர்

மேலப் பழுவூர்

தமிழ் துறவிகள் பலர் வாழ்ந்த ஊர் இது ஆகும். அரியலூர் - திருச்சி சாலையில் அமைந்துள்ளது இந்த கிராமம். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கிராமம் ஆகும்.

பழுவேட்டரையர் வரலாறு பற்றி தெரிந்துள்ளவர்களுக்கு இந்த ஊர் குறித்த அறிமுகம் தேவையில்லை.

இந்த ஊரில் இருக்கும் குடைவரை கோவிலான விஷ்ணு கோவில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவல்லது.

கீழப்பழுவூர்

பழுவேட்டரையர்களின் தலைநகரத்தின் ஒரு பகுதியாக இது அமைந்ததாகும். இது சிறுபழுவூர் என்றும் அழைக்கப்பட்டது.

முதலாம் பராந்தக சோழன், உத்தமச் சோழன் ஆகியோர் காலத்தில் ஆலந்துறையார் எனும் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது.

official site TamilNadu Tourism

வேட்டக்குடி கரைய வெட்டி பறவைகள் சரணாலயம்

வேட்டக்குடி கரைய வெட்டி பறவைகள் சரணாலயம்

புலம்பெரும் நீர் பறமைகளுக்கான சரணாலயம் இது.

இதுதான் சரணாலயமாக இருக்கும் தமிழகத்தின் பெரிய நன்னீர் ஏரிகளில் முக்கியமானதும் ஆகும்.

தமிழகத்திலேயே அதிக அளவு பறவைகள் வந்து செல்லும் இடமாக அறியப் படுகிறது.

வேட்டக்குடி சரணாலயத்தில் 188 பறவை இனங்கள் உள்ளன. அவற்றில் 82 நீர் பறவைகள் ஆகும்.

எப்போது செல்லலாம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக்கால நேரங்களில் அதிக அளவு நீரைப் பெரும் ஏரிக்கு, அக்டோபர் - மார்ச் கால கட்டத்தில் வந்தால் நிறைய பறவைகளைக் காணமுடியும்.

Jeganathan -

எப்படி அடைவது

எப்படி அடைவது

விமானம் மூலம் வருகை தர விரும்பும் பயணிகளுக்கு அருகாமை விமான நிலையம் திருச்சி ஆகும். அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக அரியலூர் வந்தடையலாம்.

அரியலூரிலேயே ரயில் நிலையம், பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் எளிமையான பயணம் கிடைக்கும்.

K.G.Suriya Prakash

ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா கோவில்

ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா கோவில்

தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தேவாலயம் இது.

அடைக்கலமாதா உருவம் லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்டது ஆகும்.

பெரம்பலூரிலிருந்து 65 கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

ஜெயம்கொண்டம்

ஜெயம்கொண்டம்

ஜெயம் கொண்டம் எனும் கிராமத்துக்கு நெல்லிமண கிராமம் என்ற பெயர்தான் ஆரம்பத்தில் வழங்கப்பட்டதாம். ஆனால் அந்த பெயரில் அழைத்தால் பெரும்பாலோனோர்க்கு தெரியாது.

கங்கை கொண்ட சோழபுரத்துக்கு தன் தலைநகரை மாற்றிய சோழர் ராஜேந்திரர், அதற்கு அருகாமையிலிருக்கும் இந்த ஊருக்கும் ஜெயம்கொண்டம் எனும் பெயரை வைத்தார்.

சோழபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் அனைவரும் கண்டிப்பாக காணவேண்டிய அழகு கொண்டது.

Ramesh M

மாளிகை மேடு

மாளிகை மேடு

கங்கை கொண்ட சோழ புரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ள இன்னொரு வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த பூமி இதுவாகும்..

பல அகழ்வாய்வுகள் மூலம் சோழர்களின் பெருமையை வெளி உலகத்துக்கு காட்டியது இந்த ஊர்.

கள்ளன் குறிச்சி

கள்ளன் குறிச்சி

இது ஒரு சிறிய கிராமம் ஆகும். கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகம் அறிமுகம் கொண்ட ஊர் இது.

அரியலூரிலிருந்து 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கள்ளன்குறிச்சி.

Richard Mortel

திருமானூர்

திருமானூர்

திருமானூர் என்பது கலை மான் ஒன்றுடன் ஆடலின் கடவுள் நடராசரே வந்து ஆடியதாக கருதப்படும் ஒரு கிராமம்.

ராஜராஜசோழன் பெரம்பலூரிலிருந்து தஞ்சைக்கு செல்லும் வழியில் 20 அடி உயரமுள்ள ஒரு சிலையை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த இடம்தான் இது என்றும் நம்பப்படுகிறது.

Nagavamsikatari

 காமரசவல்லி

காமரசவல்லி

தஞ்சை மாவட்டத்தைப் போலவே சோழர் காலத்து பிரம்மாண்ட கோவில்களைக் கொண்டது அரியலூர் மாவட்டம்.

அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. இங்கு ராஜராஜ சோழன் கட்டிய அழகிய கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X