Search
  • Follow NativePlanet
Share
» »கரும்பிலிருந்து காகிதம் தயாரிக்கும் கரூர் மாவட்டம்! உலகுக்கே முன்னோடி!

கரும்பிலிருந்து காகிதம் தயாரிக்கும் கரூர் மாவட்டம்! உலகுக்கே முன்னோடி!

கரும்பிலிருந்து காகிதம் தயாரிக்கும் கரூர் மாவட்டம்! உலகுக்கே முன்னோடி!

தமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் அமராவதி ஆற்றங்கரையில், கரூர் நகரம் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
கரூர் நகரம் தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் ஈரோடு, மேற்கில் 70 கி.மீ. தொலைவில் திருச்சி, தெற்கில் 100 கி.மீ. தொலைவில் சேலம், வடக்கே 141 கி.மீ. தொலைவில் மதுரை மற்றும் கிழக்கே 131 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களை எல்லையாகக் கொண்டுள்ளது. காவேரி, அமராவதி, நல்காசி, குடகனார் மற்றும் நொய்யல் போன்ற பல நதிகள் இந்த மாவட்டத்தில் பாய்ந்து செல்கின்றன. சரி கரூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

வாருங்கள் ஒரு சுற்றுலா சென்று வருவோம்.

 ஆன்மீக சுற்றுலா தலங்கள்

ஆன்மீக சுற்றுலா தலங்கள்


எண்ணற்ற பழங்கால கோவில்களுக்கு கரூர் பெயபெற்றது. இப்பட்டணம் ஏழு புனித சிவாலயங்களுள் ஒன்று. ஐந்தி அடி உயர லிங்கம் உடைய பசுபதீஸ்வரலிங்கம் கோவில் இப்பட்டணத்தின் மிகவும் புகழ்பெற்ற கோவில் ஆகும். புகழிமலை ஸ்ரீ ஆறுபடை முருகன் கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ஸ்ரீ கரூவூர் மாரியம்மன் கோவில், நேரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவில், ஸ்ரீ சிர்டி சார் பாபா கோவில், ஸ்ரீ சோலையம்மன் கோவில், ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில், ஸ்ரீ வங்காளம்மன் கோவில், கல்யாண வெங்கடரமனா ஸ்வாமி கோவில், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், சதாசிவா கோவில், அக்னீஷ்வரர் கோவில் ஆகியவை இங்குள்ள மற்ற புகழ்பெற்ற கோவில்கள்.

Vijaya231

கரூருக்கு செல்வது எப்படி?

கரூருக்கு செல்வது எப்படி?

கரூருக்கு அருகிலுள்ள விமானநிலையங்கள் திருச்சி,கோயம்புத்தூர், சென்னை ஆகிய ஊர்களில் இருக்கிறது. கரூரிலிருந்து திருச்சி 82கிமீ தொலைவிலும், கோயம்புத்தூர் 217கிமீ தொலைவிலும், சென்னை 332 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளன.

நகரத்தின் மையத்தில் இருக்கும் கரூர் ரயில் நிலையம் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கரூருக்கு தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, கரூர் தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து எளிதாக அணுகக்கூடியதாக இருக்கின்றது.

எப்போது செல்லலாம்

கரூரில் கோடைக்காலம் முகவும் வெப்பமாகவும், குளிர்க்காலம் மிதமாகவும், இனிமையாகவும் இருக்கின்றது. மழைக்காலத்தில், கரூர் மிதமான மழைப்பொழிவைப் பெறுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை நிலவும் குளிர்க்காலமே, கரூருக்கு பயணிக்க சிறந்த காலம் ஆகும்

PJeganathan

அருள்மிகு கருவூர் மாரியம்மன் கோவில்

அருள்மிகு கருவூர் மாரியம்மன் கோவில்

மாரியம்மன் கோவில் கருவூரில் அமைந்து இருக்கிறது, இது இவ்விடத்தின் முக்கிய கோவில்களில் ஒன்று. தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய அம்மன் கோவில் இதுவே.

மே மாதம் நடைபெறும் ஆண்டு திருவிழாவே இக்கோவிலின் மிகவும் சிறப்பான நாள் ஆகும். இந்நாளில் கும்பம் கோவிலுக்கு வெளியே எடுத்து வரப்பட்டு ஆர்க்காவதி நதிக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிகழ்வுக்காக ஒரு பெரிய பவனி நடைபெறுகின்றது. பின்னர் கும்பம் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும், இச்சமயத்தில் நகரில் இருக்கும் அனைவரும் இத்திருவிழாவை கொண்டாடுகின்றார்கள்.

பா.ஜம்புலிங்கம்

 திருமுக்கூடல்

திருமுக்கூடல்

திருமுக்கூடல் என்கிற வார்த்தை ஒருமைப்பாட்டை குறிக்கும் ‘முக்கூடல்' என்னும் வார்த்தையில் இருந்து வருகின்றது. பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி என்னும் மூன்று புன்னிய நதிகளின் இணைப்பே திருமுக்கூடல் ஆகும். இவ்விடம் வாலாஜாபாத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.

இந்திய தொல்பொருள் ஆய்வு திருமுக்கூடலை இந்தியாவின் ஒரு பூர்வீக சொத்து என்று அங்கீகரித்து இருக்கிறது. தொண்டைமான் சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்ட ஒரு பழங்கால கோவில் இதன் அருகாமையில் இருக்கிறது.


Nandhini csekar

அருள்மிகு அறுபடை முருகன் கோவில்

அருள்மிகு அறுபடை முருகன் கோவில்

கரூருக்கு வட மேற்கு திசையில் உள்ள புகழூரில் புகழிமலை ஸ்ரீ அறுபடை முருகன் கோவில் இருக்கிறது. காவிரி ஆற்றின் அருகே இருக்கும் வேலாயுதபாளய குன்றின் உச்சியில் இருக்கும் இக்கோவில் பழமை வாய்ந்தது. சேரர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் இதன் அழகான சிற்பவேலைகளுக்கு புகழ்பெற்றது.

முருகப்பெருமான் அல்லது சுப்பிரமணியனே இக்கோவிலின் முக்கிய தெய்வம். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் தைப்பூசம் திருவிழாவே அதிக ஆரவாரமான திருவிழா ஆகும். இத்திருவிழாவின் போது, பக்தர்கள் இக்கோவிலின் தெய்வத்தை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி, இரவிலே கோவிலை சுற்றி வருவார்கள்

Baskaran V

புகளூர் காகித தயாரிப்பு தொழிற்சாலை

புகளூர் காகித தயாரிப்பு தொழிற்சாலை


மரக்கூழ் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை இந்தியாவிலேயே முதன்முதலில் கரூருக்கு அருகிலுள்ள புகளூரில்தான் தொடங்கப்பட்டது.

கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறையில் உலகிலேயே முன்னணியாக இருக்கிறது இந்த கரூர் மாவட்டத் தொழிற்சாலை.

Raj6644

பேருந்துகள்

பேருந்துகள்

கரூர் என்ற பெயரை எங்கேயாவது பார்த்ததுண்டா.. நன்றாக சிந்தித்து பாருங்கள்.. பேருந்தின் ஏதோ ஒரு மூலையில் சிறிய அளவில் கரூர் என்று எழுதியிருப்பார்கள்.

ஆம். இந்தியாவின் அதிக அளவு பேருந்து உற்பத்தி கரூர் மாவட்டத்தில்தான் நடைபெறுகிறது.

மற்ற கோயில்கள்

மற்ற கோயில்கள்


புகளூரில் அமைந்துள்ள வேலாயுதம்பாளையம் குன்றில் வீற்றிருக்கும் சுப்ரமணியர் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். இது கரூருக்கு வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.

இந்த பகுதியில் மாரியம்மன் கோயில் பெரும் புகழ்பெற்றது. இந்த அம்மனுக்கு ஆண்டு தோறும் மே மாதம் கும்பம் எடுக்கும் விழா நடைபெறும். இந்த கும்பங்கள் கோயிலில் இருந்து அமராவதி ஆற்றுக்கு எடுத்து செல்லும் வண்ணமயமான காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

Ssriram mt

பொன்னணியார் அணைக்கட்டு

பொன்னணியார் அணைக்கட்டு

கரூர் மாவட்டத்தில் கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணியார் அணைக்கட்டு சுற்றுலா தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதி பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது.

 அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம்

கரூர் அரசு அருங்காட்சியகம் பழைய திண்டுக்கல் சாலையில் ஜவஹர் பஜாரில் அமைந்துள்ளது. இங்கு வெண்கல சிலைகள், உலோக பொருட்கள், இசைக்கருவிகள், நாணயங்கள், பாறைகள் மற்றும் தாதுக்கள் உட்பட மாதிரிகள் பல உள்ளன.

மேலும் படிமங்கள், தாவரவியல் மாதிரிகள், மெல்லுடலிகளின் ஓடுகள் மற்றும் பிற கடல் மாதிரிகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் சிறந்த விரிவுரைகள், வழிகாட்டி சேவைகள் மற்றும் பிற நிகழ்வுகளும் கல்வி தொடர்பாக செயல்படுத்தப்படுகின்றன.

Ssriram mt

Read more about: districts of tamil nadu karur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X