Search
  • Follow NativePlanet
Share
» »கேரளத்தில் மழைப் பெய்யும் போது செல்லவேண்டிய இடங்கள் இவை |

கேரளத்தில் மழைப் பெய்யும் போது செல்லவேண்டிய இடங்கள் இவை |

மழை பூமிக்கு வந்த விருந்தாளி. அத கைக்கூப்பி வரவேற்குறவங்க நம்ம ஊரு உழவர் பெருமக்கள். அவங்களுக்கு தேவையான மழை வருடா வருடம் பெய்துக்கொண்டே இருந்தாலும், ஒரு பக்கம் வறட்சியும் வாட்டி எடுக்குது. இன்னொரு

By Udhaya

மழை பூமிக்கு வந்த விருந்தாளி. அத கைக்கூப்பி வரவேற்குறவங்க நம்ம ஊரு உழவர் பெருமக்கள். அவங்களுக்கு தேவையான மழை வருடா வருடம் பெய்துக்கொண்டே இருந்தாலும், ஒரு பக்கம் வறட்சியும் வாட்டி எடுக்குது. இன்னொரு பக்கம் மழை என்றாலே தெரித்து ஓடும் துரித நகரத்து மக்கள். மழை பெய்தால் சாலை சகதிகள் நிறைந்ததாக மாறும். வீட்டுக்குள் சாக்கடை வரும் என்பது போன்ற பல சிக்கல்களைப் பற்றி அவர்கள் பேசுவார்கள். ஏரிகளை குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை கனவு வீடாக நினைத்து வாங்கி குடிபுகுந்து வாழ்வைத் தொடங்கும் மக்களுக்கு இடி மின்னல் மழை என்றால் திடீர் கிலி எங்கிருந்தோ வந்துவிடும். ஆனால் இன்னொரு தரப்பு மக்கள் இருக்கிறார்கள். ஆம்.. உங்களைப் போன்றவர்கள்.

மழை என்றாலே மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயி, மலையளவு ஆட்டம் போடுவார்கள். ஆமாம்.. அளவற்ற மகிழ்ச்சியை கொண்டாட மழை தானே நல்ல தொடர்பு. உண்மையில் மழையில் ஒரு நீண்ட தூர பயணம் போய் பாருங்கள். பைக்கில் செல்வதென்றால் மழைச் சாரலே சிறந்தது. ரிஸ்க் என்றாலும் மழை உங்களை நனைத்து உங்களுக்குள் இருக்கும் காதல் இளவரசனை \ இளவரசியை வெளிக்கொணரும். உங்களை அப்படியே இளையராஜாவாக மாற்றி அவருக்கு நிகராக பாடலைத் தூண்டிவிடும். ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களுக்கு சரமாறி ஆட்டம் போடத் தோணும். உங்கள் காதல் அருகில் இருந்தால் அத்தனையையும் மறந்து வேற்று உலகத்துக்கே கொண்டுவிடும். வாருங்கள் அப்படி ஒரு அனுபவத்தை தரும் பயணத்துக்கு நாங்கள் அழைத்துச் செல்கிறோம்.

மறக்காம மேல இருக்குற பெல் பட்டன அழுத்தி சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. இதுபோன்ற பல தகவல்கள் உங்களத் தேடி வரும். நம்ம பேஸ்புக் பக்கத்துலயும் ஒரு லைக் போட்டு பாஃலோ பண்ணி வச்சிக்கோங்க. அப்றம் என்ன போலாமா ?

 தேவிக் குளம்

தேவிக் குளம்

பொதுத் தகவல்கள்

வானிலை - 24 டிகிரி செல்சியஸ்

சிறந்த காலம் - நவம்பர் - மே

அருகிலுள்ள விமான நிலையம் - கொச்சி விமான நிலையம்

காணவேண்டிய இடங்கள் - தேவி ஏரி, பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி, தூவானம் நீர்வீழ்ச்சி, தேயிலை மற்றும் நறுமணப் பொருள்கள் தோட்டம்

தேவிக்குளம் பற்றிய தகவல்கள் - கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த அழகிய நகரம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவிகுளம் மலை பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இங்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிவப்பு பசை மரங்கள் நிறைந்த தோட்டங்களின் நடுவே நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது. தேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் பயனிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம்.


Vishnu1409

மூணாறு

மூணாறு

பொதுத் தகவல்கள்

வானிலை - 19 டிகிரி செல்சியஸ்

சிறந்த காலம் - செப்டம்பர் முதல் மே

செலவழிக்கும் காலம் - 2 நாட்கள் தங்கலாம்

அருகிலுள்ள விமான நிலையம் - கொச்சி விமான நிலையம்

காணவேண்டிய இடங்கள் - ரோஸ் கார்டன், எதிரொலி முனை, யானைகள் வரும் பகுதி, புகைப்படமெடுக்கும் பகுதி, மட்டுப்பட்டி அணை, கொலுக்குமலை தேயிலைத் தோட்டம்

மூணாறு பற்றிய தகவல்கள்

இந்தியாவில் - அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்' கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது. மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது. கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாசஸ்தலமாக மட்டுமல்லாமல் மூணார் சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Amal94nath

வயநாடு

வயநாடு


பொதுத்தகவல்கள்

வானிலை - 22 டிகிரி செல்சியஸ்

சுற்றித் திரிய ஆகும் காலம் - குறைந்தது 1 முதல் இரண்டு நாட்கள்

சிறந்த நேரம் - வருடம் முழுவதும்

அருகிலுள்ள விமான நிலையம் - கோழிக்கோடு

பார்க்கவேண்டிய தளங்கள்

பாணசுரா அணை, பூக்கோட் ஏரி, செம்பரா சிகரம், வயநாடு காட்டுயிர் பூங்கா, சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி, எடக்கல் குகைகள்

கேரளாவின் 12 மாவட்டங்களில் ஒன்றான இந்த வயநாடு மாவட்டம் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கிடையே அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை அமைப்பு காரணமாக இது ஒரு பிரசித்தமான சுற்றுலாப்பிரதேசமாக அறியப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசமானது ‘இயற்கை' என்பது இதுதான் என்று பயணிகளுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் கன்னிமை மாறாத எழில் காட்சிகளுடன் அமைதியாக வீற்றிருக்கிறது. எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் இங்கு தரிசிக்கலாம். வெகு தொலைவிலிருந்து கூட சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு வருடமும் இந்த வயநாடு பகுதிக்கு விஜயம் செய்கின்றனர். உங்கள் அன்றாட வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சினைகளில் நீங்கள் மூழ்கியிருந்தாலும் சரி, இந்த பகுதிக்கு விஜயம் செய்தால் அவை யாவும் மறைந்து சாந்தமும், நிறைவும் மனதில் நிரம்பியிருப்பதை ஊர் திரும்பும்போது உங்களால் உணரமுடியும்.

Jesvettanal

 லெக்கிடி

லெக்கிடி


பொதுத் தகவல்கள்

வானிலை - 22 டிகிரி செல்சியஸ்

திறக்கும் நேரம் - 24 மணி நேரமும் செல்லலாம்

சுற்றித் திரிய காலம் - குறைந்த பட்சம் 1 மணி நேரம் செலவிடலாம்

நுழைவுக் கட்டணம் இல்லை


இந்த முனை மிகவும் உயரமானதாகும். இங்கிருந்து பார்க்கும்போது வயநாடு நகரம் முழுவதும் காணமுடியும். இந்த பகுதி பெரும்பான்மை நேரங்களில் புகை மண்டலமாகவே காட்சி தரும். அழகிய காட்சிகள் நிறைந்த இடமாகும். இங்குள்ள கொண்டை ஊசி வளைவுகளில் பயணிப்பதே சிறப்பானதாக இருக்கும்.

Poojanm

பரம்பிக்குளம்

பரம்பிக்குளம்

பொதுத் தகவல்கள்

வானிலை - 27 டிகிரி செல்சியஸ்

சுற்றித் திரிய காலம் - 2 முதல் 3 மணி நேரம்

திறந்திருக்கும் நேரம் - காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

நுழைவு கட்டணம் - இலகு ரக வாகனங்களுக்கு 50 ரூ

கன ரக வாகனங்களுக்கு 150 ரூ

பரம்பிக்குளம் பற்றிய தகவல்கள்

பாலக்காடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சமான பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு தெற்கு பகுதியில், சங்கம் மலை தொடர்களுக்கு குறுக்காக அமைந்திருக்கிறது. இந்த புத்துணர்ச்சியூட்டும் கவர்ச்சிகரமான காட்டுப் பகுதியில் ஏராளமான விலங்குகளையும், எண்ணற்ற தாவர வகைகளையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் மையப்பகுதி, இடைப்பகுதி, சுற்றுலாப்பகுதி என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் புலி, சிறுத்தை, ஆசிய யானை, காட்டெருமை, கண்ணாடி விரியன், நீலகிரி நீலவால் குரங்கு, சாம்பார் மான், புள்ளி மான், இந்திய காட்டு நாய், ஆமை போன்ற ஜீவ ராசிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் சலீம் அலி பேர்ட் இன்டெர்பிரட்டேஷன் சென்டர் மற்றும் சலீம் அலி கேல்லி போன்ற இடங்கள் பறவை காதலர்களுக்கு பொருத்தமான இடமாக இருக்கும்.

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் நடைபயணம் செல்வதற்கு மிகவும் ஏற்ற இடம். அதோடு இயற்கையின் மறைத்துவைக்கப்பட்ட அற்புதங்களை ஆழமாக உள்ளே சென்று அறிய விரும்பும் சாகச நெஞ்சங்களின் வருகைக்காக ஜங்கிள் கேம்ப்ஸ், நைட் பேக்கேஜஸ், நேச்சர் எஜுகேஷன் பேக்கேஜஸ், போட் குரூசஸ், டிரீ ஹௌசஸ் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன.

KittyCarmichael

Read more about: travel munnar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X