Search
  • Follow NativePlanet
Share
» »ஆர்ப்பரிக்கும் அருவியும் ஆன்மீக சுற்றுலாவும்!

ஆர்ப்பரிக்கும் அருவியும் ஆன்மீக சுற்றுலாவும்!

இந்தியாவில் நிறைய அணைகள், ஆறுகள், அருவிகள் என சுற்றுலா அம்சங்கள் நிறைந்த நீர் நிலைகள் இருக்கின்றன. தெளிவாக உற்று நோக்கினால் அவற்றுக்கு அருகிலேயே புகழ் பெற்ற ஒரு கோயில் அமைந்திருக்கும். இந்தியா ஆன்மீக

By Udhaya

இந்தியாவில் நிறைய அணைகள், ஆறுகள், அருவிகள் என சுற்றுலா அம்சங்கள் நிறைந்த நீர் நிலைகள் இருக்கின்றன. தெளிவாக உற்று நோக்கினால் அவற்றுக்கு அருகிலேயே புகழ் பெற்ற ஒரு கோயில் அமைந்திருக்கும். இந்தியா ஆன்மீக பூமி என்பதாலும், சுற்றுலாவுக்கு சென்றாலும் கோயில் களுக்கும் மக்கள் முன்னுரிமை கொடுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்த வகையில் நாம் இந்த அருவி களுக்கும், அதனுடன் தொடர்புடைய கோயில் களுக்கும் சென்று வருவோம்.

 குற்றாலம்

குற்றாலம்

குற்றாலம் எனும் நகரம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரியும். பலர் அங்கு சென்று ஆனந்தத்தை அனுபவித்திருப்போம். அதே நேரத்தில் குற்றாலத்தில் இருக்கும் அருவிகளை சரியாக கவனித்திருக்கிறோமா என்றால் உண்மையில் இல்லை என்பதே பதிலாக வரும். தெளிவான திட்டமிடல் இல்லாத காரணத்தினாலும் நாம் சரியாக எல்லா இடத்துக்கும் போக முடியாமல் பாதியில் திரும்பியிருப்போம். சரி வாருங்கள் குற்றாலத்துக்கு ஒரே நாளில் பயணிப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.

Jeya2lakshmi

நேர மேலாண்மை

நேர மேலாண்மை

எங்களுடன் இணைந்து சரியாக நேரத்தை கவனித்து வாருங்கள். காலை 6 மணிக்கு இந்த பயணம் ஆரம்பிக்கிறது.

காலை 5 மணி - திருநெல்வேலி ரயில் நிலையம்

காலை 8 மணி - குற்றாலம்

காலை 9 மணி - சிற்றுண்டி

காலை சிற்றுண்டிக்கு பிறகு குற்றாலத்தின் எல்லா அருவிகளுக்கும் பயணம்

மதியம் 1 மணி - உணவு இடைவேளை

மாலை 3 மணி - பாபநாசம்

மாலை 5 மணிக்குள் போட்டிங்க் முடித்துவிட்டு மணிமுத்தாறு நோக்கி கிளம்பிவிடவேண்டும்

மாலை 7 மணிக்குள் சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்பிவிடவேண்டும்.

PREVRAVANTH

சென்னை - திருநெல்வேலி

சென்னை - திருநெல்வேலி

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நிறைய ரயில்கள் இருக்கின்றன. அவற்றில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 5 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். இந்த ரயில்தான் நம் பயணத் திட்டத்துக்கு சிறப்பானதாக இருக்கும்.

பயணம் தொடங்குகிறது

பயணம் தொடங்குகிறது

காலை 6 மணிக்கு நம் திட்டப்படி பயணத்தை தொடங்குகிறோம்.

திருநெல்வேலியிலிருந்து குற்றாலம் இரண்டு வழித்தடங்களில் மூன்று வழிகளில் செல்லமுடியும்.

முதல் வழித்தடம் திருநெல்வேலி - ஆலங்குளம் - குற்றாலம்

இது தேசிய நெடுஞ்சாலை எண் 39 ஐ பின்தொடர்ந்து செல்லும்

இதன் தொலைவு 61 கிமீ

இதன் பயண நேரம் 1 மணி நேரம் 30 நிமிடங்கள்


இரண்டாவது வழித்தடம் திருநெல்வேலி - கடையம் - குற்றாலம்

இது தேசிய நெடுஞ்சாலை எண் 41ஏ வழியாக செல்லும்

இதன் தொலைவு 63 கிமீ

இதன் பயண நேரம் 1 மணி 40 நிமிடங்கள்


இன்னொரு வழி ஆலங்குளத்திலிருந்து பாக்கியலட்சுமிபுரம் வழியாக கடையத்தை அடைவது.

இந்த வழியாக செல்லும்போது அதே நேரம் ஆனாலும், அதன் தொலைவு 68 கிமீ ஆகும்.

Pandi2win

 குற்றாலத்துக்கு போறோம்

குற்றாலத்துக்கு போறோம்

ஆலங்குளம் வழியாக குற்றாலத்துக்கு நேரடியாகவே பயணிக்கலாம். சிலர் தென்காசி வழி சென்று வருவார்கள். அதே நேரத்தில் இதன் அருகிலேயே செங்கோட்டை உள்ளது. இதுவும் மிக அழகான நகரமாகும்.

எவ்வளவு தாமதமாக ஆனாலுமே அதிகபட்சம் 2 மணி நேரத்துக்குள் குற்றாலத்தை வந்தடையலாம். முதலாவதாக நாம் திருக்குற்றாலநாதரை வணங்கிவிட்டு குற்றாலத்துக்குள் அடியெடுத்து வைப்போம். குற்றாலத்தை அடைந்ததும், அங்கிருந்து முதன்மை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் மிகவும் சக்தி வாய்ந்த திருக்குற்றாலநாதர் கோயில் அமைந்துள்ளது.

குற்றால நாதர் கோவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் அவரது பெயரான திருக்குற்றால நாதர் என்ற பெயரினால் அறியப்படுகிறது. சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் பல்வேறு கல்வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன. இந்த கோவிலானது ஆறுகள், மலைகள் மற்றும் பிரபலமான சிவமதுகை நீர்வீழ்ச்சியின் மத்தியில் அமைந்துள்ளது. கோவில் தேவஸ்தானத்தின் மூலம் இந்த கோவிலானது நிர்வகிக்கப்படுகிறது. அகஸ்திய முனிவர் இந்த கோவிலில் வழிபாடு நடத்தினார் என்று சொல்லப்படுகிறது, எனவே இந்த கோவிலுக்கு இப்பெயர் ஏற்பட்டது. கோவிலுக்கு அருகில் ஒரு அறை உள்ளது. இந்த அறையானது சித்திர சபா என்று அழைக்கப்பபடுகிறது. புராண கதைகள், தெய்வங்கள் மற்றும் பல முக்கிய சமய நிகழ்வுகளின் சிற்பங்கள் இங்கு உள்ளன.

Booradleyp1

 அருவிகளும் ஆறுகளும்

அருவிகளும் ஆறுகளும்

எண்ணற்ற அருவிகளும் மற்றும் ஆறுகளும் இவ்விடத்தின் கண்களை கவரும் அழகை மேலும் அதிகரிக்க செயவதால் இன்று மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இந்த நகரத்தின் அழகை பறைசாற்றுவது மட்டுமின்றி, இந்நகரமானது அதன் அழகிய நீர்வீழ்ச்சிகளான பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி நீர்வீழ்ச்சி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, மற்றும் புலி அருவி போன்ற நீர்வீழ்ச்சிகளுக்கு புகழ்பெற்றது.

Ruthran BalaGanesh

கோயில்கள்

கோயில்கள்


இந்நகரில் பல்வேறு கோயில்கள் உள்ளன. அவை திருகுற்றால நாதர் கோவில், திருமலை கோவில், குமரன் கோவில், காசி விஸ்வ நாதர் கோவில், தக்ஷினாமூர்த்தி கோவில், பாப நாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், ஐயப்பன் கோவில் முதலியன.

Booradleyp1

 மெயின் பால்ஸ் எனும் முதன்மை அருவி

மெயின் பால்ஸ் எனும் முதன்மை அருவி

குற்றாலத்தில் நீங்கள் முதலில் குளித்து குதூகலிக்கவேண்டிய அருவி முதன்மை அருவி ஆகும். இதை ஆங்கிலத்தில் மெயின் பால்ஸ் என்றே தற்போதும் அழைக்கின்றனர். திருநெல்வேலி - செங்கோட்டை பாதையிலிருந்து இடதுபுறமாக 1 கிமீ தூரம் பயணித்தாலே இந்த முதன்மை அருவியை காணமுடியும். அருகில் சிறுவர் பூங்காவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஐந்தருவி (புலிஅருவி)

ஐந்தருவி (புலிஅருவி)

குற்றாலம் முதன்மை அருவியிலிருந்து ஆறு நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஐந்தருவி. இதைத்தாண்டியே புலி அருவி எனப்படும் டைகர் பால்ஸுக்கு போகவேண்டும். இவையிரண்டையும் ஒரே நேரத்தில் கண்டு களித்துவிட்டு திரும்பலாம்.

 குற்றாலம் ஐந்தருவி

குற்றாலம் ஐந்தருவி


குற்றாலம் முதன்மை அருவியிலிருந்து மிக மிக அருகில் சிற்றருவி உள்ளது. இங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் சித்திரை சபை கோயில் அமைந்துள்ளது. அதன்பின் அங்கிருந்து ஐந்தருவி முக்கிய சாலையில் பத்து, பதினைந்து நிமிடங்கள் 5 கிமீ வரை பயணித்தால் ஐந்தருவியை அடையலாம். அங்கு நீங்கள் இரண்டு பிரம்மாண்ட அருவியையும், இரண்டு சிறிய, மற்றும் ஒரு குறு அருவியை காணமுடியும். சிறுவர்கள் குளித்து மகிழும் வகையில் ஒரு சிறிய கிளை ஒன்றும் உள்ளது. இப்படி ஐந்தருவியில் எண்ணிப்பார்த்தால் கூட இரண்டு, மூன்று அருவி கிளைகள் எட்டிப்பார்க்கும்.

 பழைய குற்றாலம்

பழைய குற்றாலம்

குற்றாலம் முதன்மை அருவியிலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. பதினைந்து நிமிட பயணத்தில் இந்த அருவியை அடையலாம். இப்படி இங்கிருக்கும் எல்லா அருவியிலும் குளித்து, மகிழ்ந்து, பின் இதன் தெருக்களில் இருக்கும் ஷாப்பிங் கடைகளில் வேண்டுமென்ற பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
அதற்குள் நேரம் மதியத்தைத் தொடும். 1 மணிக்கெல்லாம் நல்ல உணவு விடுதியாக பார்த்து மதிய உணவுக்கு தயாராக வேண்டும். கூடிய விரைவில் உணவை முடித்துக்கொண்டு பாபநாசம் நோக்கி நம் வாகனத்தை செலுத்தவேண்டும்.

Raghukraman

 பாபநாசத்தை நோக்கி நம் பயணம்

பாபநாசத்தை நோக்கி நம் பயணம்

பாபநாசத்தை நோக்கிய நம் பயணம் மூன்று வழிகளில் இருக்கலாம்.

ஆனால் அவற்றில் தேசிய நெடுஞ்சாலை எண் 40 வழியாக செல்வதே சிறந்தது. நேரம் குறைவு மற்றும் நமக்கு எளிதாக செல்லவும் வாய்ப்பு அதிகம்.

முதலில் நாம் பாபநாசர் கோயிலுக்கு செல்வதுதான் சிறந்தது. இவ்வளவு நேரம் அருவிகளையும், இயற்கையையும் நன்கு ரசித்தாகிவிட்டது. கொஞ்சம் ஆன்மீகத்துக்கும் இடம் கொடுக்கலாம்.


Jabbarcommons

 பாபநாசர் கோயில்

பாபநாசர் கோயில்


பாபநாசம் பாபனாசர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கியம் வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பாபநாசம் என்னும் சிறிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலின் மூலக்கடவுள் சிவபெருமான். இக்கோயிலில் புனித நீராடினால் நம் மேல் படிந்துள்ள பாவங்கள் கரைந்தோடும் என்ற நம்பிக்கையினாலேயே இக்கோயில் பாபநாசம் என்ற பெயர் பெற்றது. திருமண வைபவங்கள் போன்ற சடங்குகளை இக்கோயிலில் நடத்துவது மிக மங்களகரமானது என்று நம்பப்படுகிறது.

Bastintonyroy

 அகத்தியர் அருவி

அகத்தியர் அருவி

பாபநாசர் கோயிலிருந்து மூன்று கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அகத்தியர் அருவி. இதன் அருகிலேயே ஒரு முருகன் கோயில் அமைந்துள்ளது. அதையடுத்து அகத்தியர் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

காரையாறு

காரையாறு


அகத்தியர் அருவியை அடுத்து நாம் செல்லவேண்டியது காரையாறு அருவி. முண்டந்துறை புலிகள் காப்பக வட்டாரத்தில் அமைந்துள்ள காரையார் அணை அந்த காப்பகத்தின் ஒரு பகுதியே. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க இங்கு படகு சவாரியும் உண்டு. அரை மணி நேர படகு சவாரி பின்னடை நீரில் பெரிய நீர்வீழ்ச்சியின் சாரல்களுக்கு மத்தியில் நம்மை அழைத்துச் செல்லும். இந்த நீர் வீழ்ச்சியை வானத்தீர்த்தம் என்றழைப்பர். இந்த அருவியின் நீரில் மருத்துவ குணநலன்களைக் கொண்ட கனிமங்கள் பலவும் கலந்திருப்பதால் இதுவும் சுற்றலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்கும்.

மீண்டும் மலையில் ஏரி காரையாறு அணையை அடைந்து அதன்பின் அங்கிருந்து போட்டிங் செல்லவேண்டும். செல்லும் இடத்தின் முடிவில் பாணதீர்த்தம் எனும் அருவியை காணலாம். இந்த சுற்றுப் பயணத்திலேயே மிகப் பிரம்மாண்டமான பெரிய உயரமான, அதிக நீர்கொண்ட அருவி என்றால் அது இதுதான்.

இங்கிருந்து அருகிலேயே மணிமுத்தாறு அணை மற்றும் அருவி உள்ளது. இது பற்றி இன்னும் கூடுதலாக பார்க்கலாம். அடுத்தமுறை கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து எப்படி இந்த அருவியை அடையலாம் என்று பார்ப்போம். மேலும் அங்கிருந்து வரும்போது வழியில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள் குறித்தும் பார்க்கலாம். மறக்காம மேல இருக்குற பெல் பட்டன தட்டி நம்ம தளத்துக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க.. இதுமாதிரி நிறைய கட்டுரைகள் படிக்க நம்ம முகநூல் பக்கம் நேட்டிவ் பிளானட் தமிழ் லைக் பண்ணுங்க

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X