Search
  • Follow NativePlanet
Share
» »தேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா?

தேவராயனதுர்க்காவுக்கு ஒரு சிறப்பு பயணம் போலாமா?

தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த யோகநரசிம்மர் கோயிலை கண்டிப்பாக தரிசிக்க வேண்டும். இந்த கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. ஆக்கக்கடவுளான பிரம்மாவானவர் இந்த புண்ணிய ஸ்தலத்தை சிருஷ்டித்த

By Udhaya

தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த யோகநரசிம்மர் கோயிலை கண்டிப்பாக தரிசிக்க வேண்டும். இந்த கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. ஆக்கக்கடவுளான பிரம்மாவானவர் இந்த புண்ணிய ஸ்தலத்தை சிருஷ்டித்ததாக பிரசித்தமான புராணக்கதை சொல்லப்படுகிறது. இந்த தலத்தில் பிரம்மாவின் 1000 ஆண்டு தவத்தினை மெச்சி ஷீ மஹாவிஷ்ணுவின் அவதாரமான யோக நரசிம்மர் காட்சியளித்ததாக ஐதீகமாக சொல்லப்படுகிறது. இந்த கோயில் ஸ்தலத்தில் திருக்குளமான கல்யாணி தீர்த்தத்தை பயணிகள் காணலாம். இது யோகநரசிம்மர் கோயில் வளாகத்திலேயே அமைந்துள்ளது. உள்ளூர் ஐதீகத்தின்படி இந்த கோயில் கருவறையிலிருந்து ஒரு நீரோடை புனித தீர்த்தத்துடன் இணைவதாக நம்பப்படுகிறது. இந்த கோயில் ஸ்தலத்தின் மேலிருந்து கீழே துர்க்கடஹள்ளி எனும் கிராமத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்யாஷங்கர்ஸ்வாமி கோயிலை பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

கொரவனஹள்ளி மஹாலட்சுமி

கொரவனஹள்ளி மஹாலட்சுமி

தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும் பயணிகள் இங்கு கொரவனஹள்ளி எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த மஹாலட்சுமி கோயிலையும் தரிசிப்பது நன்று. உள்ளூர் நம்பிக்கைகளின்படி இந்த கோயிலில் உள்ள மஹாலட்சுமி விக்கிரகம் சுயம்புவாக உருவானதாக சொல்லப்படுகிறது. இங்கு பக்தர்கள் நாக தேவதை மற்றும் மாரிகாம்பா (மாரியம்மா) சிலைகளையும் காணலாம். எல்லா அம்மன் கோயில்களையும் போன்று இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

Srinivasa83

 நாமட சிலுமே

நாமட சிலுமே

நேரம் இருப்பின் தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும் பயணிகள் இந்த நாமட சிலுமேஎன்றழைக்கப்படும் அதிசய நீருற்று ஸ்தலத்துக்கு சென்று பார்க்கலாம். (நாமட என்பது நெற்றி நாமத்தையும், சிலுமே என்பது ஊற்றையும் குறிக்கிறது) இது தேவராயனதுர்க்கா மலைடிவாரத்தில் அமைந்துள்ளது. புராணக்கதைகளின்படி ராமபிரான் லங்கையை நோக்கி செல்லும்வழியில் இந்த ஸ்தலத்திற்கு வருகை தந்ததாகவும், காலையில் வழிபாட்டுக்கு நாமம் இட்டுக்கொள்ள விரும்பியபோது குழைத்துக்கொள்ள நீரில்லாத காரணத்தால் ஒரு அம்பினை பூமியை நோக்கி எய்ததாகவும், அது இந்த பாறைப்பூமியை துளைத்து ஒரு நீருற்று பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே இந்த ஊற்று நாமட சிலுமே என்ற பெயரை பெற்று விளங்குகிறது. இந்த நீரூற்றின் அருகில் பயணிகள் ராமபிரானின் பாதச்சுவடுகளையும் காணலாம்.இந்த நாமட சிலுமே ஸ்தலத்துக்கு அருகில் 1931ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழைய விருந்தினர் இல்லமும் அமைந்துள்ளது. புகழ்பெற்ற பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி இந்த விருந்தினர் இல்லத்தில் 1938ம் ஆண்டில் தங்கி தன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

Srinivasa83

 போகநரசிம்மர்

போகநரசிம்மர்

தேவராயனதுர்க்கா நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இந்த போகநரசிம்மர் கோயிலை தரிசிப்பது அவசியம். இது மலையடிவாரத்திலேயே அமைந்துள்ளது. சோழர் ஆட்சியின்போது கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் லட்சுமி தேவியின் சிலையையும் பக்தர்கள் தரிசிக்கலாம். உள்ளூர் நம்பிக்கைகளின்படி சிவனின் அவதாரமாக கருதப்படும் துர்வாச முனிவரால் இங்குள்ள போக நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த தெய்வம் மைசூர் மன்னர்களின் குல தெய்வமாகவும் இருந்திருக்கின்றது.இந்த கோயிலில் நடத்தப்படும் தேர்த்திருவிழாவின் போது நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு கூடுகின்றனர். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நிகழும் பல்குண மாச சுத்த பௌர்ணிமாவின் போது இந்த உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த உற்சவத்தின்போது போகநரசிம்மஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக மலைமீதுள்ள ரத பீடத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றார்.

Srinivasa83

சஞ்சீவராயா கோயில்

சஞ்சீவராயா கோயில்


பயணிகள் தேவராயனதுர்க்காவுக்கு வருகை தரும்போது இந்த சஞ்சீவராயா கோயில் எனும் ஸ்தலத்தையும் தரிசிப்பது சிறந்தது. இது ஹனுமானுக்காக எழுப்பப்பட்டிருக்கும் கோயிலாகும்.

இந்த புண்ணியத்தலத்தில் கூப்பிய கரங்களுடன் நிற்கும் ஹனுமான் சிலையை பக்தர்கள் தரிசிக்கலாம். லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு முன்னரே இந்த சஞ்சீவராயா கோயில் கட்டப்பட்டதாக உள்ளூர் நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன

Srinivasa83

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X