Search
  • Follow NativePlanet
Share
» »ஐஸ் கட்டி கொட்டி கட்டப்பட்ட ஒரு விசித்திர அணை இது தெரியுமா?

ஐஸ் கட்டி கொட்டி கட்டப்பட்ட ஒரு விசித்திர அணை இது தெரியுமா?

ஆசியாவின் பெரிய ஆர்க் அணை என்ற பெருமையை பெற்று இருக்கிறது இடுக்கி அணை. இந்த பெரிய அணை தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது. இதனால் அந்த அணை விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கேரள

By Udhaya

ஆசியாவின் பெரிய ஆர்க் அணை என்ற பெருமையை பெற்று இருக்கிறது இடுக்கி அணை. இந்த பெரிய அணை தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது. இதனால் அந்த அணை விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழையால் அணை திறக்கப்பட உள்ளது.

இந்த அணை புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகவும், சிறப்பான கண் கொள்ளா காட்சியாகவும் இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

கட்டப்பட்ட ஆண்டு

கட்டப்பட்ட ஆண்டு


கேரளாவில் இடுக்கியில் தண்ணீர் தேவைக்காகவும், மின்சார தேவைக்காகவும் இடுக்கி அணை 1960களில் கட்டப்பட்டது.குறவன் குறத்தி என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இரண்டு ராட்சச மலைகளுக்கு இடையில் இந்த அணை கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவில் இருக்கும் மிகப் பெரிய ஆர்க் அணைகளில் ஒன்றாகும்.

 மழையால் நிரம்பும் அணை

மழையால் நிரம்பும் அணை

அங்கு மிகவும் மழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்யும் மழையால் கடந்த சில நாட்களுக்கு முன் சில மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இடுக்கி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று இரவு பெய்த மழையில் இடுக்கி வேகமாக நிரம்பி கொள்ளவை அடையும் நிலையில் உள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட்

ஆரஞ்ச் அலெர்ட்

இதன் முழு உயரம், 2,403 அடியாகும். தற்போது 2,395 அடியை இந்த அணை எட்டி இருக்கிறது. இதனால் தற்போது அங்கு ஆரஞ்சு அலெர்ட் எனப்படும், பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு பின் அங்கு இந்த எச்சரிக்கை விடப்படுகிறது.

 ஆசியாவின் பிரம்மாண்ட அணை திறக்கப்படவுள்ளது

ஆசியாவின் பிரம்மாண்ட அணை திறக்கப்படவுள்ளது

ஆசியாவிலேயே மிகப் பெரிய பிரம்மாண்டமான ஒரு அணை திறக்கப்படுகிறது என்றால் எல்லாருக்கும் காண ஆர்வமாகத்தான் இருக்கும். ஆனால், இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. அணை திறக்கும்போது வரும் வெள்ளம்தான் முக்கிய சிக்கல். அணையின் கரையோரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த திறப்பை காண்பதற்கே பலர் அங்கு செல்கின்றார்கள்.

 ஹில் வியூ பார்க்

ஹில் வியூ பார்க்

இடுக்கி அணையிலிருந்து இந்த பகுதி சில மீட்டர்கள் தூரத்திலேயே அமைந்துள்ளது. இங்கிருந்து அணையைக் காண மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த இடம் அணையை காண்பதற்கு மிக வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

Hoshosh

செருத்தோனி அணை

செருத்தோனி அணை

அரை கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி அணைக்கு அருகிலேயே அமைந்துள்ளது இந்த செருத்தோணி அணை. இது இடுக்கி மற்றும் குலமாவு அணைக்கு அருகிலேயே கட்டப்பட்டுள்ளது. இவை அறுபது சதுர கிமீ தூரத்துக்கு பரவி காணப்படுகிறது.

kseb

இடுக்கி அணையின் சிறப்பு

இடுக்கி அணையின் சிறப்பு

வழக்கமாக அமைக்கப்படும் நேரான அணைகளைவிட சிக்கலான கட்டுமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த அணையை பார்க்கும்போது மனித முயற்சியால் என்னென்ன ஆக்கப்படைப்புகள் சாதிக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. இந்த அணை ஒரு ஒருங்கிணைந்த நீர்மின்னுற்பத்தி நிலையமாகவும் செயல்படுகிறது.

5ஆறுகள், 20 துணை அணைகள், ஒரு சுரங்கத்தள மின்னுற்பத்தி இயந்திர மையம் மற்றும் பல சுரங்கத்தள பாதைகள் ஆகியவை இந்த இடுக்கி அணையின் முக்கியமான அங்கங்களாகும். 650 அடி பரப்பளவில் 550 அடி உயரத்தில் இந்த அணை வீற்றுள்ளது. செறுதோணி அணைத்தடுப்பு மற்றும் இடுக்கி காட்டுயிர் சரணாலயம் போன்ற ஸ்தலங்களுக்கு அருகிலேயே இந்த அணை அமைந்துள்ளது.

உலகிலேயே இரண்டாவது சிறப்பான அணை என்ற புகழ் மட்டுமல்லாமல், அணையைச் சுற்றிலுமுள்ள இயற்கை எழிலுக்காகவும் இடுக்கி அணை பிரசித்தி பெற்றுள்ளது. இந்த அணைப்பகுதியிலிருந்து எங்கு திரும்பி பார்த்தாலும் நம் கண்ணை அகற்ற முடியாத அளவுக்கு சுற்றிலும் இயற்கை எழில் அம்சங்கள் நிரம்பி வழிகின்றன.

இடுக்கி அணைப்பகுதிக்கு பயணம் செய்ய ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட பருவம் மிக உகந்ததாகும். இக்காலத்தில் அணையிலிருந்து நீர் சீறிப்பாயும் அற்புதக்காட்சியை பார்த்து ரசிக்கலாம். தென்னிந்தியாவிலுள்ள சுற்றுலா ரசிகர்கள் அனைவரும் ஒரு முறையாவது பார்த்தே ஆக வேண்டிய சிறப்பான தலம் இந்த இடுக்கி அணையாகும்.

பிரெஞ்சுக் காரர்கள் இந்த அணை கட்டும்போது சிமெண்ட் கரைசல் வெதுவெதுப்பாகிவிடாமல் பாதுகாக்க டன் கணக்கில் ஐஸ் கட்டி கொட்டி பாதுகாத்ததாக நம்பப்படுகிறது. இதனால் கேரளத்தில் இதற்கு ஐஸ்கட்டி அணை என்ற பெயரும் உண்டுமாம்.

kseb

Read more about: travel idukki
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X