Search
  • Follow NativePlanet
Share
» »எர்ணாகுளத்தில் இருக்கும் காலடி எனும் அழகிய கிராமம்!

எர்ணாகுளத்தில் இருக்கும் காலடி எனும் அழகிய கிராமம்!

கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காலடி என்ற அழகிய கிராமம், ஆதிசங்கரரின் பிறப்பிடமாக புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிசங்கரர் கோயிலுக்

By Udhaya

கேரள மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் காலடி என்ற அழகிய கிராமம், ஆதிசங்கரரின் பிறப்பிடமாக புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிசங்கரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், புனித யாத்ரீகர்களும் வந்து செல்கின்றனர். நாமும் ஆன்மீகம் கலந்து ஒரு சிறப்பான சுற்றுலா சென்று வருவோம்.

தொடர்ந்து பல கேரள சுற்றுலா கட்டுரைகளைப் படிக்க நம்மகேரளம் பகுதிக்கு செல்லுங்கள்

 புராணக்கதை இது

புராணக்கதை இது

சாசலம் என்று முன்னர் அழைக்கப்பட்ட காலடி கிராமம் உருவாகி நூறாண்டுகள் ஆனதை தொடர்ந்து சமீபத்தில்தான் 2010-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

காலடி கிராமத்தில் ஆதிசங்கரர் மற்றும் அவருடைய அன்னையை குறித்து சுவாரசியமான புராணக் கதை ஒன்று உள்ளது. அதாவது ஒருமுறை 'பூர்ணா' என்று முன்னர் அழைக்கப்பட்ட பெரியார் நதியில் நீராடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆதிசங்கரரின் தாயார் வழியிலேயே மயங்கி விழுந்து விட்டார். உடனே செய்வதறியாது தவித்த ஆதிசங்கரர் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டார். அப்போது கிருஷ்ணர் ஆதிசங்கரரிடம், 'நீ கால் வைத்த இடத்தில் ஒரு நதி பாயும்' என்றார். இதன் காரணமாக ஆதிசங்கரரின் தோட்டத்தின் அருகிலிருந்து நதி ஒன்று பாயத்தொடங்கியதாக புராணம் கூறுகிறது. அதன்பிறகு ஆதிசங்கரர் கிருஷ்ணருக்காக சிறிய கோயில் ஒன்றை கட்டி அங்கு அவருடைய புகழ்பெற்ற அச்சுதாஷ்டகத்தை பாராயணம் செய்யத் தொடங்கினார்.

Ssriram mt -

 இந்த இடத்தில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

இந்த இடத்தில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்

காலடி கிராமம் எண்ணிலடங்கா கோயில்கள் மற்றும் ஆஸ்ரமங்களுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராமகிருஷ்ண ஆஷ்ரமம், கல்லில் தேவி கோயில், சிருங்கேரி மடம், மஹாதேவா கோயில், வாமனமூர்த்தி கோயில், குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில் போன்ற இடங்கள் நீங்கள் காலடி கிராமத்துக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டிவை.

Raja Ravi Varma

 சிருங்கேரி மடம்

சிருங்கேரி மடம்

ஆதிசங்கராச்சாரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள சிருங்கேரி மடம் பெரியார் நதியின் வடக்கு கரையில் அமைந்திருக்கிறது. இந்த மடத்தில் ஆதி சங்கரரின் தாயாருக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள கோயிலை தவிர பல்வேறு ஆலயங்கள் உள்ளன. இங்கு நடத்தப்படும் வேத வகுப்புகள் மற்றும் விவாதங்களில் ஏராளமான சமய அறிஞர்கள் கலந்து கொள்வார்கள். சிருங்கேரி மடத்தில் உள்ள பிரதான கோயில்கள் ஆதிசங்கரர், சாரதாம்பா அம்மன் மற்றும் விநாயக பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்படும்.

Geyo John

 வாமனமூர்த்தி கோயில்

வாமனமூர்த்தி கோயில்

வாமனமூர்த்தி கோயில் விஷ்ணு பகவானின் அவதாரமான வாமனனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள வெகு சில கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் தொன்மை வாய்ந்த கேரள கட்டிடக் கலைக்கு சாட்சியாக திருக்காக்கரா நகரில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. வாமனமூர்த்தி கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் 10 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்தவை. இந்தக் கோயிலில் ஓணம் திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்படும் என்பதால், அந்த சமயத்தில் கோயிலுக்கு வருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

Sibyav

 குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில்

குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில்

குழுப்பில்காவ் ஜலதுர்கா கோயில் நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்திருக்க அதன் நடுவே எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து மாதமான பால்குணாவில் ஜலதுர்கா திருவிழா 16 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

Er.jjoy

 திருவாணிக்குளம் மஹாதேவா கோயில்

திருவாணிக்குளம் மஹாதேவா கோயில்

காலடி கிராமத்துக்கு வெகு அருகில் ஆலுவா நகருக்கு தெற்கே அமைந்திருக்கும் திருவாணிக்குளம் மஹாதேவா கோயில் எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் முதன்மை தெய்வமான சிவபெருமானை தவிர பார்வதி அம்மனுக்கு ஒரு தனி சன்னதியும், விநாயகர், ஐயப்பன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு சிறிய ஆலயங்களும் உள்ளன. மஹாதேவா கோயிலின் கருவறை பார்வதி ஸ்ரீகோலி என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்தக் கருவறை வருடத்தில் வெறும் பன்னிரண்டு நாட்கள் திருவாதிறை திருவிழா நடைபெறும் காலங்களில் மட்டுமே திறக்கப்படும். அப்போது மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.


Aruna

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X