Search
  • Follow NativePlanet
Share
» »பளபளக்கும் பாலாறு கதையும் நச்சுன்னு நந்தி ஹில்ஸ் டூரும்!

பளபளக்கும் பாலாறு கதையும் நச்சுன்னு நந்தி ஹில்ஸ் டூரும்!

பெங்களூருவில் பணிபுரியும் நண்பர்களுக்கு நிச்சயம் நந்தி ஹில்ஸ் எனும் அற்புத சொர்க்கம் தெரிந்திருக்கும். நீங்கள் பெங்களூருவுக்கு போயி முதல்ல டிரெக்கிங்க்னு பேச்சு எடுத்தாலே நிச்சயம் நந்தி ஹில்ஸ்னு யாராச

By Udhaya

பெங்களூருவில் பணிபுரியும் நண்பர்களுக்கு நிச்சயம் நந்தி ஹில்ஸ் எனும் அற்புத சொர்க்கம் தெரிந்திருக்கும். நீங்கள் பெங்களூருவுக்கு போயி முதல்ல டிரெக்கிங்க்னு பேச்சு எடுத்தாலே நிச்சயம் நந்தி ஹில்ஸ்னு யாராச்சும் ஆரம்பிப்பாங்க. சிலர் மாசம் ஒரு தடவ நந்தி ஹில்ஸ் போய்ட்டு வர்ற பழக்கம் வச்சிருக்காங்க. அட இது என்ன பிரமாதம் பெங்களூருக்கு வெளியில தங்கி இருக்குறவங்க சிலர் வாரா வாரம் நந்தி ஹில்ஸ் நடந்தே போறாங்களாம். இப்டி ஞாயிற்றுக் கிழமையானா படையெடுத்து போற நந்தி ஹில்ஸ் எங்க இருக்குனு பாக்கலாம். உங்களுக்கு தெரியாம இருந்துருக்கலாம் அப்படி ஒரு விசயம் என்னன்னா பாலாறு உருவாகுது.

ஆமாங்க,... பாலாறு உருவாகுற இடத்தையும் நந்தி மலைக் குன்றையும் சரியா பாத்துட்டு ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு திரும்பலாமா. மறக்காம மேல இருக்குற பெல் பட்டன கிளிக் பண்ணிடுங்க. அப்பதான் நம்ம தளத்துல இருக்குற அடுத்தடுத்த பதிவுகள சீக்கிரமா பெறலாம். அப்படியே நம்ம முகநூல் பக்கத்தையும் லைக் பண்ணிடுங்க. வாங்க நந்தி ஹில்ஸ் போலாம்.

பாலாறு உருவாக்கம்

பாலாறு உருவாக்கம்

பாலாறு கர்நாடக மாநிலத்துல இருக்கு நந்தி மலையில உருவாகி, 93 கிமீ கடந்து ஆந்திர மாநிலத்துல விழுந்து, அங்க ஒரு 33 கிமீ பயணிச்சி அப்படியே வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாக தமிழ்நாட்டுக்குள்ள நுழையிது.

Tinucherian

தமிழ்நாட்டில் பாலாறு

தமிழ்நாட்டில் பாலாறு

வேலூர் மாவட்டத்தில் நுழையும் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக சதுரங்கப் பட்டணம் எனும் ஊருக்கு அருகில் வங்கக் கடலில் சங்கமிக்கிறது.

வாணியம்பாடியில் ஆரம்பிக்கும் பாலாற்றின் தமிழ் பயணம், ஆம்பூர், விரிஞ்சிபுரம், வேலூர், ஆற்காடு, நத்தப்பேட்டை, வாலாஜாபாத், பாலூர், மாமண்டூர் ஆகியவற்றை வளமாக்கிவிட்டு, சதுரங்கப்பட்டிணத்தில் கடலில் சேர்கிறது.

Rahuljeswin

 உபநதிகளும் அணைகளும்

உபநதிகளும் அணைகளும்

பாலாற்றின் முக்கிய உபநதிகள் மலட்டாறு, அகரம் ஆறு, கவுன்டன்யா நதி, பொன்னை மற்றும் சேயாறு ஆகியவைகளாகும். பாலாற்றின் மொத்த வடிநீர் நிலப்பரப்பு 13209 சதுர கிலோமீட்டர் ஆகும்.

பாலாறு அணைக்கட்டு

பாலாறு அணைக்கட்டு 1858ம் ஆண்டு கட்டப்பட்டது. வாலாஜா வட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டு, 801 மீ நீளமும், 1.50 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இந்த அணையிலிருந்து காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி, சக்கரமல்லூர் கால்வாய்கள் பிரிந்து பாசனத்துக்கு நீர் தருகின்றன. இதன் மூலம் வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 317 ஏரிகள் பாசன வசதிகள் பெறுகின்றன.

பொன்னை அணைக்கட்டு

பொன்னை கிராமத்தில் 216 மீ நீளம் கொண்ட ஒரு அணைக் கட்டப்பட்டது. இது 1855ம் ஆண்டு கட்டப்பட்ட அணையாகும். இதன் மூலம் மொத்தம் 129 ஏரிகள் நீர் வளம் பெறுகின்றன.

இதில் மேலும் ஒரு சிறிய அணைக்கட்டாக மோர்தானா அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

Vimal1916

நந்தி ஹில்ஸ்

நந்தி ஹில்ஸ்


இப்படி இத்தனை ஏரிகள் நீர் வளம் பெறும் பாலாறு நதி உற்பத்தியாகும் இடத்தை நாம் பார்க்கவேண்டாமா? வாருங்கள் நந்தி ஹில்ஸுக்கு பயணிப்போம்.

வழித்தடம்

பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதி என்றால் அதில் முக்கியமானது மடிவாலாவும். மடிவாலாவிலிருந்து எப்படி செல்வது என்று பார்க்கலாம். மற்ற இடத்தில் இருப்பவர்கள் பேலஸ் ரோடு எனப்படும் மாளிகை சாலையில் வந்தால் அங்கிருந்து ஒரே வழியில் சென்றுவிடலாம்.

மடிவாலாவில் இருந்து ஓசூர் சாலை வழியாக பிரிகேட் சாலையில் இணையவேண்டும். பின் மியூசியம் சாலை வழியாக புனித மார்க்ஸ் சர்க்கிள்ளை கடந்து எம் ஜி சாலை வழியாக கப்பன் பார்க் வந்தடையலாம். அங்கிருந்து ராஜ்பவன் சாலை, மாளிகை சாலையை கடந்து சங்கே சாலை வழியாக புக்ஸ் சாலையை எளிதில் அடையலாம். பின் பெல்லாரி சாலையை அடைந்து தேவனஹல்லி கோட்டை நோக்கி பயணிக்க வேண்டும். இந்த இடத்தை நீங்கள் அடைந்ததும் நந்தி ஹில்ஸ் சாலையை காணமுடியும். இப்படி பயணித்தால் அதிகபட்சம் 2 மணி நேரங்களில் நந்தி ஹில்ஸ் அடி வாரத்தை அடையலாம்.

இல்லை இது மிகவும் குழப்பமாக இருக்கிறது என்றால் உங்களுக்காக இன்னொரு வழித்தடமும் இருக்கிறது.

மடிவாலாவிலிருந்து , சில்க்போர்டு வழியாக பெலந்தூர், புரூக்பீல்ட், கிருஷ்ணராஜபுரா, ஆவலஹல்லி, கொண்டனஹல்லி வழியாக தேவனஹல்லியை அடைந்து அங்கிருந்து நெடுஞ்சாலை எண் 104ஐத் தொடர்ந்து சென்றால் அது நேராக நந்தி மலையில் கொண்டு சென்று விடும்.

பெயர்க்காரணம் என்ன தெரியுமா?

பெயர்க்காரணம் என்ன தெரியுமா?

நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல கதைகள் உள்ளன. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்று கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் சோழர்கள் கட்டிய போகா நந்தீசுவர கோவிலொன்றும் உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு

Sankar.s

 நந்தி ஹில்ஸின் அழகிய புகைப்படங்கள்

நந்தி ஹில்ஸின் அழகிய புகைப்படங்கள்

மேகங்கள் சூழ செந்நிறம் கலந்த வெள்ளையில் அழகிய காட்சி தரும் நந்தி மலை இது.

Srichakra Pranav

 ஆர்க்காவதி

ஆர்க்காவதி

நந்தி ஹில்ஸ் சென்றவர்கள் நிச்சயம் இதைப் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அதிலும் இதை ஏதோ நீர் தேங்கி நிற்கிறது என்று நினைத்திருக்கக் கூடும். இதுதான் ஆர்க்காவதி எனும் நதியின் உற்பத்தி ஆகும் இடம்.


Tinucherian

 நந்தி மலை

நந்தி மலை

ஏதோ சொர்க்கம் என்று எண்ணிவிட வேண்டாம். ஒருவகையில் இதுவும் சொர்க்கம்தான். நந்தி மலை எனும் சொர்க்கபூமி.

Shyamal

நந்தி மலை நார்னியா தோற்றம்

நந்தி மலை நார்னியா தோற்றம்

நார்னியா படத்தில் வரும் இடத்தைப் போல உங்களுக்கு தோன்றியிருந்தால், மன்னித்துவிடுங்கள். இது நந்தி மலை. அப்படியே வேற்று உலகத்தில் இருப்பதை போன்ற தோற்றத்தை தரும் நந்தி மலை இது.

Vipul Singhania -

 புகைப்பட தொகுப்பு இல்லை

புகைப்பட தொகுப்பு இல்லை

இந்த மாதிரியான காட்சியை நீங்கள் நேரிலே காணமுடியும். உடனே நந்தி ஹில்ஸ் திட்டமிடுங்க..

Lijith.l7

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X