Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை- ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளிக்கு பயணிக்க நீங்க ரெடியா ?

சென்னை- ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளிக்கு பயணிக்க நீங்க ரெடியா ?

இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இன்னும் நீங்க போகலைன்னா, வாங்க சென்னையில் இருந்து மிக அருகிலேயே உள்ள இத்தலத்திற்கு பயணிப்போம்.

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா இந்தியாவின் ஒரே விண்கல ஏவுதலமாகத் திகழ்கிறது. இங்கே அமைந்துள்ள விண்கல ஏவு நிலையமான சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் கீழ் சந்திராயன், பிஎஸ்எல்வி என இன்னும் பல புகழ்பெற்ற இந்திய ராக்கெட்டுகள் இப்பகுதியில் இருந்து ஏவப்பட்டதில் மாபெரும் வெற்றியைக் கண்டது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் இத்தலம் ஒவ்வொரு குடிமகனும் சென்று தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். சென்னையில் இருந்து மிக அருகிலேயே உள்ள இத்தலத்திற்கு பயணிப்போம் வாங்க.

சென்னை - ஸ்ரீஹரிகோட்டா

சென்னை - ஸ்ரீஹரிகோட்டா

சென்னையில் இருந்து சுமார் 104 கிலோ மீட்டர் தொலைவில் பழவேற்காட்டைக் கடந்து அமைந்துள்ளது ஸ்ரீஹரிகோட்டா. ஆந்திராவிற்கு உட்பட்ட செல்லூர்பேடாவிற்கு அடுத்து புலிகேட் ஏரியைக் கந்து சென்றால் தென்படும் மணற்திட்டே அத்தீவுப் பகுதி. இந்த வழிப்பாதை முழுவதுமே பல வியப்பூட்டும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது.

ISRO,Department of Space

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

வங்கக் கடலுக்கும், புலேகேட் ஏரிக்கும் நடுவே ஸ்ரீஹரிகோட்டா தீவுபோல் காட்சியளிக்கிறது. இந்தியாவில் அமைந்துள்ள பெரிய உப்பு நீர் ஏரியில் இந்த புலிகேட் ஏரி முதன்மையானது. இங்கே செயல்படும் பறவைகள் சரணாலயம், ராக்கெட் ஏவும் போது அருகில் பார்த்து ரசித்திட ஏரிக் கரை ஓரம், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் என இப்பகுதி பயணிகளால் ஈர்க்கப்படுகிறது.

Government of India

பழவேற்காடு பறவைகள் சரணாலயம்

பழவேற்காடு பறவைகள் சரணாலயம்

பழவேற்காட்டின் முதன்மையான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது பறவைகள் சரணாலயம். சுமார் 481 கிலோ மீட்டர் அளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த பாதுகாக்கப்பட்ட சரணாலயம் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலம் என பரவியுள்ளது. இடம் பெயரும் பறவையினங்களுக்கு தற்காலிக இருப்பிடமாக திகழும் இந்த சரணாலயத்திற்கு செப்டம்பர் நவம்பர் மாதங்களில் பயணம் செய்வது நல்ல அனுபவத்தைத் தரும்.

Nandha

பழவேற்காடு கோட்டை

பழவேற்காடு கோட்டை

டச்சுக் குடியசின் குடியிருப்புகளுக்காக இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை பழவேற்காடு கோட்டை. இக்கோட்டையே டச்சு சோழ மண்டலத்தின் தலைமையகமாகவும் செயல்பட்டுள்ளது. டச்சுக்காரர்களால் ஜெல்டிரியா கோட்டை என அழைக்கப்பட்டு வற்த இக்கோட்டை இன்றும் அப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சின்னமாக காட்சியளிக்கிறது.

McKay Savage

பாதுகாக்கப்பட்ட பகுதி

பாதுகாக்கப்பட்ட பகுதி

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தைக் கடந்தால் ஸ்ரீஹரிகோட்டாவின் பாதுகாக்கப்படும் வனப்பகுதி தென்படும். அனுமதியின்றி உள்ளே செல்ல முடியாது. மேலும், ஏவுகனை செலுத்தும் காலத்திலும் உள்ளே பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. பிற காலங்களில் முன் அனுமதியுடன் சென்றால் ஏவுகனைத் தலத்தை முழுவதுமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும். ஏவுகனை செலுத்தும் போது னுமதி மறுக்கப்பட்டாலும் புலிகேட் ஏரியின் கரையில் இருந்து ராக்கெட்டி செலுத்துவதை காணக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ISRO,Department of Space

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X