Search
  • Follow NativePlanet
Share
» »ஒடிசாவிலும் ஒரு நீலகிரி மலை இருக்கு தெரியுமா?

ஒடிசாவிலும் ஒரு நீலகிரி மலை இருக்கு தெரியுமா?

சந்திபூரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள நீலகிரி என்ற நகரம் நீலகிரி மலைகளுக்கு அருகில் அழகே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் "நீல மலை" என்று அதன் பெயரே விளக்கும் வண்ணம் தான்

By Udhaya

சந்திபூரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள நீலகிரி என்ற நகரம் நீலகிரி மலைகளுக்கு அருகில் அழகே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அர்த்தம் "நீல மலை" என்று அதன் பெயரே விளக்கும் வண்ணம் தான் உள்ளது. பெயரை போலவே இம்மலையை காணும் போது நீல நிறத்தில் காட்சி அளிக்கும். இந்த மலைக்கு மேல் பஞ்சலிங்கேஷ்வர் கோவில் உள்ளது. இங்குள்ள சுற்றுலாத் தளங்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்

நீலகிரி அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

நீலகிரி அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

இதற்கு அருகில் இருக்கும் அரண்மனை மற்றும் ஜகன்னாத் கோவிலும் நீலகிரியின் முக்கியமான ஈர்ப்புகளாகும். நீலகிரியின் அரசர்கள் மற்றும் ராணிகளால் அணியப்பட்ட அரச ஆடைகளும் பழமையான தங்கம் மற்றும் வைர ஆபரணங்களும் இந்த அரண்மனையில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

Subhashish Panigrahi

 உணவுகளும் சிற்றுண்டிகளும்

உணவுகளும் சிற்றுண்டிகளும்

இதனருகில் உள்ள தெருவோரங்களில் பல உணவு பதார்த்தங்களும் விற்கப்படுகின்றன. இந்த நகரத்திற்கு அருகே கண்ணை கவர்ந்திழுக்கும் கும்குட் அணையையும் சுற்றிப் பார்க்கலாம். இந்த அணைக்கு அருகே ஒரு பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் உள்ளது. நீலகிரி இனிப்புகளுக்காகவும் புகழ் பெற்றது. இங்குள்ள கச்சேரி சந்தையில் ருசியுள்ள பல இனிப்பு உணவுகளை ருசித்துப் பார்க்கலாம்.

Devopam

சந்திபூர் கடற்கரை

சந்திபூர் கடற்கரை


சந்திபூர் சுற்றலாத் தலங்களில் முதன்மையான ஈர்ப்பாக விளங்குகிறந்து சந்திபூர் கடற்கரை. இந்த அதிசய கடற்கரை இயற்கை அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு ஒரு நேரத்தில் உள்வாங்கும் கடல், அடுத்த நொடியே உள்வாங்கிய இடத்தை தண்ணீரால் நிரப்பும். இதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

Subhasisa Panigahi -

 கடற்கரையை சுற்றி

கடற்கரையை சுற்றி


அலைகளின் வேகம் குறிப்பிட்ட இடைவேளையில் அதிகமாகவும் குறைவாகவும் மாறுவதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த அதிசயத்தை இங்கே காணலாம். அலைகளின் அளவு குறைவாக இருக்கும் போது கடல் உள்வாங்கும். அலைகளின் அளவு அதிகரிக்கும் போது உள்வாங்கிய இடம் நீரால் மூடப்படும். கடற்கரையை சுற்றியுள்ள மணற்திட்டுக்களும் சவுக்க மரங்களும் இந்த கடற்கரைக்கு கூடுதல் அழகை சேர்க்கும். இந்த கடற்கரையில் சிகப்பு நிற நண்டுகளும் ஹார்ஸ் ஷூ நண்டுகளும் அதிகமாக வாழ்கின்றன.

Alankar41

 பீடர்கனிகா

பீடர்கனிகா

சந்திபூரில் இருந்து 206 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பீடர்கனிகா, பிராமணி, பைடரணி மற்றும் டம்ரா நதிகளின் டெல்டா பகுதியில் உள்ளது. அருமையான வனவிலங்குகள் மற்றும் பசுமையான காடை கொண்டுள்ளதால் பீடர்கனிகாவை சுற்றிப் பார்க்க கோடைக்காலத்திலும் குளிர் காலத்திலும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

Puru150

அனுமதி

அனுமதி


இங்கு நுழைய பீடர்கனிகாவின் காட்டிலாக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இடத்தை அடைய கோலாவில் இருந்து தங்மலுக்கு படகு மூலமாக மட்டுமே வர முடியும். இது இந்தியாவிலுள்ள இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடாக விளங்குவதால் படகு பயணம் சுவாரசியமாக இருக்கும்.

Sayanti Sikder

தேசியப்பூங்கா

தேசியப்பூங்கா


பீடர்கனிகாவில் ஒரு தேசிய பூங்காவும், அதனுள் ஒரு வனவிலங்கு சரணாலயமும் உள்ளது. இங்குள்ள கஹிரா மாதா கடற்கரை இந்த காட்டையும் வங்காள வரிகுடாவையும் பிரிக்கிறது.

வளமையான தாவர வர்க்கம் மற்றும் விலங்கினங்களை கொண்டுள்ளதால் பீடர்கனிகாவில் பல அறிய வகை மிருகங்களையும் தாவரங்களையும் காணலாம்.

Anubhav123sarangi

 முதலைகள்

முதலைகள்


வெண்ணிற முதலைகள், உப்புநீர் முதலைகள், காட்டு பல்லிகள், மலை பாம்புகள், ராஜ நாகங்கள், நெடுங்கிளாத்திகள் என பல மிருகங்களை இங்கே கண்டு ரசிக்கலாம். மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டத்திலிருந்து இடம்பெயர்கின்ற பறவைகளும் இங்கே வருவதால் இது கூடுதல் ஈர்ப்பாக அமைகிறது.

Chinmaya kumar sahani

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X