Search
  • Follow NativePlanet
Share
» »நவம்பர் மாதத்தில் நாம் நிச்சயம் செல்லவேண்டிய இந்திய சுற்றுலாத்தலங்கள்

நவம்பர் மாதத்தில் நாம் நிச்சயம் செல்லவேண்டிய இந்திய சுற்றுலாத்தலங்கள்

திரும்பி பார்ப்பதற்குள் 2015ஆம் வருடத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம். வருட முடிவுக்கு இன்னும் ஒரே மாதம் தான் மீதம் இருக்கிறது. இந்த வருடம் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ எங்கேனும் பயணம் போயிருக்கிறீர்களா?. இல்லை என்றால் இந்த நவம்பர் மாதத்திலேனும் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ளுங்கள். வாருங்கள், இந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நாம் பயணம் போக சிறந்த இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான இடங்கள் பிடிக்கும். சிலருக்கு குளுமையான மலை பிரதேசத்திற்கு செல்ல பிடிக்கும், சிலருக்கோ காலாற கடற்கரையில் உலாவ பிடிக்கும், ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்ய சிலருக்கு பிடிக்கும் இப்படி மாறுபட்ட ரசனை உடையவர்களுக்கு ஏற்ற இடங்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கூர்க் !!

கூர்க் !!

நவம்பர் மாதத்தில் சுற்றுலா செல்ல கூர்க் ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். கர்னாடக மாநிலத்தில் இருக்கும் கூர்க் மேற்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட பசுமை நிறைந்த ஒரு பகுதி.

இங்கே அருவிகள், வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் ஆன்மீக ஸ்தலங்கள் போன்றவை அதிகம் இருக்கின்றன.

-Reji

கூர்க் !!

கூர்க் !!

கூர்கில் இருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலம் என்றால் அது அப்பே அருவி தான். கூர்கின் தலைநகரான மடிகேரியில் இருந்து 8கி.மீ தொலைவில் இந்த அருவி அமைந்திருக்கிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே இருக்கும் இந்த அருவி ஒரு தனியார் தேயிலை தோட்டத்தினுள் உள்ளது. தொங்கும் பாலம் ஒன்றை கடந்து தான் நம்மால் அப்பே அருவியை சென்றடைய முடியும்.

Sooraj Shajahan

கூர்க் !!

கூர்க் !!

அப்பே அருவிக்கு அடுத்தபடியாக கூர்கில் பிரபலமான இடம் நகர்ஹோலே தேசிய பூங்கா ஆகும். ராஜீவ்காந்தி தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படும் இந்த பூங்கா கூர்க் மற்றும் மைசூர் மாவட்ட எல்லையில் இருக்கிறது.

ஒருகாலத்தில் மைசூர் வுடையார் மன்னர்கள் வேட்டையாடும் பகுதியாக இந்த பூங்கா இருந்திருக்கிறது. தற்சமயம் இந்த பூங்காவில் புலிகள், யானைகள், கரடிகள், மான்கள் என 250க்கும் மேற்ப்பட்ட பல வகையான வன உயிரினங்கள் இந்த பூங்காவினுள் வாழ்கின்றன.

Sankara Subramanian

கூர்க் !!

கூர்க் !!

நாஹர்ஹோலே பூங்காவை 'சபாரி' பயணம் மூலமாகவும் சுற்றிப்பார்க்கலாம். வன விலங்குகளை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பினை இதன் மூலம் பெறலாம்.

Sissssou2

கூர்க்!!

கூர்க்!!

கூர்கிலிருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கிறது வாலனூர் பிஷிங் காம்ப். வாலனூர் பிஷிங் காம்ப்பிலிருந்து துவங்கும் முகாம்கள் அங்கிருந்து காவிரி ஆற்றின் வழியில் அமைந்துள்ள தொட்டம்கலி, பீமேஸ்வரி போன்ற இடங்களுக்கு சென்று இறுதியாக கலிபோரே பகுதியில் முடிவடைகிறது.

பலவகையான மீன்கள் வாழும் இங்கு தூண்டிலில் மீன் பிடிக்க வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

Vijay Bandari

கூர்க்!!

கூர்க்!!

கூர்க் சமீப காலமாக ராப்டிங் என்ற சாகச படகு சவாரி பிரபலமாகி வருகிறது. 'பரபோலே' என்ற ஆற்றில் ராப்டிங் சவாரி சில தனியார் முகவங்களால் நடத்தப்படுகிறது.

சீறிப்பாயும் ஆற்றில் மிதவை படகில் அமர்ந்தபடி செல்லும் இந்த சாகச பயணம் வாழ்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருக்கும்.

கூர்க்!!

கூர்க்!!

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் பேரழகு நிறைந்த இடங்களை கொண்டிருக்கும் கூர்க்கை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழின் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Motographer

புஷ்கர்!!

புஷ்கர்!!

குளிர்ச்சியூட்டும் மலைகளோ, காலாற நடந்து செல்ல கடற்கரைகளோ இல்லை என்றாலும் அதி உன்னதமான ராஜ கலாசாரத்தையும், தன் புவி அமைப்புக்கு தகுந்த இயல்பான நடவடிக்கைகளில் கொண்டாட்டத்தை புகுத்தியும் இந்தியாவின் தவிர்க்க முடியாத சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக ஜொலிக்கும் இடம் ராஜஸ்தான்.

அம்மாநிலத்தில் உள்ள புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் உலகின் மிகப்பெரிய கால்நடைச்சந்தை கூடுகிறது.

Koshy Koshy

புஷ்கர்!!

புஷ்கர்!!

கார்த்திகை ஏகாதசியில் இருந்து கார்த்திகை மாத பௌர்ணமி வரை ஐந்து நாட்கள் இந்த புஷ்கர் கால்நடைத் திருவிழா நடைபெறுகிறது. ஏறத்தாழ 50,000 ஒட்டகங்கள் விற்பனைக்காக இங்கே கொண்டு வரப்படுகின்றன.

இது தவிர ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தை போன்றவையும் இங்கே தனித்தனியாக நடைபெறுகிறது. இந்த ஐந்து நாட்களில் மட்டும் இரண்டு லட்சம் மக்கள் வரை இங்கே வருகின்றனர்.

Koshy Koshy

புஷ்கர்!!

புஷ்கர்!!

இங்கு விற்பனைக்காக வரும் ஒட்டகங்கள் ஒரு மணப்பெண்ணுக்கு நிகராக அலங்கரிக்கப்படுகின்றன. ஓட்டப்பந்தயம், நடனம் போட்டிகளில்(ஆம்! ஒட்டக நடனப் போட்டி) வெற்றி பெரும் நல்ல ஆரோக்கியமான , இளமையான ஒட்டகம் ஒன்று பத்து லட்சம் வரை விலை போகிறது.

By mantra_man

புஷ்கர்!!

புஷ்கர்!!

கால்நடை சந்தை தவிர இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு என்றே பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கயிறு இழுத்தல், உரியடி, வெளி நாட்டவரும் இந்தியர்களும் மோதும் கபடிப்போட்டி, மற்றும் நீளமான மீசை வைத்திருப்பவர்களுக்கான மீசை போட்டியும் இங்கே நடக்கிறது.

மாலை நேரங்களில் ராஜஸ்தான் மாநிலத்தின் நாட்டுப்புற கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Sumith Meher

புஷ்கர்!!

புஷ்கர்!!

bபிரம்மா கோயில் மற்றும் புனித நீராடல்!!

புஷ்கரில் கால்நடைச்சந்தை நடக்கும் கார்த்திகை பௌர்ணமி அன்று படைக்கும் கடவுளான பிரம்ம தேவரால் இங்கு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் குளத்தில் புனித நீராட ஏராளமான யாத்திரிகர்களும் புஷ்கருக்கு வருகை தருகின்றனர்.

Bachellier Christian

புஷ்கர்!!

புஷ்கர்!!

ராஜஸ்தானில் இருக்கும் புஷ்கர் நகரை பற்றிய பயண தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

புஷ்கர் ஹோட்டல்கள் !!

José Miguel

ஜெய்சால்மர்

ஜெய்சால்மர்

ராஜஸ்தானில் நவம்பர் மாதத்தில் நாம் செல்ல வேண்டிய மற்றுமொரு இடம் ஜெய்சால்மர் ஆகும். 'ராஜஸ்தானின் மணி மகுடம்' என்ற சிறப்புப்பெயர் கொண்ட இந்நகரம் ராஜஸ்தானின் ராஜ பழமையை இன்னும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.

இங்கே உள்ள பிரம்மாண்ட கோட்டையை சுற்றிப்பார்க்கலாம், இரவு நட்சத்திரங்களுக்கு கீழே உறங்கலாம், மற்றும் மணலில் கார் ஒட்டி விளையாடலாம்.

ஜெய்சால்மர்

ஜெய்சால்மர்

ஜெய்சால்மர் நகரின் மையத்தில் இருக்கும் ஜெய்சால்மர் கோட்டை தான் இந்நகரின் அடையாளமாக இருக்கிறது. 800ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்ட இக்கொட்டையினுள் அக்கால மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமிர்தசரஸ்

அமிர்தசரஸ்

இந்த தீபாவளி பண்டிகையை வித்தியாசமாக கொண்டாட உங்களுக்கு விருப்பமா?. அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அமிர்தசரஸ் ஆகும்.

பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான இங்கே உள்ள சீக்கியர்களின் புனித கோயிலான ஹர்மந்திர் சாஹிப்பில் வண்ண விளக்குகளால் பொற்கோயில் அலங்கரிக்கப்பட்டிருக்க வான வேடிக்கைகளுடன் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படும்.

அமிர்தசரஸ்

அமிர்தசரஸ்

சீக்கிய மதத்தின் புனித கோயிலாக இருந்தாலும் சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக சர்வ மதத்தினரும் இக்கோயிலுக்கு வர அனுமதி உண்டு.

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹேப் என்ற இக்கோயிலின் சுவர்கள் முழுக்க தங்க தகடுகள் பாதிக்கப்பட்டிருப்பதால் 'தங்க கோயில்' என்றும் இது விளிக்கப்படுகிறது.

நவம்பர் மாதத்தில் சுற்றுலா செல்வதாக இருந்தால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று வாருங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X