Search
  • Follow NativePlanet
Share
» »பெரம்பலூராக மாறிய பெரும்புலியூர் - 10 கோடி வருட பழமையான மரங்களின் மர்மங்கள்!

பெரம்பலூராக மாறிய பெரும்புலியூர் - 10 கோடி வருட பழமையான மரங்களின் மர்மங்கள்!

பெரம்பலூராக மாறிய பெரும்புலியூர் - 10 கோடி வருட பழமையான மரங்களின் மர்மங்கள்!

பெரம்பலூர்ல அப்படி என்ன இருக்கு என்று மிகவும் குறைத்து மதிப்பிட்டிருந்தால் நீங்கள் சற்று நேரம் செலவழித்து இந்த கட்டுரையை முழுவதும் படியுங்கள். ஏனென்றால் ஒரு காலத்தில் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த இடமாக இருந்த பெரும்புலியூர்தான் இன்று பெரம்பலூராக உள்ளது. இது குறித்த வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பினாலும், இங்குள்ள சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினாலும் நீங்கள் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பெரும் வனப் பகுதியாக இருந்த பெரம்பலூர், புலிகளும், சிறுத்தைகளும், கரடிகளும் வாழ்ந்த பூமியாகும். அழகிய மலைகளும், மலை சூழ்ந்த பகுதிகளும் நிறைந்து காணப்பட்டது பெரும்புலியூர். சரி வாருங்கள் பெரம்பலூரின் முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

பெரம்பலூர் ஏரி

பெரம்பலூர் ஏரி

பெரம்பலூர் ஏரிக்கு நீர் வரத்துக்காக வெள்ளைக் காரர்கள் காலத்தில் ஜார்ஜ் வாய்க்கால் ஒன்று உருவாக்கப்பட்டது. அது பராமரிப்பின்றி பெரும்பகுதி அழிந்துவிட்டது. இதனால் இந்த ஏரிப் பகுதி மிகவும் சுருங்கிவிட்டது.

ஆனால் இந்த ஏரிப் பகுதியில் அருள் மிகு நீலி அம்மன் கோவிலும், அருள் மிகு வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலும் உள்ளன. திருவிழாக் காலங்களில் இங்கு அநேக பக்தர்கள் வருகிறார்கள். மற்றபடி உள்ளூர் மக்களே இங்கு வருகை தருகிறார்கள்.

Tha-uzhavan

 ரஞ்சன்குடி கோட்டை

ரஞ்சன்குடி கோட்டை


பெரம்பலூரில் என்னதான் இருக்கு என்று கேட்பவருக்கு நிச்சயமாக இந்த பதில் கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

தமிழ் வரலாற்றிலேயே மிக முக்கிய கோட்டை ஒன்று பெரம்பலூரில் உள்ளது. அது ரஞ்சன்குடி கோட்டை ஆகும்.

இது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

பெரம்பலூர் நகரிலிருந்து22 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. திருச்சி மாநகரத்திலிருந்து 70 கிமீ தூரம் ஆகும்.

வாலி கொண்டா போரில் போர் மைய மாக செயல்பட்ட இந்த கோட்டை, சந்தா சாஹிப்பை வெற்றி பெறச் செய்தது.

Tha-uzhava

 ரஞ்சன்குடி கோட்டை அமைப்பு

ரஞ்சன்குடி கோட்டை அமைப்பு

நீள் வட்டமாக அரைக் கோள வடிவில் அமைந்துள்ளது இந்த கோட்டை.

வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள 3 அரண்களால் இந்த கோட்டை சூழப்பட்டு பாதுகாப்பாக அமைந்துள்ளது.

கோட்டையின் அடிப்பாகம் மண் சுவரினால் சூழப்பட்டுள்ளது.

Tha-uzhavan

 போர்க்களம் செல்லும் பாதை

போர்க்களம் செல்லும் பாதை

படிகளின் வழியாக பேட்டை என்று அழைக்கப்படும் திறந்த வெளி போர் களத்துக்கு செல்லும் வழியாக அமைக்கப்பட்டிருந்தது.

மேல் அடுக்க கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இது பீரங்கி தளம் மற்றும் சிப்பாய்கள் உதவியுடன் பாதுகாப்பு கோபுரமாக அமைந்துள்ளது.

Tha-uzhavan

நவாபின் நீச்சல் குளமும் சிறைச் சாலையும்

நவாபின் நீச்சல் குளமும் சிறைச் சாலையும்

நவாப் குளிப்பதற்கு என தனியே பிரம்மாண்ட நீச்சல் குளம் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது.

ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு தனித் தனியே சிறைச் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது. கோட்டையில் ஒரு அரண்மனை, குடியிருப்பு பகுதிகள், சுரங்க அறைகள், பேட்டை மற்றும் கோட்டை மேடு பகுதிகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை ஒன்றும் இருந்தது.

Tha-uzhavan

சாத்தனூர் கல்மரம்

சாத்தனூர் கல்மரம்


சாத்தனூருக்கு தென்கிழக்கில் 100 கிமீ தொலைவில் இன்று இருக்கும் கடல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் இருந்ததாக புவியியல் கூற்றுப் படி தெரிவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் இருந்த ஒரு மரம் 10 கோடி ஆண்டுகளுக்கும் முந்தையது என்றும் அது மரமாகி காணப்படுவதாகும் கூறப்படுகிறது.

கல்லாக மாறிய மரம் 18 மீ உயரம் கொண்டது. வரகூர், அனைப்பாடி, அலுந்தளிப்பூர், சாரதாமங்கலம் உள்ளிட்ட ஊர்களின் அருகிலும் நிறைய கல் மரங்கள் காணப்படுவதாக கூறிகின்றார்கள்.

குரும்பலூர்

குரும்பலூர்


குரும்புலியூர் என்ற பெயர்தான் குரும்பலூர் என்று மருவியுள்ளது. இந்த பகுதி பச்சை மலை மற்றும் மூலக் காடு உள்ளிட்ட மலைகள் சூழந்து இயற்கை வனப்புடன் காணப்படுகிறது.

இந்த ஊர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் முக்கியமாக நேதாஜி படையில் இருந்தவர்களின் சொந்த ஊராக இருக்கிறது.

Tha-uzhavan

பஞ்ச பாண்டவர்கள் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்த லாடபுரம்

பஞ்ச பாண்டவர்கள் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்த லாடபுரம்

பெரம்பலூரில் இருந்து 14 கிமீ தொலைவில் இருக்கும் பச்சை மலையில் பஞ்ச பாண்டவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரே அருவியான மயிலூற்று அருவி இந்த மலையில்தான் இருக்கிறது. இந்த ஊருக்கு லாடபுரம் என்று பெயர்.

Tha-uzhavan
https://commons.wikimedia.org/wiki/Category:Ranjankudi_Fort#/media/File:Ranjankudi_fort-Perambalur_district-Tamil_Nadu-part46.JPG

 மயிலூற்று அருவி

மயிலூற்று அருவி

மயிலூற்று அருவி அல்லது மயிலூத்து அருவி பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள லாடபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு அருவி. இது பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் வழியில் உள்ளது. ஆண்டின் பெரும்பகுதியில் வறண்டிருப்பினும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பொழியும் மழையால் இந்த அருவி செழிப்புற்றுச் சுற்றுலா ஈர்ப்புப் பகுதியாக விளங்குகின்றது.

Ref: Koraiyar waterfalls

Snatarajanwiki

சோழகங்கம் ஏரி

சோழகங்கம் ஏரி

ராஜேந்திரச் சோழன் தன் வெற்றியைக் குறிக்க இந்த ஏரியை வெட்டியதாக வரலாறு கூறுகிறது.

திருவாலங்காடு செப்பேடுகளில் இந்த ஏரியின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

5 கிமீ பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஏரி 130 சதுர கிமீ பரப்பளவு வயல்களுக்கு பாசன வசதிக்காக பயன்படுகிறது.

Tha-uzhavan

Read more about: districts of tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X