Search
  • Follow NativePlanet
Share
» »ஆதி தமிழர்கள் இந்துக்கள் அல்ல... அடித்துக் கூறும் புதுக்கோட்டை மாவட்டம்!

ஆதி தமிழர்கள் இந்துக்கள் அல்ல... அடித்துக் கூறும் புதுக்கோட்டை மாவட்டம்!

ஆதி தமிழர்கள் இந்துக்கள் அல்ல... அடித்துக் கூறும் புதுக்கோட்டை மாவட்டம்!

புதுக்கோட்டை பெயரிலேயே வரலாற்று தகவல்களைக் கொண்டது என்பதை நமக்கு உணர்த்தும் வகையில் இருக்கும் இந்த மாவட்டம் மதுரை, திருச்சி, திருவாரூரை அண்டையாகக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதி வங்கக் கடலை எல்லையாகக் கொண்டுள்ளது. நார்த்தாமலை, பிரான்மலை உள்ளிட்ட சில மலைகள் இருந்தாலும் இந்த மாவட்டத்தில் இயற்கை சுற்றுலாத் தளங்கள் மிகக் குறைவு. அப்படியானால் இந்த மாவட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய சுற்றுலாத் தலங்கள் எதுவும் இல்லையா எனக் கேட்டால் நிச்சயமாக இருக்கிறது அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். வாங்க..

மிக முக்கியமாக இந்த மாவட்டத்தில் இருக்கும் சித்தன்ன வாசல் உள்ளிட்ட குகைகளில் இருக்கும் ஓவியங்களும், சமண படுக்கைகளும் ஆதி தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பதை பறை சாற்றுகிறது. வாருங்கள் அவை பற்றியும் கீழே தெரிந்து கொள்வோம்.

முக்கியமாக காணவேண்டிய சுற்றுலாத் தளங்கள்

முக்கியமாக காணவேண்டிய சுற்றுலாத் தளங்கள்

புதுக்கோட்டை அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் ஆலயம், குடுமியான் மலை, சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், கொடும்பாளூர், ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி கோவில், கோகர்ணேஸ்வரர் கோவில், ஆவூர், விராலி மலை முருகன் கோவில், திருமயம், பொன்னமராவது, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல இடங்கள் இங்கு காணப்படுகின்றன.

dixon

விராலி மலை முருகன் கோவில்

விராலி மலை முருகன் கோவில்


விராலிமலை முருகன் கோவில் திருச்சியின் தென் பகுதியில் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள விராலிமலையின் மலை மேல் அமைந்துள்ளது.

விராலி மலை முருகனை தரிசிக்க நீங்கள் 207 படிகளை கடக்க வேண்டியிருக்கும்.

முருகனுக்கு சந்தனக் கலவையால் ஆன சுருட்டு வழங்கும் விழா மிகவும் சிறப்பாக உள்ளது.

விராலிமலையைச் சுற்றிலும் நிறைய மயில்கள் இருக்கின்றன. இவை குழந்தைகளை அதிகம் ஈர்க்கின்றன.

C.KUMARASAMY,THENNAMBADI

 புதுக்கோட்டை அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் ஆலயம்

புதுக்கோட்டை அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் ஆலயம்

எங்குள்ளது?

புதுக்கோட்டை பகுதியில் ராஜக்குளம் எனும் இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

அதிசயம்

புதுக்கோட்டை அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை என்பது இல்லை. ஒரு நாளில் இரண்டு முறை மட்டும் ஆரத்தி எடுக்கப்படும்.

dixon

குடுமியான் மலை

குடுமியான் மலை

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால அமைப்புகளில் இந்த குடுமியான் மலை மிக முக்கிய இடத்தை பெறுகிறது.

வரலாற்று சிறப்புகள்

குடுமியான் மலை வரலாற்று சிறப்பு மிக்கதாக இருப்பதால் வரலாற்றில் அதிக முறை பெயர் மாற்றப்பட்ட ஒரு இடமாக இருக்கிறது.

திருநாலக்குன்றம் என்றும், சிகாநல்லூர் என்றும் இந்த ஊருக்கு பெயருண்டு.

குடுமியான் மலைக்கு கீழே சுற்றி ஒரு கிராமமே இருக்கிறது. கூடவே ஒரு கோவிலின் வளாகமும் இருக்கிறது.

எப்படி செல்வது

புதுக்கோட்டை - கொடும்பாளூர் - மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது.

முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கிச் சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு.

R.K.Lakshmi

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்

சித்தன்ன வாசல் என்பது எல்லோராவுக்கு நிகரான வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பகுதி ஆகும்.

சமணர்களின் வரலாற்று சுவர் ஓவியங்களும், பாறைகளால் ஆன சமண படுக்கைகளும் இருக்கின்றன. இவை ஆதி தமிழகத்தில் இந்து மதம் என்ற ஒன்று இருக்கவில்லை என்பதை பறை சாற்றுகிறது.

வைணவமும், சைவமும், புத்தமும், சமணமுமே தமிழகத்தின் முக்கிய மதங்களாக இருந்துருக்கின்றன என்பதற்கான சான்றுகளே இவை. அதிலும் அவர்கள் சமண மதத்தை பின்பற்றியிருக்கலாம் என்றே கருதப்படுகிறது

சமணர் கோவில் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்சமணர் கோவில் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்


Pc: Thamizhpparithi Maari

கொடும்பாளூர்

கொடும்பாளூர்

சிலப்பதிகாரத்தில் பேசப்பட்ட ஊர் இதுவாகும். இங்குள்ள கற்றளிகளுக்காக இது பெயர் பெற்றுள்ளது.

வரலாற்று சிறப்பு கொண்ட கற்கோவில்களை கொண்டது இந்த கொடும்பாளூர். இங்கு இரண்டு முக்கிய நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன.

மூவர் கோவில் மற்றொன்று முசுகுந்தேஸ்வர். மேலும் ஐவர் கோவில் என்ற ஒன்று இங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

எப்படி செல்வது

திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த கொடும்பாளூருக்கு விராலி மலையில் இறங்கி வேறு பேருந்துகளில் வர வேண்டும்.

மணப்பாறை செல்லும் பேருந்துகளில் ஏறினால் மணப்பாறைக்கு முன் 5 கிமீ தொலைவில் இறங்கி எளிதில் இந்த கோவிலை அடையலாம்.

R.K.Lakshmi

 திருப்பெருந்துறை

திருப்பெருந்துறை

திருப்பெருந்துறை என்று அழைக்கப்படும் ஆவுடையார் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான ஆன்மீகத் தலமாகும்.

ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் இந்த ஊரில் மிகப் பிரபலமான கோவில் ஆகும்.

கம்பரே பாடிய தலம் இது என்பது கூடுதல் சிறப்பு.

1100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட கோவில் இது.

தமிழகத்தின் கோவில்களில் உள்ள மிகப் பெரிய தேர்களில் இதுவும் ஒன்று. 1000 பேர் சேர்ந்ததால் தான் இந்த தேரை சிறிது நகர்த்தக்கூட முடியுமாம்.

Kasiarunachalam

கோகர்ணேஸ்வரர் கோவில்

கோகர்ணேஸ்வரர் கோவில்

புதுக்கோட்டை நகரிலிருந்து 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கோகர்ணேஸ்வரர் கோவில் சிவன் கோவில் ஆகும்.

குடைவரைக் கோவில் வகையிலான இந்த கோவிலை முதலாவது மகேந்திர வர்மன் காலத்தில் கட்டியுள்ளனர்.

கோகர்ணேஸ்வரர் கோவிலில் பிள்ளையார், கங்காதரர், சப்த கன்னிகைகள் ஆகியோரும் உள்ளனர்.

திருமயம் 1

திருமயம் 1

திருமயம் கோட்டையின் அழகிய புகைப்படங்களை காணுங்கள்

Ravindraboopathi

திருமயம் 2

திருமயம் 2

திருமயம் கோட்டையின் அழகிய புகைப்படங்களை காணுங்கள்

Ravindraboopathi

திருமயம் 3

திருமயம் 3

திருமயம் கோட்டையின் அழகிய புகைப்படங்களை காணுங்கள்

Ravindraboopathi

திருமயம் 4

திருமயம் 4

திருமயம் கோட்டையின் அழகிய புகைப்படங்களை காணுங்கள்

Ravindraboopathi

திருமயம் சிவன்கோவில்

திருமயம் சிவன்கோவில்

திருமயம் கோட்டையின் அழகிய புகைப்படங்களை காணுங்கள்

Ravindraboopathi

திருவரங்குளம்

திருவரங்குளம்

புதுக்கோட்டையிலிருந்து 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த திருவரங்குளம்

இந்த ஊரில் இருக்கும் அரங்குளநாதர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. பூரம் நட்சத்திரத்திற்கு உரிய தலம் இதுவாகும்.

Thiyagu Ganesh

பொற்பனைக்கோட்டை

பொற்பனைக்கோட்டை

புதுக்கோட்டையிலிருந்து 6 கிமீ கிழக்கு திசையில் அமைந்திருக்கும் செங்கலால் ஆன கோட்டை இதுவாகும்.

இது தற்போது சிதைந்து, பழமையானதாக காணப்படுகிறது.

தொல்பொருள் கண்டுபிடிப்புகள்

பொற்பனைக் கோட்டையில் பல தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.

பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கிடைத்துள்ளது.

உருக்கு கலன்கள், சுடுமண் வார்ப்பு குழாய்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவை 2500 வருங்களுக்கு முற்பட்டதாக அடையாளம் காணப்படுகின்றன.

மெய் சிலிர்க்க வைக்கும் தமிழரின் அறிவியல்!.. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய உலோகம் பிரிக்கும் தொழிற்சாலை.மெய் சிலிர்க்க வைக்கும் தமிழரின் அறிவியல்!.. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய உலோகம் பிரிக்கும் தொழிற்சாலை.

Thiyagu Ganesh

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X