Search
  • Follow NativePlanet
Share
» »நண்பர்களுடன் கேரளாவில் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

நண்பர்களுடன் கேரளாவில் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

By Naveen

இன்னும் கொஞ்ச நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறைகள் வர விருக்கின்றன. இந்த விடுமுறைகளின் போது நண்பர்களுடன் எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகிறீர்களா?. அப்படியென்றால் வாருங்கள், நம்ம தமிழ்நாட்டுக்கு பக்கத்திலேயே இருக்கும் அற்புத சுற்றுலாத்தலங்கள் நிறைந்த கேரள மாநிலத்தில் நண்பர்களுடன் சென்று சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் எவைஎவை என்பதை தெரிந்துகொள்வோம்.

மூணார் :

மூணார் :

மூணார், கேரளத்தின் காதல் தேசம் ஆகும். இடுக்கி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்த ஊரில் சுற்றிப்பார்க்க பல அற்புதமான இடங்கள் இருக்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து 1600.மீ உயரத்தில் இருப்பதால் எப்போதும் சில்லென குளுமையான சீதோஷணம் நிலவுகிறது.

காணுமிடமெல்லாம் பசுமை நிறைந்திருக்கும் மூணாரில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றி அறிந்துகொள்ள அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

மாட்டுபெட்டி அணை:

மாட்டுபெட்டி அணை:

மூணாரில் இருக்கும் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் மாட்டுபெட்டி அணை ஆகும். மூணார் நகரில் இருந்து 12கி.மீ தொலைவில் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடத்தில் மனிதனால் மாசுபடாத இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது இந்த அணை. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமிருந்தால் இந்த அணை உங்களுக்கு ஒரு சொர்க்கம் போல காட்சியளிக்கும்.

மாட்டுபெட்டி அணை:

மாட்டுபெட்டி அணை:

மலைகளை முத்தமிடும் வெண் மேகங்கள், உடலை வருடிச்செல்லும் குளிர்ந்த தென்றல் காற்று என இயற்கையின் அழகை ரசிக்க இந்த அணை அற்புதமான இடமாகும். ரொமேன்டிகான இந்த அணையில் படகு பயணமும் செல்லலாம். அதற்கு கட்டணமாக ₹600 வசூலிக்கப்படுகிறது.

எரவிகுளம் தேசய பூங்கா :

எரவிகுளம் தேசய பூங்கா :

அடர்ந்த வனங்களால் சூழப்பட்டிருக்கும் மூணாரில் இருக்கும் ஒரு அருமையான இடம் தான் எரவிகுளம் தேசய பூங்கா ஆகும். தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு இங்கே தான் அதிகமாக வசிக்கிறது. அதுமட்டுமில்லாமல் நீலகிரி மார்ட்டென், ரடி வகை கீரி, கருமைநிறக் கோடுகளையுடைய அணில், சிறிய நகமுடைய நீர்நாய் போன்ற அரியவகை விலங்குகளும் இந்த பூங்காவில் வசிக்கின்றன.

டாப் ஸ்டேஷன்:

டாப் ஸ்டேஷன்:

மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகை மொத்தமாக ரசிக்க விரும்புகிறவர்கள் கண்டிப்பாக வரவேண்டிய இடம் இந்த டாப் ஸ்டேஷன் ஆகும். மாலை நேரத்தில் மேகத்தை துளைத்துக்கொண்டு வரும் சூரிய கதிர்கள் மலைகளின் மேல் வர்ணக்கோலம் போடும் அற்புதமான இயற்கை காட்சிகளை இங்கே காணலாம்.

தேயிலைத்தோட்டங்கள்:

தேயிலைத்தோட்டங்கள்:

மூணாரில் நாம் காணும் இடமெல்லாம் தேயிலைத்தோட்டங்கள் நிறைந்திருக்கும். பசுமை போர்த்தியது போன்ற இந்த தேயிலைத்தோட்டங்களில் விளைவிக்கப்படும் தேயிலைகள் எப்படி டீதூளாக செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள மூணாரில் இருக்கும் கண்ணன் தேவன் தேயிலை அருங்காட்சியகத்துக்கு செல்ல வேண்டும்.

இங்கே தேயிலை தயாரிக்கப்படும் முறை பற்றி அறிந்துகொள்வதோடு நாம் இதுவரை சுவைத்திராத விதவிதமான தேநீரையும் குடிக்கும் வாய்ப்பையும் இங்கே பெறலாம்.

மற்ற சுற்றுலாத்தலங்கள்!!

மற்ற சுற்றுலாத்தலங்கள்!!

எகோ பாயின்ட், கொலுக்குமலை, ரோஸ் கார்டன், ஆனைமுடி தேசிய பூங்கா, ஆட்டுகல் அருவி, லக்கம் அருவி, குந்தால ஏரி என மூணாரில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன.

நண்பர்களுடன் செல்வதாக இருந்தால் குறைந்தது இரண்டு இரவுகள் அங்கு தங்கி சுற்றிப்பார்க்கும் விதமாக திட்டமிட்டு செல்லுங்கள்.

எப்படி அடைவது?:

எப்படி அடைவது?:

மூணார் சுற்றுலா செல்லும் முன்பாகவே அங்கே தங்குவதற்கான ஹோட்டல்களை முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. சில சமயங்களில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்தால் அறைகள் கிடைக்காமல் கூட போகலாம்.

மூணார் ஹோட்டல் அறைகள் பற்றிய தகவல்கள் இங்கே.

மூணாரை எப்படி சென்றடைவது என்பது பற்றிய விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஆலப்புழா!!

ஆலப்புழா!!

கடவுளின் தேசமான கேரளாவில் இருக்கும் ஆலப்புழா நகரை இந்தியாவின் வெனிஸ் என்றே அழைக்கலாம். சில நாட்களுக்கு முன்பு எப்படி சென்னையில் சாதாரண போக்குவரத்திற்கே படகை பயன்படுத்தினோம் அல்லவா?. அதுபோல ஆலப்புழாவில் படகு தான் பிரதான போக்குவரத்து சாதனமாக திகழ்கிறது.

இதற்கு காரணம் வெள்ளம் அல்ல, இந்த ஊரெங்கும் நிறைந்திருக்கும் ஓடைகள் தான். கேரளாவில் இருக்கும் சொர்க்க சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஆலப்புழா பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ஆலப்புழா!!

ஆலப்புழா!!

ஆலப்புழாவின் அடையாளமாக இருப்பது படகு வீடுகள் தான். இங்கிருக்கும் நீரோடைகள் அலைகள் எழாத உப்பங்கழி நீரோடைகள் ஆகும். அலைகள் எழாமல் இருப்பதால் படகுகளில் பயணிப்பது என்பது விமானத்தில் பறப்பதை போன்ற உணர்வை தரும்.

எனவே இதை பயன்படுத்தி சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக உருவாக்கப்பட்டவை தான் படகு வீடுகள் ஆகும். ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நிகரான வசதிகள் கொண்டிருக்கும் இந்த படகு வீடுகளில் பயணித்தபடி ஆலப்புழாவை சுற்றிப்பார்ப்பது என்றென்றைக்கும் மறக்கமுடியாத ஓரனுபவமாக இருக்கும்.

ஆலப்புழா!!

ஆலப்புழா!!

படகு வீடுகள் பொதுவாக தேனிலவுக்கு வருபவர்கள் மத்தியில் பிரபலமானதாக திகழ்கிறது. பசுமை ததும்பும் ஆலப்புழா நகரை சுற்றிப்பார்த்தபடி தனிமையில் சில நாட்களை கொண்டாட படகுவீடுகளை விட சிறந்த அம்சம் வேறு இருக்க முடியாது.

படகு வீடுகளில் தங்க ஒரு நாளைக்கு 1500-5000வரை கட்டணமாக வசூளிக்கபப்டுகிறது.

ஆலப்புழா!!

ஆலப்புழா!!

படகு வீடுகளுக்கு அடுத்தபடியாக ஆலப்புழாவில் பிரபலமான சுற்றுலா அம்சம் ஆலப்புழா கடற்கரை ஆகும். சற்றும் அசுத்தம் இல்லாத கடற்கரையில் நண்பர்களுடன் விளையாடி மகிழலாம்.

இந்த கடற்கரையை ஒட்டியே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது. இதில் நின்று பார்த்தால் மொத்த ஆலப்புழாவையும் கண்டு ரசிக்கலாம்.

ஆலப்புழா!!

ஆலப்புழா!!

ஆலப்புழா கடற்கரை கலங்கரை விளக்கம்!!

ஆலப்புழா!!

ஆலப்புழா!!

விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்த எவராலும் இந்த சர்சை மறக்க முடியாது. இந்த சர்ச்சின் பெயர் புளின்குன்னூ ஆகும்.

இது பம்பா நதிக்கரையில் அமைந்திருக்கும் கேரளத்தின் மிக முக்கியமான தேவாலயங்களில் ஒன்றாகும். இந்த தேவாயலம் இருக்கும் பம்பா ஆறு ஆலப்புழாவின் முக்கிய படகு வீடு வழித்தடங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

ஆலப்புழா!!

ஆலப்புழா!!

இதுபோலவே இன்னும் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் ஆலப்புழாவில் உண்டு. அவற்றைப்பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆலப்புழாவில் இருக்கும் நன்னீர் ஓடைகளில் பிடிக்கப்படும் அதிசுவையான கரிமீன்களை சுவைக்கவும் மறந்து விடாதீர்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more