Search
  • Follow NativePlanet
Share
» »மகேந்திர சிங்(கம்) தோனி: ஒரு வெற்றி சகாப்தம்

மகேந்திர சிங்(கம்) தோனி: ஒரு வெற்றி சகாப்தம்

முன்பெல்லாம் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனால் இந்தியா தோற்றுவிடும் என்று டிவியை ஆப் செய்து விடுவோம். அதேபோல சச்சின், டிராவிட், கங்கூலி, கும்ப்ளே என உலகத்தரமான வீரர்கள் இருந்தும் உலக கோப்பை வெறும் கனவாக மட்டுமே இருந்து வந்தது. இதனை முற்றாக மாற்றி எழுதி நூறு கோடி நெஞ்சங்களின் நம்பிக்கையை தன் தோளில் சுமந்து கனவுகளை நிஜமாக்கிய காவிய தலைவன், ஒரு நாள் போட்டிகளில் ஆகச்சிறந்த 'பினிஷர்', மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யும் அற்புதமான கீப்பர் என எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஜார்கண்ட் என்னும் மிக பின்தங்கிய மாநிலத்தில் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வேலைபார்த்த மகேந்திர சிங் தோனி ஆவார்.

வாருங்கள், நம்ம தல தோனி விளையாடிய சில அற்புதமான மேட்சுகள் எங்கே நடைபெற்றன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

148 vs பாகிஸ்தான் :

148 vs பாகிஸ்தான் :

பங்களாதேசுக்கு எதிரான அறிமுக போட்டியில் டக் அவுட் என கிரிக்கெட் வாழ்கையின் துவக்கம் அவ்வளவு இனிப்பாக அமையவில்லை தோனிக்கு. ரொம்பவும் சுமாரான ஆட்டக்காரர் என்றே பலரும் நினைத்திருக்கையில் விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 148 ரன்கள் விளாசித்தள்ளினார். இதுவரை எந்த இந்திய வீரரும் இவ்வளவு ஆரோஷமாக ஆடியத்தில்லை என்று சொல்லும் அளவுக்கு ருத்ர தாண்டவம் ஆடியிருந்தார்.

தோனி யார் என்று உலகுக்கு காட்டிய அந்த இன்னிங்க்ஸ் நடந்த விசாகப்பட்டினம் நகரை பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

148 vs பாகிஸ்தான் :

148 vs பாகிஸ்தான் :

'இந்தியாவின் கிழக்கு கடற்கரையின் ஆபரணம்' என்ற சிறப்புக்குரிய நகரம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான விசாகப்பட்டினம் தான். துறைமுகம், இரும்புத் தொழில்சாலைகள், தகவல் தொழில்நுட்பத்துறை மையங்கள் என பரபரப்பான வர்த்தக மற்றும் தொழில் நகரமாக திகழ்கிறது.

Photo: Flickr

148 vs பாகிஸ்தான் :

148 vs பாகிஸ்தான் :

அதேசமயம் இங்கு அற்புதமான காட்சிகள் காணக்கிடைக்கும் கடற்கரைகள், லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்த குகைகள், பள்ளத்தாக்குகள், வன விலங்கு பூங்காக்கள் என மனம் கவரும் ஏராளமான சுற்றுலாத்தலங்களும் உள்ளன.

Photo: FLickr

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

ராமகிருஷ்ணா மிஷன் பீச் அல்லது RK பீச் என அழைக்கப்படும் இந்த கடற்க்கரை தான் விசாகப்பட்டினத்தில் இருக்கும் மிகப்பிரபலமான கடற்க்கரை ஆகும். ராமகிருஷ்ணர் மடம் இந்த கடற்கரைக்கு பக்கத்தில் இருப்பதினாலேயே இந்த பெயர் பெற்றிருக்கிறது.

Photo: Flickr

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

இந்த கடற்கரையில் நாம் நீச்சலடிக்கலாம், சூரியக்குளியல் போடலாம், பீச் வாலிபால் விளையாடலாம் மற்றும் மாலை வேளைகளில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அந்திவானில் நிகழும் வர்ணஜாலங்களை கண்டு மனம் குளிரலாம்.

Photo: FLickr

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

ராமகிருஷ்ணா மிஷன் பீச்:

இந்த பீச்சில் இருக்கும் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று இந்திய கடற்ப்படையின் நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் இந்திய கடற்ப்படையில் முதன்முதலில் சேர்க்கப்பட்ட கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல் ஒன்றுனுள் சென்று பார்க்கவேண்டும் என ஆசைப்படுபவர்கள் நிச்சயம் இங்கு சென்று வரவேண்டும்.

photo: Flickr

யாராதா பீச்:

யாராதா பீச்:

விசாகப்பட்டினம் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பேரழகும், அமைதியும் நிறைந்து காட்சி தருகிறது யாராதா கடற்க்கரை. நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து அமைதியாக பொழுதை கழிக்க விரும்புகிறவர்கள் இங்கு தாரளமாக வரலாம். கடற்கரையை ஒட்டியே தென்னந்தொப்புகள் இருப்பது இவ்விடத்திற்கு மேலும் அழகூட்டுகிறது.

Photo: Flickr

பொர்ரா குகைகள்:

பொர்ரா குகைகள்:

பொர்ரா என்றால் தெலுங்கில் 'நிலத்தினுள் குடையப்பட்டவை' என்று அர்த்தமாம். அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஆனந்தகிரி மலையில் கடல்மட்டத்தில் இருந்து தோராயமாக 2000 அடி உயரத்தில் அமைந்திருக்கின்றன.

Photo: Flickr

பொர்ரா குகைகள்:

பொர்ரா குகைகள்:

சுண்ணாம்புக் கல்லினால் ஆன இந்த குகைகள் 80 அடி ஆழம் உடையதாக இருக்கின்றன. இவையே இந்தியாவில் இருக்கும் மிக ஆழமான குகைகளாகவும் அறியப்படுகின்றன.

photo: Flickr

பொர்ரா குகைகள்:

பொர்ரா குகைகள்:

இந்த குகைகளை சுற்றிப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு ஆந்திர அரசின் சுற்றுலாத்துறையே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறது. இயற்கை வளம் நிறைந்த மலையில் அரக்கு பள்ளத்தாக்கினுள் அமைந்திருப்பதால் அம்மலைகளில் இருக்கும் விதவிதமான வன தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் நாம் பார்க்கலாம்.

Photo: Flickr

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

விசாகப்பட்டினம் நகரில் இருக்கும் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலங்களுள் சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயிலும் ஒன்றாகும். விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களுள் ஒன்றான நரசிம்ம அவதாரம் இக்கோயிலின் மூலவராக உள்ளார்.

photo: FLickr

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

இக்கோயிலின் கற்பகிரகம் மற்றும் விமானம் கலிங்க கட்டிடக்கலையை சார்ந்து அமைந்திருக்கின்றன. வாருடத்தின் எல்லா நாட்களுமே சந்தன வார்ப்பிலேயே காட்சியளிக்கும் நரசிம்மர் வருடத்தில் வெறும் 12 மணி நேரங்கள் மட்டுமே சந்தன வார்ப்பில் இல்லாமல் 'நிஜரூப தரிசனம்' தருகிறார்.

Photo: Flickr

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

இக்கோயிலின் சுவர்களில் அற்புதமான கலைநயமிக்க விஷ்ணுவின் தச அவதார சிறப்பங்களை கண்டு ரசிக்கலாம். அதேபோல இக்கோயிலின் புனித குளமான புஷ்கரணியில் நீராடலாம்.

Photo: Flickr

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

சிம்ஹச்சலம் நரசிம்மர் கோயில்:

இந்த கோயிலுள்ள விஷ்ணுவின் அவதாரங்களின் சிற்பம்.

Photo: Flickr

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

இன்னும் அதிகம் பிரபலமாகாத அதேசமயம் அற்புதமான இயற்கை காட்சிகளை கொண்டுள்ள இடம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்திருக்கும் அரக்கு பள்ளத்தாக்கு ஆகும்.

Photo: Flickr

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கில் தான் முதல் முறையாக பழங்குடிகளால் விளைவிக்கப்பட்ட பூச்சிகொல்லிகளும், உரங்களும் சேர்க்காத கரிம(Organic) காப்பி கொட்டை கிடைக்கிறது. உடலுக்கு எவ்வித கெடுதலும் தராத அதிசுவையான இந்த ஆர்கானிக் காபியை சுவைப்பதற்காகவே இங்கு செல்வோரும் உண்டு.

Photo: Flickr

183* vs ஸ்ரீ லங்கா :

183* vs ஸ்ரீ லங்கா :

2005 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தோனி அடித்த 183* ரன்கள் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். 299 ரன்கள் இலக்கு, சச்சின் சீக்கிரமே அவுட் ஆகிவிட்டார் என்பதால் கொஞ்சம் அடித்து ஆட 3ஆம் வீரராக களமிறக்கப்பட்டார் தோனி. அடித்து ஆட ஆரம்பித்தவர் கடைசிவரை நிறுத்தவே இல்லை. மொத்தம் 10 சிச்சர்களுடன் பவுலர்களை கதற கதற அடித்து துவம்சம் செய்தார்.

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றின் ஆகச்சிறந்த 'பினிஷர்' தன் பலத்தை நிருபித்த ஜெய்பூர் நகரில் இருக்கும் சுற்றுலாத்தளங்கள் பற்றியும் கொஞ்சம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

ஹவா மஹால் :

ஹவா மஹால் :

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூர் நகரின் ராஜ கட்டிடக்கலையை உலகுக்கு பறைசாற்றும் கலைப்போக்கிஷங்களில் ஒன்று ராஜா சவாய் பிரதாப் சிங் என்பவரால் கட்டப்பட்ட ஹவா மஹால் முக்கியமான ஒன்றாகும். ராஜஸ்தானின் சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக திகழும் இந்த ஹவா மஹால் ராஜஸ்தானில் நாம் நிச்சயம் சென்று பார்க்கவேண்டிய இடங்களில் முதன்மையானதாகும்.

Photo: Flickr

ஹவா மஹால் :

ஹவா மஹால் :

அரண்மனையில் வசிக்கும் பெண்கள் அன்றாட நிகழ்வுகளை பார்ப்பதற்காக கட்டப்பட்ட இந்த ஹவா மஹால் பிங்க் நிற மணல் கற்களால் கட்டப்பட்டதாகும். இரவு நேரத்தில் இதன் மீது ஒளி விளக்குகள் ஒளிரும் போது இதன் அழகு மேலும் ஒருபடி கூடிவிடுகிறது.

photo:Flickr

பலூனில் பறக்கலாம் :

பலூனில் பறக்கலாம் :

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் மிக வித்தியாசமான சுற்றுலா அமசங்களில் முக்கியமானது 'ஹாட் ஏர்' பலூன் ஆகும். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தின் உச்ச காட்சியில் பலூனில் பறந்தபடி சண்டை போடுவார்களே அந்த பலூனில் வானில் மிதந்தபடி ராஜஸ்தானின் பேரழகை ரசிக்கலாம்.

Photo: Flickr

பலூனில் பறக்கலாம் :

பலூனில் பறக்கலாம் :

ராஜஸ்தானில் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த பலூன் பயணத்தை மேற்கொள்ளலாம். ராஜஸ்தானில் இருக்கும் புகழ் பெற்ற கோட்டைகளின் மேலாகவும், அக்டோபர் மாதத்தில் சென்றால் அப்போது நடக்கும் புஸ்கர் மேளா எனப்படும் உலகின் மிகப்பெரிய ஒட்டகச் சந்தையின் மேலாகவும் பறக்கலாம்.

Photo: Flickr

லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

'இந்தியாவின் வெனிஸ்' என்று அழைக்கப்படும் உதய்பூர் நகரில் 14ஆம் நூற்றாண்டில் உதய்பூர் ராஜாவால் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட இந்த ஏரியின் நடுவே ஜக் நிவாஸ், ஜக் மந்திர் என்ற இரண்டு தீவுகள் இருக்கின்றன. அதில் ஜக் நிவாஸ் என்ற தீவில் அரண்மனை ஒன்று அமைந்திருக்கிறது. இந்த அரண்மனை இப்போது லேக் பேலஸ் என்னும் பேரழகு மிக்க தாங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

Photo; Flickr

லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

இந்த அரண்மனையில் தங்கி பிசோலா ஏரியின் பேரழகையும், மலைகளுக்கு பின்னே நடக்கும் அற்புதமான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை காணலாம். லேக் பேலஸில் நீங்கள் தங்கினால் மாலை நேரத்தில் 'கங்கௌர்' என்ற படகில் பிசோலா ஏரியில் ரம்யமாக பயணம் ஒன்றை மேற்கொண்ட படியே உங்கள் அன்பானவருடன் டின்னர் சாப்பிடுவது வாழ்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

Photo: Flickr

லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

அரண்மனையின் உட்புற தோற்றம்.

Photo: Flickr

லேக் பேலஸ் :

லேக் பேலஸ் :

இரவில் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலிகின்றது.

Photo: Flickr

ஜெய்சால்மர் - ராஜஸ்தானின் மணி மகுடம் :

ஜெய்சால்மர் - ராஜஸ்தானின் மணி மகுடம் :

ராஜஸ்தான் மாநிலத்தில் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 575 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஜெய்சால்மர் நகரம். தங்கத்தில் தான் கட்டப்பட்டதோ என நம்மை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் இந்நகரத்தில் இருக்கும் எல்லாப் பழமையான கோட்டைகளும், கட்டிடங்களும் மஞ்சள் நிற மணல் கற்களால் கட்டப்பட்டுள்ளன.

Photo: Flickr

ஜெய்சால்மர் கோட்டை:

ஜெய்சால்மர் கோட்டை:

உலகில் இருக்கும் மிகப்பெரிய கோட்டை வளாகங்களுள் ஒன்றான ஜெய்சால்மர் கோட்டை கி.பி. 1156 ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. ஜெய்சால்மர் நகரத்தின் நடுவில் திரிகுட மலையின் மேல் கம்பீரமாக இது வீற்றிருக்கிறது. இக்கோட்டையினுள் ராஜ் மஹால் என அழைக்கப்படும் ராஜ அரண்மனை உள்ளது.

அரச குடும்பத்தினர் வசித்து வந்த இந்த அரண்மனையினுள் அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த அரச கட்டில், சிம்மாசனம், அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை இன்றும் நாம் காணலாம்.

Photo: Flickr

மும்பை - 2011 உலக கோப்பை இறுதிப்போட்டி :

மும்பை - 2011 உலக கோப்பை இறுதிப்போட்டி :

மொத்த இந்தியாவும் ஸ்தம்பித்து போனது. இந்தியாவும் இலங்கையும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் உலக கோப்பையின் இறுதி போட்டியில் மோதின. 275 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடுகையில் சச்சினும், சேவாக்கும் சொற்ப ரன்களில் வெளியேற ஒட்டுமொத்த தேசத்தின் கனவுகளை சுமந்து கொண்டு களம் கண்ட தோனி அடித்த 91 ரன்கள் இந்தியாவை உலக சம்பியன் ஆக்கியது.

மும்பை - 2011 உலக கோப்பை இறுதிப்போட்டி :

மும்பை - 2011 உலக கோப்பை இறுதிப்போட்டி :

வான்கடே மைதானத்தில் உலக கோப்பை இறுதி போட்டியில் பேட்டிங் செய்ய போகும் சச்சின் மற்றும் சேவாக்.

மும்பையின் சுற்றுலாத் தலங்கள் :

மும்பையின் சுற்றுலாத் தலங்கள் :

மும்பையின் பிரபலமான சுற்றுலாத்தலங்களான கேட் வே ஆஃப் இந்தியா, ஜூஹு பீச், மரீன் டிரைவ் தவிர எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் இங்கு நாள்தோறும் ஏராளமான பயணிகளை ஈர்த்து வருகின்றன. அவற்றில் கொலாபா காஸ்வே, எஸல் வேர்ல்ட் மற்றும் வாட்டர் கிங்டம், ஹாஜி அலி மசூதி, மும்பை ஸீ லிங்க், பேண்ட்ஸ்டாண்ட், ஃபேஷன் ஸ்ட்ரீட், தொங்குதோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

photo: FLickr

ஜூஹு பீச் :

ஜூஹு பீச் :

கடற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் மும்பையின் ஜூஹு பீச்சாகும். இந்தக் கடற்கரை பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இங்கு கிடைக்கும் பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச் போன்ற அனைத்து கடற்கரை உணவுகளையும் நீங்கள் போதும் போதும் என்ற அளவுக்கு சுவைத்து மகிழலாம்.

மும்பை மரீன் டிரைவ் :

மும்பை மரீன் டிரைவ் :

'அந்த அரபிக்கடலோரம் ஒரு அழகை கண்டேனே...' என்று அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் மும்பையின் மரீன் டிரைவ் அட்டகாச அழகுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. 'C' வடிவில் காணப்படும் இந்த மரீன் டிரைவ் 3 கி.மீ நீளத்தில் நரிமன் பாயிண்ட் பகுதியையும், பாபுல்நாத் பகுதியையும் இணைக்கிறது.

கேட் வே ஆஃப் இந்தியா :

கேட் வே ஆஃப் இந்தியா :

1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் பொருட்டு கேட் வே ஆஃப் இந்தியா எழுப்பப்பட்டுள்ளது. மும்பை வரும் பயணிகள் கேட் வே ஆஃப் இந்தியா வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால்தான் அவர்களின் பயணம் முற்றுப் பெற்றதாக அர்த்தம்.

கேட் வே ஆஃப் இந்தியா :

கேட் வே ஆஃப் இந்தியா :

ஆசியாவின் மிகப்பெரிய சேரிப்பகுதியான தாராவி.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X