Search
  • Follow NativePlanet
Share
» »சச்சினின் மறக்க முடியாத சதங்கள் நிகழ்ந்த இடங்கள்

சச்சினின் மறக்க முடியாத சதங்கள் நிகழ்ந்த இடங்கள்

சச்சின், ஒரு சகாப்த்தத்தின் நாயகன். ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றினார்கள், சச்சின் அவர்களுடைய விளையாட்டை தன்னுடையதாக்கினர். ஒட்டுமொத்த இந்தியா நாடும் அவர் 99 ரன்களில் இருக்கையில் பிரார்த்திக்கும். அவர் எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் கோஷம் விண்ணைப்பிளக்கும். சச்சின் பாரத ரத்னா விருதுக்கு காத்திருந்தார் என்று சொல்வதை விட சச்சினுக்காக பாரத ரத்னா விருது காத்திருந்தது- இப்படி சச்சினை எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் 2 தலைமுறை குழந்தைகளுக்கு அவர் எப்போதுமே கனவு நாயகன் தான். வாருங்கள் சச்சினின் மறக்க முடியாத சத்தங்கள் மற்றும் அவை நடந்த இடங்களைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

க்வாலியர் :

க்வாலியர் :

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்ற இடம் இந்த க்வாலியர் . மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கும் க்வாலியர் வரலாற்று தொன்மையுடைய நகரமாகும். இங்கிருக்கும் க்வாலியர் கோட்டை இந்நகரத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. தற்போது சச்சின் 200 ரன்கள் எடுத்த நகரம் என்றே பல கிரிக்கெட் ரசிகர்களால் இந்நகரம் நினைவு கூறப்படுகிறது.

Image Courtesy: Flickr

சென்னை:

சென்னை:

சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 387 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில் சச்சின் 103 ரன்கள் குவித்து இந்தியா வரலாற்று வெற்றி பெற்ற இடம் சென்னை. மெரினா கடற்க்கரை, சாந்தோம் சர்ச், கபாலீஸ்வரர் கோயில், கிழக்கு கடற்க்கரை சாலை என சென்னை ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. ஆங்கிலேயர்களின் முக்கிய நகரமாக திகழ்ந்த சென்னையில் சில ஆண்டுகள் கழித்து ஒரு இந்தியரிடம் தோற்பது எவ்வளவு பெரிய வரலாற்று முரண்.

Image Courtesy: Flickr

பெங்களுரு:

பெங்களுரு:

2010இல் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 214 ரன்கள் விளாசி அத்தொடரை இந்தியா 2-0 என வெல்ல காரணமாக இருந்த இன்னிங்க்ஸ் நிகழ்ந்த இடம் பெங்களுரு. ஐ.டி துறையில் இந்தியாவின் முக்கிய கேந்திரமான பெங்களுரு சுற்றுலாவுக்கும் பெயர் போனது. லால் பாக், வொண்டெர் லா, பன்னேர்கட்டா தேசிய பூங்கா என ஒரு முழுமையான சுற்றுலா அனுபவத்தை உங்களுக்கு பெங்களுரு வழங்கும். இவைகளைத்தவிர ஒரு நவநாகரீக வாழ்க்கைமுறையை அனுபவிக்க வேண்டும் என நினைப்பவர்களும் பெங்களுரு வந்து சில நாட்கள் தங்கலாம்.

Image Courtesy: Flickr

 ஹைதராபாத்:

ஹைதராபாத்:

350 ரன்கள் என்ற இமாயல இலக்கை சேஸ் செய்கையில் சச்சின் 175 ரன்கள் எடுத்தும் தவறான நேரத்தில் அவுட் ஆனதால் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸியிடம் தோற்றது. ஆனால் ஹைதராபாத் நிச்சயம் அப்படி உங்களை ஏமாற்றாது. சார்மினார், ராமோஜி திரைப்பட நகரம், லும்பினி பூங்கா மற்றும் இவை தவிர அரசர்கள் வாழ்ந்த கோட்டைகள், பழங்காலத்து பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகங்கள் இங்கு நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தவறாமல் செய்யும் ஒரு விஷயம் சுவையான ஹைதராபாத் பிரியாணியை சுவை பார்ப்பது. நீங்களும் அங்கு செல்கையிலும் ஒரு பிடி பிடியுங்கள்.

Image Courtesy: Flickr

 நாக்பூர்:

நாக்பூர்:

இந்தபோட்டியில் தோற்றால் டெஸ்ட் தொடரே தோல்வியில் முடியும் என்ற சூழல் 49/2 என இக்கட்டான நிலையில் இந்தியா இருக்கும் பொது சச்சின் இறங்கி179 ரன்கள் குவிக்க இந்தியா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 1999 தொடரை இழப்பதில் இருந்து காப்பாற்றப்பட்டது. அதே போல வழக்கமான வாழ்க்கை தரும் மன உளைச்சலில் இருந்து நீங்கள் தப்பிக்க நாக்பூருக்கு ஒரு சுற்றுலா சென்று வரலாம். தீக்ஷபூமி என்னும் புத்த கோயில், தடோபா அந்தாரி புலிகள் பூங்கா, நாக்பூர் ஜம்மா மசூதி என இங்கு நல்ல ஒரு சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்கள் உண்டு. மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருந்து 840 கி.மீ தொலைவில் இந்நகரம் அமைந்திருக்கிறது.

Image Courtesy: Flickr

மும்பை:

மும்பை:

சச்சினின் சொந்த நகரம். இங்கே அவர் விளாசிய சதங்களை விட ஒரு கணம் மட்டும் எல்லா கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் அவர்கள் வாழ் நாள் முழுவதும் இருக்கும் என்றால் அது சச்சின் உலக கோப்பையை வென்ற அந்த நாள் தான். சச்சினையே நமக்கு தந்த நகரமான மும்பை இந்தியாவின் சிறப்பான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு நாம் சுற்றிப்பார்க்கவும் ஏராளமான இடங்கள் உண்டு. கேட் வே ஆப் இந்தியா, எல்லோரா குகை சிற்ப்பங்கள், மஹாலக்ஷ்மி கோயில், சஞ்சய் காந்தி தேசியபூங்கா என பல இடங்கள் உண்டு. உண்மையான நகர இந்தியாவை பார்க்க வேண்டும் என நீங்கள் விருப்பபட்டால் கண்டிப்பாக மும்பை சென்றுவாருங்கள்.

Image Courtesy: Flickr

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X