Search
  • Follow NativePlanet
Share
» »விரேந்தர் சேவாக்கின் மறக்க முடியாத இரண்டு அட்டகாசமான இன்னிங்ஸ் நிகழ்ந்த இடங்கள்

விரேந்தர் சேவாக்கின் மறக்க முடியாத இரண்டு அட்டகாசமான இன்னிங்ஸ் நிகழ்ந்த இடங்கள்

விரேந்தர் சேவாக், இந்த பெயரை கேட்டதும் மிரளாத பௌலர்களே இருக்க முடியாது. மெக்ராத் போன்ற உலகின் மிக துல்லியமான பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, சோயப் அக்தர் போல உலகின் மிக வேகமான பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி சேவாக் பேட்டிங் கிரீசில் இருந்தால் நிச்சயம் முதல் பந்து பவுண்டரியை தொடும். ஆரம்பம் முதலே அதிரடி என்று பேட்டிங்குக்கே புது இலக்கணம் வகுத்தவர் வீரேந்தர் சேவாக். ஒரு பக்கம் சச்சின் நிதானமாக ஆட மறுபக்கம் சேவாக் ருத்ரதாண்டவம் ஆடிய எத்தனையோ பசுமையான நினைவுகள் நம்மிடையே இருக்கின்றன அல்லவா ?.

சமீப ஆண்டுகளாக மோசமான 'பார்ம்' காரணமாக சேவாக் இந்திய அணிக்காக விளையாடவில்லை. இந்நிலையில் இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடும் சேவாக் சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை இன்று அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் நினைவுகளுக்கு காலப்பயணம் போகும் விதமாக இந்தியாவில் சேவாக் விளையாடிய இரண்டு மறக்க முடியாத இன்னிங்ஸ்களையும் அவை நிகழ்ந்த இடங்களை பற்றியும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

319 vs தென்னாப்ரிக்கா - சென்னை :

319 vs தென்னாப்ரிக்கா - சென்னை :

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு நாட்கள் விளையாடிய தென்னாப்ரிக்க அணி 540 ரன்கள் குவித்தது. மைதானத்தில் ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வெறிச்சோடிக் கிடந்தது.

மூன்றாம் நாள் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விரேந்திர சேவாக் நிடினி, பொல்லாக், நெல் போன்ற வீரர்கள் இடம்பெற்றிருந்த தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்தார்.

319 vs தென்னாப்ரிக்கா - சென்னை :

319 vs தென்னாப்ரிக்கா - சென்னை :

ஒரே நாளில் சேவாக் அடித்த ரன்கள் 257. இதுவரைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் எந்த வீரரும் இத்தனை ரன்கள் அடித்ததில்லை. அப்படியொரு அதிரடியை நிகழ்த்தினார் சேவாக்.

அடுத்தநாள் சிதம்பரம் ஸ்டேடியம் இருக்கும் சாலையே ஸ்தம்பித்து. மைதானமே ரசிகர்களால் நிரம்பியிருக்க தனது இரண்டாவது முச்சதத்தை பதிவு செய்தார் சேவாக்.

அந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் எவராலும் எளிதில் மறக்க முடியாது.

319 vs தென்னாப்ரிக்கா - சென்னை :

319 vs தென்னாப்ரிக்கா - சென்னை :

அப்படி சேவாக் அதிரடி நிகழ்த்தி319 ரன்கள் குவித்த சென்னையை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் அங்கிருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சிங்கார சென்னை :

சிங்கார சென்னை :

சென்னை, இதுவெறும் ஊர் அல்ல ஒரு உணர்வின் பெயர். வேலை, படிப்பு, திருமணம் போன்ற ஏதோவொரு காரணத்திற்காக வருபவர்கள் எல்லோரையும் அரவணைக்கும் வேடந்தாங்கல் தான் இந்நகரம்.

கனவுகளுக்கு உயிரூட்டி, பலரின் வாழ்கையில் ஒளி ஏற்றியிருக்கும் சென்னையை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

சிங்கார சென்னை :

சிங்கார சென்னை :

மெரீனா கடற்கரை :

சென்னையின் அடையாளம் மெரீனா கடற்கரை. மாலை நேரத்தில் காலாற மனதுக்கு பிடித்தவருடன் இன்மொழி பேசி மகிழ இதைவிட சிறந்த இடம் இருக்க முடியாது. உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை என்ற பெருமைக்கு சொந்தமான இந்த கடற்கரையில் பொழுதுபோக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

சிங்கார சென்னை :

சிங்கார சென்னை :

குழந்தைகள் குதிரையின் மேல் அமர்ந்து சவாரி செல்லலாம், பலூன் சுடலாம், நடிகர்களின் கட்-அவுட் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்கலாம், சுடச்சுட கிடைக்கும் மீன் வறுவல் சாப்பிடலாம், சீற்றம் குறைவாக இருந்தால் கடலில் குளித்து மகிழலாம். இன்னும் என்னென்னவோ செய்து அற்புதமாக ஒரு மாலை பொழுதை செலவிடலாம்.

சிங்கார சென்னை :

சிங்கார சென்னை :

மெரீனா கடற்கரையில் கிடைக்கும் மீன் வறுவல் அத்தனை சுவையானது. பெரும்பாலும் மீனவ பெண்களே இந்த கடைகளை நடத்துவதால் சந்தைகளில் கிடைப்பதை விடவும் மிகவும் பிரஷ்ஷான மீன்கள் இங்கே பயன்படுத்தப்படுகின்றன. நிறைய குழந்தைகள் சாப்பிடுவதால் பெரும்பாலான கடைகளில் பழைய எண்ணையை பயன்படுத்துவதில்லை.

சிங்கார சென்னை :

சிங்கார சென்னை :

சென்னையில் பல முக்கியமான சைவ, வைணவ கோயில்கள் அமைந்திருக்கின்றன. அதிலொன்று தான் மைலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோயில். பார்வதி தேவி கற்பகாம்பாலாகவும், சிவபெருமான்கபாலீஸ்வரராகவும் அருள்பாலிக்கும் இக்கோயில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

சிறப்பு பூஜை நடைபெறும் நாட்களில் சென்னையின் பல முக்கிய வீ.வீ.ஐ.பிக்களை இங்கே பார்க்கலாம்.

சிங்கார சென்னை :

சிங்கார சென்னை :

இன்னும் கொஞ்ச நாளில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. நீங்கள் இன்னும் புதுத்துணிஎடுக்கவில்லை என்றால் சென்னையின் மிக பரபரப்பான இடமான தியாகராய நகருக்கு வாருங்கள். உண்மையில் இதைவிட மக்கள் கூட்டம் நிறைந்த தெரு தமிழ்நாட்டில் வேறு எங்குமே இருக்காது என்று சொல்லும் அளவுக்கும் கூட்டம் நெருக்கியடிக்கும்.

இந்த வீதியில் உள்ள கடைகளில் தள்ளுபடி விலையில் துணிகள், வீட்டு உபயோக பொருட்கள், காலணிகள் போன்றவற்றை வாங்கலாம்.

சிங்கார சென்னை :

சிங்கார சென்னை :

சென்னைக்கு சற்று வெளியே இருக்கும் மாமல்லபுரம் ஒரு வராலற்று பொக்கிஷம் ஆகும். பல்லவர்களின் காலத்தில் முழுக்க முழுக்க கற்களை கொண்டு கட்டப்பட்ட இவைற்றை காண உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

இந்த கடற்கரை கோயில்களுக்கு அருகிலேயே பஞ்ச ரத சிற்பங்களும் இருக்கின்றன.

சிங்கார சென்னை :

சிங்கார சென்னை :

நம்ம சிங்கார சென்னையை பற்றிய மேலும் பல பயனுள்ள தகவல்களையும், அங்கே இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

இதுவரை பார்த்திராத நம்ம சென்னையின் அரிய புகைப்படங்கள்

சென்னையை பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

219 vs மேற்கிந்திய தீவுகள் - இந்தூர்:

219 vs மேற்கிந்திய தீவுகள் - இந்தூர்:

ஒரு நாள் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்தது சச்சினை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் இரண்டாவது இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் வீரேந்திர சேவாக் ஆவர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற போட்டியில் சந்தித்த முதல் பந்து முதலே அதிரடியை துவக்க மிகக்குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். சேவாக்கின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றான இந்த இன்னிங்ஸ் நிகழ்ந்த இந்தூரை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

இந்தூர்:

இந்தூர்:

இயற்கை அழகையும், ஆன்மீக ஸ்தலங்களையும் ஒருங்கே கொண்டிருக்கும் இந்தூர் நகரம் மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய நகரமாகும்.

கல்வி, தொழில் துறை, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் வெகு வேகமாக வளர்ந்து வரும் நகரமான இந்தூரில் நாம் சுற்றிப்பார்க்கவும் சில நல்ல இடங்கள் இருக்கின்றன.

இந்தூர்:

இந்தூர்:

இந்தூர் நகரத்திலிருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ள 300 அடி உயரமுள்ள அற்புதமான நீர்வீழ்ச்சி தான் பாதாள் பானி! இந்நீர்வீழ்ச்சியின் உயரம் 300 அடி ஆகும்.

புராணக்கதைகளில் இந்நீர்வீழ்ச்சி பூமியின் அடிப்பகுதி வரையிலும் நீண்டு செல்கிறது என்று பொருள் படும் வகையில் 'பாதாள்' என்று அழைக்கப்பட்டு இப்பொழுதைய பெயரையும் பெற்றிருக்கிறது.

ஜூலை மாதம் இந்த அருவிக்கு வர சிறந்த மாதமாகும்.

இந்தூர்:

இந்தூர்:

இந்தூரில் உள்ள பிரமிக்க வைக்கும் கோவிலாக அன்னப்பூர்ணா கோவில் உள்ளது. இந்தூரில் உள்ள மிகவும் பழமையான கோவிலாகவும், 9-ம் நூற்றாண்டில் ஆரிய மற்றும் திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகவும் இந்த கோவில் உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில்அன்னப்பூர்ணா தேவி, சிவ பெருமான், அனுமான் மற்றும் கால பைரவர் ஆகியவர்களுக்கு தனித்தனியாக சந்நிதிகள் இருக்கின்றன.

இந்தூர்:

இந்தூர்:

கான் நதிக்கரையில் இருக்கும் கிருஷ்ணாபுரா சாட்ரி, ஹோல்கார் மன்னர் குடும்பத்தவர்களுக்கான கல்லறைகள் கட்டப்பட்டு நினைவிடங்களாக இருக்கும் இடமாகும். துல்லியமான மற்றும் கூர்ந்த வேலைப்பாடுகள் இந்த சாட்ரிகளின் சிறப்பம்சமாகும்.

இரவு வேளைகளில் இந்த சாட்ரிகள் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். மேலும், நீரூற்றுகளும் இங்கு வடிவமைக்கப்பட்டு இதன் அழகு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்தூர் நகரை பற்றிய மேலதிக தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Read more about: chennai indore beaches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X