Search
  • Follow NativePlanet
Share
» »2015 புத்தாண்டை கொண்டாட சிறந்த இடங்கள்

2015 புத்தாண்டை கொண்டாட சிறந்த இடங்கள்

2015 புத்தாண்டை கொண்டாட சிறந்த இடங்கள்

எப்படியோ ஒருவழியாய் 2014 நிறைவடைத்து 2015 சீக்கிரம் வரப்போகிறது. 2014இல் நம் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம். கிடைத்த முதல் வேலை, அழுகையுடன் முதல் முறை நம் குழந்தையை கையில் ஏந்திய ஆனந்த தருணம், ஆசைக்கணவரை கரம் பிடித்த அந்த நாள், இதயத்தை கிழித்தது போன்ற வழியை தந்த கல்லூரி பேர்வெல் என ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத அற்புதமான தருணங்களை பரிசளித்து விட்டு 2014 இன்னும் ஒரு மாதத்தில் முடியவிருக்கிறது. அடுத்த வருடம் இன்னும் அட்டகாசமாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் எல்லோரும் ஆசைப்படுகிறோம். அதற்கு 2015இன் முதல் நாளே அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். வாருங்கள், கொண்டாட்டத்துடன் 2015ஐ துவக்க சிறந்த இடங்கள் எவைஎவை என்பதை தெரிந்து கொள்வோம்.

மராரி பீச், ஆழப்புழா:

Photo: Sudheesh S

அற்புதமான நீலக்கடலை உடைய கடற்க்கரை, கரையில் இருந்து கொஞ்ச தூரத்தில் பசுமையான தென்னந்தோப்புகள், குளுமையான கடற்கரை மணல் இதைவிட புத்தாண்டை கொண்டாட என்ன வேண்டும்?. கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து 60கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் மராரி கடற்க்கரை இப்படிப்பட்ட அற்புதமான சூழலில் அமைந்திருக்கிறது. இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றாலும் காதலியுடனோ, நண்பர்களுடனோ புத்தாண்டை கொண்டாட அருமையான இடம் இந்த மராரி பீச் ஆகும். கடவுளின் தேசமான கேரளாவில் 2015ஐ துவக்க வேண்டும் என நினைத்தீர்களானால் நிச்சயம் இந்த மராரி கடற்கரையை தேர்ந்தெடுங்கள்.

மோர்ஜிம் பீச், கோவா :

Photo: Alagich Katya

டிசம்பர் 31, நள்ளிரவில் 10,9,8....3,2,1 என முடிகையில் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடும் போது வருகிற உற்சாகம் வேறெந்த பண்டிகையின் போதிலும் விட புத்தாண்டு அன்று கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அப்படி அமர்களமாக நள்ளிரவில் புத்தாண்டை கொண்டாட சிறந்த ஓரிடம் கோவாவில் இரவு பார்ட்டிகளுக்கு புகழ் பெற்ற மோர்ஜிம் கடற்க்கரை நல்லதொரு இடமாகும். ஒரு காலத்தில் ஆமைகளை பாதுகாக்கும் இடமாக அறியப்பட்ட இந்த இடம் இப்போது வெளிநாட்டினரும், உள்நாட்டினரும் காதலி பிளக்கும் இசையுடன் உற்சாகம் பொங்க பார்ட்டி கொண்டாடும் இடமாக மாறி விட்டது. நண்பர்களுடன் சென்று கூத்தடிக்க கோவாவில் இது நல்ல ஓரிடம்.

பங்காராம் தீவுக்கடற்க்கரைகள் :

Photo: Binu K S

லக்ஷதீப் என்னும் தீவு சொர்க்கத்தில் அமைந்திருக்கும் அழகான தீவுகளில் ஒன்றுதான் தா பங்காராம் தீவு. வெள்ளை மணல் கடற்கரைகள், அமைதியான சுத்தமான இடங்கள், அற்புதமான சூரிய அஸ்தமனம் என குடி, கூத்து இல்லாமல் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையில் குடும்பத்துடனோ, காதலியுடனோ புத்தாண்டடை கொண்டாட இந்த தீவு அருமையான தேர்வாக அமையும்.

ராதாநகர் பீச், அந்தமான் & நிகோபார் தீவுகள்:

Photo: mattharvey1

இந்தியாவில் இருக்கும் மிக அழகான கடற்க்கரைகளில் ஒன்றுதான் இந்த ராதா நகர் கடற்கரை. இங்கு தெளிவான நீல நிறத்திலும், பச்சை நிறத்திலும் அழகாக இருக்கின்றன. இங்குள்ள செறிவான கடல் வளத்தின் காரணமாக நாம் ஜெல்லி மீன்கள், ஆமைகள் மற்றும் வண்ண வண்ண மீன்களை காண முடியும். எப்படி என்கிறீர்களா? இந்த கடற்கரையில் ஆள் கடல் நீச்சல் எனப்படும் ஸ்குபா டைவிங் மிகப்பிரபலம். அதன் மூலம் இங்கு கடலுக்கடியில் சென்று கைக்கு எட்டும் தூரத்தில் விசித்திரமான கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம். புதுமையாக இந்த புத்தாண்டை கொண்டாட நினைப்பவர்கள் அவசியம் ஹேவ்லாக் தீவில் இருக்கும் இந்த ராதா நகர் கடற்கரைக்கு வாருங்கள்.

ஓம் பீச், கர்நாடகா:

Photo: Anusha Ramakrishnan

ஓம் என்ற சொல்லின் இந்தி எழுத்தான ॐ வடிவில் அமைந்திருப்பதால் ஓம் கடற்க்கரை என பெயர் பெற்ற இந்த அழகிய கடற்க்கரை கர்நாடகா மாநிலத்தில் கோகர்ணா என்னும் சிறிய ஊரில் அமைந்திருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கிருக்கும் அழகான கடற்கரை இன்னும் அதிக பிரபலம் அடையாதது என்றாலும் கூட்டமில்லாமல் நண்பர்களுடன் கடற்கரையில் விளையாடியபடி புத்தாண்டை துவக்க நல்ல இடம் இந்த ஓம் கடற்க்கரை ஆகும். பெங்களுருவில் இருந்து 250 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது.

Read more about: new year beaches party
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X